எலான் மஸ்க்: அணு ஆயுத குண்டுகளை செவ்வாய் கிரகத்தில் வீச வேண்டும்! ஏன் இப்படி சொன்னார் தெரியுமா?

|

பல விசித்திரமான யோசனைக்கு, பைத்தியக்கார யுக்திக்கும் பெயர்போனவர் தான் எலான் மஸ்க், இவர் மனதில் தோன்றும் சில வினோதமான எண்ணங்கள் மற்றும் யோசனைகள் தான் இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு உரிமையாளர்கள் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். எலான் மஸ்க்கிற்கு தற்பொழுது மிகவும் வினோதமான எண்ணம் ஒன்று தோன்றியுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் நூக்கிலியர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்

செவ்வாய்க் கிரகத்தில் நூக்கிலியர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டும்

எலான் மஸ்க்கிற்கு தோன்றியுள்ள அந்த வினோதமான யோசனை என்னவென்றால், செவ்வாய்க் கிரகத்தில் நூக்கிலியர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது தான். ஆமாம் சரியாகத் தான் வாசித்தீர்கள் அணு ஆயுத வெடிகுண்டுகளைச் செவ்வாய்க் கிரகத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது தான் அவரின் தற்போதைய யோசனை.

சும்மா பேச்சிற்கு சொல்லவில்லை

சும்மா பேச்சிற்கு சொல்லவில்லை

சும்மா பேச்சிற்கு அவர் சொன்னார் என்று எண்ணிவிட வேண்டாம், எலான் மஸ்க் எப்பொழுதும் அவர் யோசனைக்குப் பின்னால் தகுந்த பதிலையும் வைத்திருப்பார். பதில் இல்லாமல் இது போன்ற வினோதமான யோசனைகளை எப்பொழுது அவர் வெளியே சொல்லமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

<strong>தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்!</strong>தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்!

எப்படி மனிதர்களுக்கு சாதகமாக இருக்கும்?

எப்படி மனிதர்களுக்கு சாதகமாக இருக்கும்?

செவ்வாய்க் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய வேற்றுக்கிரகமாக மாற்றுவதற்கான முக்கிய தொடக்கமாக இந்த செயல் இருக்கும் என்று அவர் நம்புவதாகத் தனது யோசனையை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அணு ஆயுத குண்டுகளைச் செவ்வாய்க் கிரகத்தில் பயன்படுத்துவது எப்படி நமக்குச் சாதகமாக இருக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். பதிலைச் சொல்கிறேன் கேளுங்கள்.

மனிதர்கள் வாழக்கூடிய நிலை விரைவாக உருவாகும்

மனிதர்கள் வாழக்கூடிய நிலை விரைவாக உருவாகும்

செவ்வாய் கிரகம், அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டால், அதன் விளைவாகத் துருவ பனிக்கட்டிகள் உருகி, அதன் விளைவாக கார்பன் டை ஆக்சைடு வாயு கிரகத்தின் வளிமண்டலத்தில் வெளியேறும் என்று கூறப்படுகிறது. இதனால் கிரீன்ஹவுஸ் விளைவு செவ்வாய் கிரகத்தில் உருவாகும், இது கிரகத்தின் வெப்பநிலை மற்றும் விரைவான காலநிலை மாற்றத்திற்கு வழிவகுத்து மனிதர்கள் வாழக்கூடிய நிலையை விரைவாக உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

<strong>பிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்</strong>பிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்

இந்த யோசனை இவருக்கு எப்பொழுது தோன்றியது தெரியுமா?

இந்த யோசனை இவருக்கு எப்பொழுது தோன்றியது தெரியுமா?

இந்த பதிலுடன் தான் எலான் மஸ்க் இந்த யோசனையை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை இவருக்கு இப்பொழுது தான் தோன்றியது என்று நினைத்துவிடாதீர்கள். இந்த யோசனையை இதற்கு முன்பும் ஒரு முறை, எலான் மஸ்க் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2015 ஆம் ஆண்டு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்கின் ஆசை!

எலான் மஸ்க்கின் ஆசை!

எலான் மஸ்க் இன் இந்த யோசனையை, இப்பொழுது நடைமுறைப்படுத்தச் சாத்தியமில்லை என்றாலும், அவரின் இந்த எண்ணம் சற்றும் மாறவில்லை என்பதே உண்மை. செவ்வாய்க் கிரகத்தை மனிதனின் இன்னொரு கிரகமாக மாற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் அதிகம் ஆசைப்பட்டு வருகிறார். அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

<strong>இந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.!</strong>இந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.!

செவ்வாய் செல்ல ராட்சஸ ஸ்டார்ஷிப் ராக்கெட்

செவ்வாய் செல்ல ராட்சஸ ஸ்டார்ஷிப் ராக்கெட்

மனிதர்களைச் செவ்வாய் கிரகத்திற்குக் கொண்டு செல்லும் ராட்சஸ ஸ்டார்ஷிப் ராக்கெட்களையும் அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. நாசாவும் கூட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்களை 'மூன் மிஷன்' மற்றும் தனது 'மார்ஸ் மிஷன், திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று ஆர்வம் காட்டி வருகிறது.

Best Mobiles in India

English summary
Elon Musk Wants To Throw nuclear bombs on Mars! Do you know why he said this : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X