கேப்புல நடந்த கிடா வெட்டு.. அமெரிக்கா கிட்ட காசு வாங்கிட்டு Elon Musk செய்து கொடுத்த "ரகசிய" வேலை!

|

ட்விட்டர் நிறுவனத்தை "வச்சி செய்யும் கேப்பில்" அமெரிக்க அரசாங்கத்திற்கு (United States) ஏதுவான ஒரு ரகசிய வேலையை கனகச்சிதமாக முடித்து கொடுத்துள்ளார் "நம்ம அண்ணன்" எலான் மஸ்க்!

அதென்ன வேலை? எலான் மஸ்க் (Elon Musk) ஏன் அமெரிக்காவிற்காக வேலை செய்ய வேண்டும்? "சீக்ரெட்" என்று சொல்லும் அளவிற்கு, அமெரிக்கா (America) அப்படி என்ன வேலையை செய்து உள்ளது? இதோ விவரங்கள்:

சைலன்ட் ஆக.. செம்ம காசு பார்க்கும் எலான் மஸ்க்!

சைலன்ட் ஆக.. செம்ம காசு பார்க்கும் எலான் மஸ்க்!

உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஒரே ஒரு நிறுவனம் ட்விட்டர் (Twitter) மட்டுமல்ல.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னரே பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்து இருந்தாலும் கூட, எலான் மஸ்க்கின் கீழ் பல நிறுவனங்கள் இயங்குகிறது.

அதில் மிகவும் முக்கியமான மற்றும் "செம்மையாக காசு பார்க்கும்" ஒரு நிறுவனம் என்றால் அது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தான்.

அப்படியான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, வேறு யாரும் இல்லை, நம்ம அண்ணன் எலான் மஸ்க் தான்!

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.. ஒரு ஆல்-இன்-ஆல் அழகு ராஜா!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.. ஒரு ஆல்-இன்-ஆல் அழகு ராஜா!

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை ஒரு "ஆல்-இன்-ஆல் அழகு ராஜா" என்றே கூறலாம். ஏனென்றால் இது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும்.

இது ஸ்பேஸ்கிராஃப்ட்களை (Spacecraft) உற்பத்தி செய்யும். அதே சமயம் இதுவொரு லான்ச்சர் (Launcher) ஆகவும் செயல்படும்; அதாவது சொந்த ராக்கெட்களை வைத்து மற்ற நாடுகளின் செயற்கைகோள்களை விண்வெளிக்குள் செலுத்த உதவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இதுவொரு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு (Satellite communications corporation) நிறுவனமும் ஆகும்.

இந்த இடத்துல தான்.. அமெரிக்கா 'என்ட்ரி' கொடுக்குது!

இந்த இடத்துல தான்.. அமெரிக்கா 'என்ட்ரி' கொடுக்குது!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆன ஃபால்கன்-ஹெவியை (Falcon Heavy) பயன்படுத்தி தங்களுடைய ரகசிய செயற்கைகோள் (Secret Satellite) ஒன்றை விண்ணில் செலுத்தும் வேலையை, அமெரிக்க அரசாங்கம் எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்க.. அதை அவர் கனகச்சிதமாக முடித்து கொடுத்துள்ளார்!

நேற்று அதிகாலை (அதாவது ஜனவரி 16 ஆம் தேதி) ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் (Kennedy Space Center) இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வழியாக, அமெரிக்காவின் ரகசிய செயற்கைகோள் ஒன்று வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டது!

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

அந்த ரகசிய செயற்கைகோளின் வேலை என்ன?

அந்த ரகசிய செயற்கைகோளின் வேலை என்ன?

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் வழியாக விண்வெளிக்குள் செலுத்தப்பட்ட செயற்கைகோள் ஆனது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்பேஸ் ஃபோர்ஸுக்காக (United States Space Force) வேலை செய்யப்போகும் ஒரு செயற்கைகோள் ஆகும்.

இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 35,000 கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள புவிசார் சுற்றுப்பாதைக்குள் (Geostationary orbit) செலுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைகோளின் முக்கிய வேலையே, மூத்த தலைவர்கள் மற்றும் போர் தளபதிகளுக்கு இடையேயான செயற்கைக்கோள் வழியிலான தகவல் தொடர்புகளை வழங்குவதே ஆகும்.

இப்போது உங்களுக்கே புரிந்து இருக்கும் அமெரிக்கா என்கிற "ஜாடி"க்கு. நம்ம அண்ணன் எலான் மஸ்க் தான் சரியான "மூடி" என்று!

1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 27 எஞ்சின்கள்!

1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 27 எஞ்சின்கள்!

இது மிகவும் முக்கியமான செயற்கைகோள் என்பதால் தான், அமெரிக்க அரசாங்கம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை தேர்வு செய்துள்ளது போல!

ஏனென்றால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி ராக்கெட், உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆப்ரேஷனல் ராக்கெட்டுகளில் (Most powerful operational rocket) ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல ஃபால்கன் ஹெவி ராக்கெட்டால் கிட்டத்தட்ட 64 மெட்ரிக் டன்களை சுற்றுப்பாதைக்குள் செலுத்த முடியும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்.. இந்த ராக்கெட்டால் பதினெட்டு 747 விமானங்களுக்கு சமமான எடையை சுமந்து செல்ல முடியும்.

ஏனென்றால் 1 அல்ல, 2 அல்ல.. இந்த ராக்கெட் மொத்தம் 27 மெர்லின் என்ஜின்களால் (27 Merlin engines) இயக்கப்படுகிறது!

Photo Courtesy: SpaceX, NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
Elon Musk Sent A Secret Satellite For United States Space Force Using His SpaceX Rocket

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X