வானிலை மாற்றம்!பேராபத்தை விளைவிக்கும் எல்நினோ.!

|

எல்நினோ எனப்படும் வானிலை மாற்றம் இதற்கு முன்னர் ஆபத்தானதாக இருந்திருந்தால், அவை எதிர்காலத்தில் குறிப்பாக அழிவுகரமானதாக மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடுமையானதாகவும், கணிக்க முடியாதவையாகவும் இருந்த இது சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த இயற்கை வானிலை நிகழ்வுகள் இப்போது இன்னும் பெரிய உச்சநிலைக்கு மாறவுள்ளன என்பதைக் குறிக்கிறது.


காட்டுத்தீ

காட்டுத்தீ

மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை தொழில்துறை அளவிற்கு எரிக்கத் தொடங்கியதிலிருந்து, கடந்த 7,000 ஆண்டுகளின் பதிவுகள், வெப்ப அலைகள், காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம் மற்றும் எல் நினோவுடன் தொடர்புடைய பயங்கர புயல்கள் மிகவும் மோசமாக அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.

பூமி மற்றும் வளிமண்டல விஞ்ஞானி

பூமி மற்றும் வளிமண்டல விஞ்ஞானி

இது நேரடியாக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாக தெரியாதநிலையில், நம்மிடம் உள்ள நமக்கு தெரிந்த வரலாற்றிலிருந்து, இவை இரண்டின் அம்சங்களும் சந்தேகத்திற்குரியதாக தெரிகிறது.


"கடந்த 50 ஆண்டுகளில் நாம் காண்பதெல்லாம் எந்தவொரு இயற்கை மாறுபாட்டிற்கும் புறம்பானது. "இது அடிப்படைகோட்டை தாண்டி குதித்துள்ளது. உண்மையில் தொழில்துறை யுகத்தின் முழு காலத்திற்கும் இதை காண்கிறோம்." என்று ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பூமி மற்றும் வளிமண்டல விஞ்ஞானி கிம் கோப் கூறுகிறார்.

எல் நினோ சதர்ன் ஆஸிலேசன்

எல் நினோ சதர்ன் ஆஸிலேசன்

காலநிலை விஞ்ஞானிகள் புவி வெப்பமடைதலுக்கும் எல் நினோவிற்கும் இடையில் காரண விளைவு இருப்பதாக நீண்டகாலமாக சந்தேகிக்கின்றனர். ஆனால் சில ஆய்வுகள் வளர்ந்து வரும் புவி வெப்பநிலையுடன் வலுவான மற்றும் நீண்ட நிகழ்வுகளைக் காட்டியுள்ள நிலையில், மற்றவை இதற்கு நேர்மாறாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.


எல் நினோ சதர்ன் ஆஸிலேசன் (ENSO) என்பது இயற்கையான வானிலை சுழற்சியாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமத்திய ரேகை பசிபிக் கடலை வெப்பமாக்கி குளிர்வித்து, பெரிய அளவிலான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஊசல் எப்போது, ​​எங்கு, எப்படி ஊசலாடும் என்று கணிப்பது மிகவும் கடினம் என்பதை நிரூபித்துள்ளது.

சம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளேசம்பளம்: ரூ.1 லட்சம்., வேலை: தூக்கம்: விவரம் மற்றும் வேலை லிங்க் உள்ளே

ENSO அளவீடுகள்

ENSO அளவீடுகள்

வழக்கமாக ஒவ்வொரு இரண்டு முதல் ஏழு வருடங்களுக்கும் மேலாக, எல் நினோ நிகழ்வுகள் உலகளாவிய மேற்பரப்பு வெப்பநிலையில் சுருக்கமான உச்சத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. அதே நேரத்தில் லா நினா நிகழ்வுகள் எதிர் குளிரூட்டும் விளைவைத் தூண்டும்.


இருப்பினும் நம்பகமான ENSO அளவீடுகள் ஒரு நூற்றாண்டுக்கு மட்டுமே உள்ளதால், இந்த மாற்றங்கள் 'இயல்பானவை' என்பதை தீர்மானிக்க கடினமாக உள்ளது.

கிழக்கு பசிபிக்

கிழக்கு பசிபிக்

அதிர்ஷ்டவசமாக மரத்தின் வளையங்களை போலவே, பவளக் காடுகளும் கடந்த கால பதிவுகளை வைத்திருக்கின்றன. வாழும் பவளம் மெதுவாக கால்சியம்-கார்பனேட் அடுக்குகளை அதன் கடினமான மேல் ஓட்டில் சேர்ப்பதால், ஒவ்வொரு குழுவிலும் உள்ள வேதிப்பொருட்கள் நீண்ட காலத்திற்கு முன்பு இருந்த பெருங்கடலின் வளர்ச்சியை அறிய உதவுகின்றன.


முந்தைய காலநிலைகளுக்கு பவளத்தை ஒரு மாற்றாக பயன்படுத்துவதன் மூலம் நடைபெற்ற சமீபத்திய பகுப்பாய்வு, எல் நினோ நிகழ்வுகள் ஏற்கனவே பசுமைஇல்ல வெப்பமயமாதலுடன் தீவிரமடைந்து வருவதாகக் கூறுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பவளத்தைப் பற்றிய ஒரு ஆய்வில், கிழக்கு பசிபிக் எல் நினோ நிகழ்வுகள் குறைவானதாகிவிடடதாகவும் ,ஆனால் கடந்த நான்கு நூற்றாண்டுகளை விட கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம்

ஒரு மாதத்திற்கு அல்லது அதற்கு முன்னர், கடந்த நூற்றாண்டின் 33 நிகழ்வுகளைப் பற்றிய ஒரு ஆய்வில், 1970 களின் பிற்பகுதியிலிருந்து மத்திய பசிபிக் எல் நினோ பசிபிக் கடலின் வெப்பமான பகுதியில் உருவாகத் தொடங்கியிருப்பதால், உச்ச தீவிரத்தை அடையும் அபாயத்தை அதிகரித்ததுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் இந்த தீவிரத்தை ஏற்படுத்துகிறதா என்பது முற்றிலும் வேறு விஷயம். எல் நினோ நிகழ்வுகள் காலநிலை நெருக்கடியின் மோசமான நிலையை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. ஆனால் காலநிலை மாற்றம் எப்படியாவது எல் நினோவையும் அதிகரிக்குமா?

Best Mobiles in India

English summary
El Niño Weather Events Are Looking Increasingly Dangerous as The Climate Changes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X