Home
Scitech

சூரியனை விட அதிக வெப்பமான நட்சத்திரங்கள்: ஒன்னு இல்ல எட்டு- புனே விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு!

புனேவை தலைமையிடமாகக் கொண்டு ரேடியோ வானியற்பியல் தேசிய மையம் செயல்பட்டு வருகிறது. ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் விஞ்ஞானிகள் மிகவும் அரிதான எட்டு நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கின்றனர். இதுகுறித்த செய்தி குறிப்பில் என்சிஆர்ஏ குழு ஜிஎம்ஆர்டி-ஐ பயன்படுத்தி கடந்த காலத்தில் இதேபோல் மூன்று நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை அறியப்பட்ட மொத்தம் 15 எம்ஆர்பிகளில் 11 ஜிஎம்ஆர்டி மூலமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎம்ஆர்டி மூலம் கண்டுபிடிப்பு

ஜிஎம்ஆர்டி மூலம் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 15 எம்ஆர்பிகளில் 11 ஜிஎம்ஆர்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் எட்டு 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎம்ஆர்டி என்பது மாபெரும் அதிதொழில்நுட்பம் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி ஆகும். மேம்படுத்தப்பட்ட ஜிஎம்ஆர்டி ஆனது பரந்த அலைவரிசை மற்றும் அதிக உணர்திறனைக் கொண்டுள்ளது.

ராட்சத மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப்

புனேவில் உள்ள வானியலாளர்கள் குழு ராட்சத மெட்ரேவேவ் ரேடியோ டெலஸ்கோப் (ஜிஎம்ஆர்டி) மூலம் சூரியனை விட அதிக வெப்பமான அரிய எட்டு ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் வகை நட்சத்திரங்களை கண்டுபிடிப்பக்கப்பட்டுள்ளதாக முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான என்சிஆர்ஏ தெரிவித்துள்ளது. புனேவை தளமாகக் கொண்ட தேசிய வானொலி வானியற்பியல் மையத்தின் (என்சிஆர்ஏ) வானியலாளர்கள் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, வழக்கத்திற்கு மாறான வலுவான காந்தப்புலங்கள் மற்றும் மிகவும் வலுவான நட்சத்திர காற்றுடன் கூடிய சூரியனை விட வெப்பமான அரிய வகை ரேடியோ நட்சத்திரங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு

என்சிஆர்ஏ, ஜிஎம்ஆர்டியை பயன்படுத்தி கடந்த காலத்தில் இதேபோன்று மூன்று நட்சத்திரங்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும் ஜிஎம்ஆர்டி ஆனது பரந்த அலைவரிசை மற்றும் அதிக உணர்திறன் அம்சத்தோடு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் ஆனது எம்ஆர்பிகளின் மர்மத்தை தீர்க்கும் நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.

50-1420 மெகா ஹெர்ட்ஸ் வேகம்

ஜிஎம்ஆர்டி மூலம் மிகவும் அரிதான ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் வகையை சேர்ந்த எட்டு நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜிஎம்ஆர்டி புனேவில் இருந்து 80 கிமீ தொலைவில் இருக்கும் கோடாத் என்ற இடத்தில் இருந்து 150-1420 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி வரும் ரேடியோ தொலைநோக்கி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 45 மீட்டர் விட்டம் கொண்ட 30 ஆண்டெனாக்களை கொண்டிருக்கிறது. ஜிஎம்ஆர்டி திட்டத்தின் வெற்றியாகவே இந்த கண்டுபிடிப்புகள் கருதப்பட்டு வருகிறது. இது காந்த மண்டலங்களை குறித்த அரிய பேருதவியாக இருந்து வருகிறது என என்சிஆர்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட எம்ஆர்பி-கள் சூரியனை விட அதி வெப்பத்தை கொண்டவையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது வழக்கத்திற்கு மாறான வலுவான காந்தப்புலங்களையும் காற்றையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவைகளை கலங்கரை விளக்கம் போன்ற பிரகாசமான ரேடியோ துடிப்புகளை வெளியிடுகின்றன என ஆராய்ச்சி அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎம்ஆர்டியின் அதிக உணர்திறன்

ஜிஎம்ஆர்டியின் அதிக உணர்திறன்

இதுபோன்ற முதல் நட்சத்திரம் (எம்ஆர்பி) 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். இது மேம்படுத்தப்பட்ட ஜிஎம்ஆர்டியின் அதிக உணர்திறன் காரணமாகவே சமீபத்திய ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நட்சத்திரங்கள் 15-ல் 11 உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

கண்டுபிடிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிப்பு

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஜிஎம்ஆர்டி மூலம் கண்டுபிடிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது எம்ஆர்பி-கள் அரிதான பொருட்கள் இல்லையோ எனவும் இந்த நட்சத்திரங்கள் பொதுவானதாக இருக்கலாம் என கருதப்படுதவாத கூறப்படுகிறது. நட்சத்திரங்களில் ஏற்படும் ரேடியோ துடிப்புகள் ஆனது குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கண்டறிய முடியும். அதன் காரணமாகவே சிலவைகளில் குறிப்பிட்ட அளவிலான ரேடியோ அதிர்வெண்கள் மட்டுமே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட தொலைநோக்கி

உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட தொலைநோக்கியாக யுஜிஎம்ஆர்டி இருக்கிறது எனவும் இது உயர் உணர்திறன், உயர் தெளிவுத்திறன் படங்களை உருவாக்கும் திறன், பல்வேறு வகையான கதிர்வீச்சில் இருந்து துடிப்புள்ள சமிக்ஞையை மீட்டெடுப்பதில் உயர் செயல்திறன் கருவியாக இருக்கிறது என கூறப்படுகிறது. இது வானியலாளர்களின் குறிப்பிடத்தக்க சிரமங்களை குறைக்க உதவுகிறது. அதேபோல ஜிஎம்ஆர்டி உடனான ஆய்வில் ரேடியோ துடிப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை கண்டறிய காந்தப்புலம் மற்றும் வெப்பநிலை அளவுகள் பெரிதும் உதவியாக இருக்கிறது.

புனே வானியற்பியல் தேசிய மையம்

புனே வானியற்பியல் தேசிய மையம்

புனே வானியற்பியல் தேசிய மையத்தில் உள்ள மாபெரும் ரேடியோ தொலை நோக்கி மூலமாக இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் அரிதான 8 ரேடியோ பல்ஸ் உமிழ்ப்பான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் சூரியனைவிட அதிக வெப்பமானதாக உள்ளதாக கருதப்படுகிறது அதேபோல் இது கலங்கரை விளக்கம் போன்ற ரேடியோ துடிப்புகளை வெளியிடுகின்றன. எம்ஆர்பி என்ற பெயர் 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் இரண்டு முன்னணி ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி எம்ஆர்பி குறித்த மிக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

8 அரிய நட்சத்திரங்கள்

8 அரிய நட்சத்திரங்கள்

சூரியனை விட அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். வானியல் குறித்து தொடர்ந்து பல நாட்டு விஞ்ஞானிகளும் போட்டிப்போட்டுக் கொண்டு கண்டுபிடிப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி புனேவை தலைமையிடமாகக் கொண்ட ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தினர் தொடர்ந்து இந்தாண்டில் மட்டும் பல நட்சத்திரங்களை கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். இது மிகவும் அரிதான பல்ஸ் உமிழ்ப்பானகள் வகை நட்சத்திரங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆண்டி மட்டும் 8 அரிய நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

File Images

Source: livemint.com

Best Mobiles in India

English summary
Eight Rare Stars Found by Pune Astronomers in 2021 alone: Stars Most Hotter than Sun!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X