Home
Scitech

செவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை என்ன தெரியுமா? ரிட்டர்ன் டிக்கெட் இலவசமா?

மனிதர்கள் ரெட் பிளானட்டிற்கு குடிபெயர முடிவு செய்தால், செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு செலவாகும் என்பதை எலோன் மஸ்க் தற்பொழுது அறிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு வரை செவ்வாய் கிரகத்திற்கு, மனிதர்கள் சென்று அங்கு வாழ்வதென்பது சாத்தியமே இல்லாத காரியம் என்று பல அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தெரிவித்து வந்துள்ளனர்.

அறிவியல் புனைகதையின் அடிப்படையில் இயக்குநர் ரிட்லி ஸ்காட், உருவாக்கிய மார்ட்டின் திரைப்படம் உண்மைக்கு அப்பாற்பட்டு மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழலாம் என்று தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அனைவரும் செவ்வாயில் வாழ வேண்டும் என்று எண்ணினர்.

ரெட் பிளானட்

ரெட் பிளானட்

மனிதர்கள் ரெட் பிளானட்டிற்கு குடிபெயர முடிவு செய்தால், செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு செலவாகும் என்பதை எலோன் மஸ்க் தற்பொழுது அறிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் அணைத்து பெருமையும் டெஸ்லா மாற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கே சாரும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

செவ்வாய் கிரகத்திற்கு டிக்கெட்

செவ்வாய் கிரகத்திற்கு டிக்கெட்

செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் டெஸ்லா நிறுவனம் இணைந்து நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் விலையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பேலன்ஸ்களை ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல் பயண டிக்கெட்

முதல் பயண டிக்கெட்

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் பயண டிக்கெட்டை, முதல் முதலில் பெற்றவர் எலோன் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான ஒரு காலணியை உருவாக்கப்போவதாக எலோன் மஸ்க் 2016 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் செவ்வாய் கிரகத்தில் மிகக் குறைவு என்று நாசா அறிவித்த பின்பும் எலோன் மஸ்க் தனது முயற்சியைக் கைவிடவில்லை.

செவ்வாய் திட்டம்

செவ்வாய் திட்டம்

பல அறிஞர் மற்றும் விஞ்ஞானிகளின் விமர்சனங்களுக்குப் பின்பு 2017 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தத் துவங்கினார். தற்பொழுது அதற்கான பலனை நேரில் கண்ட எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கான டிக்கெட் விலையை அறிவித்துள்ளார்.

டிக்கெட் விலை

டிக்கெட் விலை

எலோன் மஸ்க்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் ஷேர் செய்யப்பட்ட டிவீட்டில், செவ்வாய் கிரகத்திற்கான டிக்கெட் விலை 500,000 டாலருக்கும் குறைவு என்று அவர் தெரிவித்துள்ளார். விண்வெளியில் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கு மக்கள் அதிகப்படியாக 500,000 டாலர் மற்றும் 100,000 டாலர் என்ற குறைந்த விலையில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுமென்று எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்திய விலை

இந்திய விலை

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்பும் மனிதர்கள் 500,000 டாலர் செலவு செய்து டிக்கெட்டை வாங்கிக்கொள்ளும்படி அறிவித்துள்ளார், இந்திய மதிப்பின்படி இந்த டிக்கெட்டின் விலை ரூ.3,52,97,500 என்பது குறிப்பிடத்தக்கது.

 செவ்வாயில் வீடு வாங்க தயாரா?

செவ்வாயில் வீடு வாங்க தயாரா?

அத்துடன் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமி திரும்பும் ரிட்டர்ன் டிக்கெட் முற்றிலும் இலவசம் என்றும் அவர் அறிவித்துள்ளார். பூமியில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை விற்பனை செய்துவிட்டு, செவ்வாயில் வீடு வாங்குவதற்குத் தயாராகுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Reveals How Costly A Ticket To Mars Could Possibly Be : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X