இண்டர்நெட் வசதிக்காக 1500 செயற்கைகோள்களை அனுப்பும் எலன் மஸ்க்!

இந்த மைக்ரோ சாட்டிலைட்கள் ஒன்றிணைந்து ஒரு வலையமைப்பை உருவாக்கி விண்ணில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பூமிக்கு அதிவேக இண்டர்நெட்-ஐ அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

|

செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முக்கியமாக கவனம் செலுத்திவரும் நிலையில், அதன் ஸ்டார்லிங் திட்டத்தின் மூலம் உலகின் இண்டர்நெட் -ஐயும் மேம்படுத்த முயற்சித்துவருகிறது. மற்றும் தற்போது அந்த நோக்கத்தை அடையும் முயற்சியின் ஒருபகுதியாக அந்நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இண்டர்நெட் வசதிக்காக 1500 செயற்கைகோள்களை அனுப்பும் எலன் மஸ்க்!

புவி சுற்றுவட்டப்பாதைக்கு 1,584 செயற்கைக்கோள்களை அனுப்பும் இந்த தனியார் விண்வெளி நிறுவனத்தின் திட்டத்தை அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) அங்கீகரித்துள்ளது. இந்த மைக்ரோ சாட்டிலைட்கள் ஒன்றிணைந்து ஒரு வலையமைப்பை உருவாக்கி விண்ணில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பூமிக்கு அதிவேக இண்டர்நெட்-ஐ அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

15 மில்லி வினாடிகளில் சிக்னல்களை பூமிக்கு அனுப்பும்

15 மில்லி வினாடிகளில் சிக்னல்களை பூமிக்கு அனுப்பும்

ஏனெனில் இந்த செயற்கைக்கோள்கள் அத்தகைய ஒரு குறைந்த சுற்றுவட்டப்பாதையில் இருப்பதால், அவை வெறும் 15 மில்லி வினாடிகளில் சிக்னல்களை பூமிக்கு அனுப்பும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உண்மையான திட்டமான புவி சுற்றுவட்டப்பாதையில் 4425 சாட்டிலைட்களை நிலைநிறுத்துவதை காட்டிலும், இதில் குறைவான சாட்டிலைட்கள் மூலம் அதே திட்டத்தை நிறைவேற்றமுடியும். பூமியின் விண்வெளி குப்பை பிரச்சனையை குறைப்பதில் இந்நிறுவனத்தின் பங்களிப்பில் இது ஒரு முக்கிய படி ஆகும்.

அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்

அடுத்த தலைமுறை செயற்கைக்கோள்

" அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் தொகுப்பை உருவாக்கி, நம்பகமான மற்றும் மலிவுவிலை பிராட்பேண்ட் சேவை மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களை இணைக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் திட்டத்தை எப்சிசி நம்புவதன் அடையாளமாக இதற்கு ஒப்புதல் அளித்து ஆதரிக்கிறது" என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன தலைவர் க்வைனி ஷாட்வெல் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.

ஒன்வெப் மற்றும் கெப்ளர்

ஒன்வெப் மற்றும் கெப்ளர்

இருப்பினும் ஒன்வெப் மற்றும் கெப்ளர் போன்ற மற்ற போட்டியாளர்கள் இதுகுறித்து மகிழ்ச்சியாக இல்லை. எதிர்காலத்தில் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை தொடங்குவதற்கான தங்கள் சொந்த திட்டங்களுக்கு இடையூறாக இந்த தாழ்வாக பறக்கும் செயற்கைக்கோள்கள் இருக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர்.எனினும் எப்சிசி வெறும்1500 செயற்கைக்கோள்கள் மோதல்களுக்கான ஆபத்தை அதிகரிக்காது என்று வலியுறுத்தியுள்ளது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்

முதல் சில ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டே சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இன்னும் விரைவில் பல செயற்கைகோள்கள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் அமேசான் நிறுவனமும் இந்த களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது. உலகிற்கு இண்டர்நெட் வசதியை வழங்கும் பொருட்டு 3,000 செயற்கைக்கோள்களுக்கும் மேலாக புவிசுற்றுப்பாதைக்கு அந்நிறுவனமும் திட்டமிட்டுள்ளது.

விரைவில்

விரைவில்

உண்மையில் நாம் இணைய வேகத்தின் உச்சமாக வரையறுக்கப்பட்ட ஒரு காலத்திற்கு விரைவில் நுழையவுள்ளோம்.

Best Mobiles in India

English summary
Elon Musk Just Got Permission To Put 1,500 Satellites In Space To Beam Down Internet On Earth: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X