Elon Musk உருவாக்கிய புதிய பேங்கர் EDM டிராக்! லிஸ்டில் இது புதுசா இருக்கே!
எலான் மஸ்க் உண்மையிலேயே அனைத்து வர்த்தகங்களின் தனிக்காட்டு ராஜா தான், அவர் தனது முயற்சியில் சொந்த கட்டண-நுழைவாயில் அமைப்பைத் தொடங்கியதிலிருந்து, மக்கள் விரும்பும் மின்சார கார்கள் மற்றும் சொந்தமாகத் தரையிறங்கும் ராக்கெட்டுகள் வரை அனைத்தையும் தனது பட்டியலில் சேர்த்துவைத்துள்ளார். இப்போது, இந்த பட்டியலில் புதிதாக EDM கலைஞரையும் சேர்த்துள்ளார் எலான் மஸ்க்.

EDM கலைஞர் என்று உலகிற்கு அடையாளம்
எலோன் மஸ்க் ஒவ்வொரு முறையும் இயல்புநிலையில் உள்ள விதிமுறைகளை மீறி, பல விசித்திரமான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்வதில் கெட்டிக்காரர் என்று பாராட்டப்படுபவர். எலோன் மஸ்க்-ன் பல விசித்திரமான முயற்சிகளிலிருந்து, ஒருபடி சற்று முன்னேறிச் சென்று, தன்னை தானே ஒரு EDM கலைஞர் என்று உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்.

ஹராம்பே கொரில்லாவுக்காக முன்பு பாடல் பாடியுள்ளார்
எலோன் மஸ்க் தனது சொந்த முயற்சியில் தானே எழுதிய, புதிய EDM தளத்தில் உருவான ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இது வினோதமாகத் தெரிந்தாலும், இதுவே உண்மை. இதேபோல் கடந்த ஆண்டு எலோன் மஸ்க், ஹராம்பே கொரில்லாவுக்காக "RIP Harambe" என்ற பாடலை எழுதிப் பாடினார், ஆனால் இது ஹிப் ஹாப் தளத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்-ன், டோன்ட் டவுட் யுவர் வைப்
இந்த முறை எலான் மஸ்க் உருவாக்கியுள்ள புதிய பாடலின் பெயர் "டோன்ட் டவுட் யுவர் வைப்" (Don't doubt your vibe), இந்த பாடலை அவர் EDM தளத்தில் உருவாக்கியுள்ளார். EDM என்பது எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் (electronic dance music) என்று பொருள். தற்பொழுது எலான் மஸ்க் உருவாக்கியுள்ள இந்த பாடல் குறித்த தகவல்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் உருவாக்கியுள்ள பாடலில் ஒரு சிறப்பும் ஒளிந்துள்ளது.

பாடலில் ஒளிந்துள்ள சிறப்பு என்ன தெரியுமா?
எலான் மஸ்க் எழுதி உருவாக்கியுள்ள இந்த பாடல், நான்கு நிமிட நீள பாடலாக உள்ளது, அதிலும் இதில் வெறும் நான்கு வாக்கியங்கள் மட்டும் இருக்கிறது. "Don't doubt your vibe, because its true; Don't doubt your vibe, because it's you!", என்ற நான்கு வைக்கியங்களை மட்டுமே கொண்டு எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் உடன் பாடப்பட்டுள்ளது.

எமோ ஜி ரெக்கார்ட் சவுண்ட் கிளவுட்
ஸ்பேஸ் மீது ஆர்வம் கொண்ட அவரின் பாடலும் கூட, ஸ்பேஸ் மியூசிக் இசையில் ஈர்க்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் பாடலின் பீட்கள் மிக வேகமாக இல்லை, இருப்பினும், அவற்றின் வேகத்தில் மீறுகின்றன மற்றும் இசையில் வலுவான Sci-fi கருவைக் கொண்டுள்ளதை உணர முடிகிறது. இந்த பாடல் எமோ ஜி ரெக்கார்ட் (Emo G Records) சவுண்ட் கிளௌடில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய EDM கலைஞர்
இதற்கு முன்பு "RIP Harambe" பாடலையும் எலான் மஸ்க், எமோ ஜி ரெக்கார்ட்ஸில் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.எலான் மஸ்க், தன்னை புதிய EDM கலைஞர் என்பதை அடையாளம் காட்டி, தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புதிய பாடலை நீங்கள் இந்த சவுண்ட்க்ளூட்டில் இருந்து இலவசமாகக் கேட்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இலவசமாக இந்த பாடலை உலகத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எலான் மஸ்க். இந்த பாடலை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்கள்.இந்த பாடலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எலோன் அதிக இசையை உருவாக்க வேண்டுமா அல்லது வேகமான மின்சார கார்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் போதுமா? என்று உங்களின் கருத்துக்களைக் கீழே பதிவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








