செவ்வாய்க்கு டூர் போகலாம் எலான் மஸ்க் அதிரடி.!!

By Meganathan
|

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மலையேறி விட்டது. இன்று மனிதன் நிலாவை கடந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல திட்டமிட்டு அதற்கான நேரத்தையும் குறித்து வைத்து விட்டான். அனைத்தும் திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் பூமியை தொடர்ந்து நம்மால் செவ்வாய் கிரகத்திற்கும் சென்று வர முடியும்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ எலான் மஸ்க், கோடு 2016 என்ற நிகழ்வில் தன் நிறுவனம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு 2024 ஆம் ஆண்டு வாக்கில் கூட்டி சென்று 2025 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1

1

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டிடம் சார்ந்த திட்டத்தினை செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச விண்வெளி மாநாட்டில் தெரிவிக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

2

2

அதிகளவு மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வதற்கு அதிகப்படியான கார்கோ போன்றவைகளை எடுத்து செல்வதில் சிக்கல் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

3

3

செவ்வாய் கிரகத்தில் நகரத்தினை உருவாக்க பல லட்சம் டன் அளவு கார்கோ தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

4

4

இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் விண்வெளிக்கு தானே செல்ல இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறுவது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

5

5

ஹாத்ரோனை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் ஆளில்லா டிராகன் பதிப்பு 2 விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு 2018 ஆம் ஆண்டு வாக்கில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.

6

6

இந்த திட்டத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் அதிக பயணிகளை பாராஷூட் அல்லது மற்ற ஏரோடைனமிக் டீசலேட்டர் இல்லாமல் தரையிறங்க செய்வதன் முன்னோட்டமாக இருக்கும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.

7

7

இந்த திட்டம் வெற்றிபெற இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அனைத்தும் திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் செவ்வாய் கிரகத்தினை 2024 ஆம் ஆண்டு சென்று 2025 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பி வர முடியும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

8

8

நாசா தரப்பில் ரெட் டிராகன் செவ்வாய் கிரக திட்டத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

9

9

இந்த திட்ட வடிவமைப்பு, விண்வெளியில் இருந்து தரவுகளை டிராக் செய்வது மற்றும் தரவுகளை பகிர்ந்து கொள்வது போன்றவைகளில் நாசா ஒத்துழைப்பு வழங்க ஒப்பு கொண்டுள்ளது.

10

10

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற தேவைப்படும் அனைத்து வித தொழில்நுட்பங்களையும் உருவாக்கம் நோக்கத்துடன் 2002 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Elon Musk Said SpaceX Will take People To Mars In 2024 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X