Subscribe to Gizbot

6-ஆம் வெகுஜென பேரழிவின் விளிம்பில் பூமி; முதல் 5 பேரழிவில் நடந்து என்ன.?

Written By:

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த டைனோசர்கள் இயற்கையாகவே அழிக்கப்பட்ட காலகட்டத்திற்கு பின்னர் பூமியின் சுற்றுப்புற சூழல் அமைப்புகள் மனிதர்களால் பெருமளவில் சேதப்படுத்தப்படுவதால் நாம் மிகப்பெரிய வெகுஜன அழிவுகளை எதிர்கொண்டு வருகிறோம்.

6-ஆம் வெகுஜென பேரழிவின் விளிம்பில் பூமி; முதல் 5 பேரழிவில் நடந்து என்ன

இந்நிலைப்பாட்டில் "உயிரியல் அழிவு" என்ற சகாப்தம் ஏற்கனவே நடைபெற தொடங்கிவிட்ட பட்சத்தில் நாம் செய்ய வேண்டியதென்பது மிகவும் சிறிது தான் என்னு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சரி வெகுஜன அழிவு என்றால் என்ன.? இதற்கு முன்னர் நிகழ்ந்த ஐந்து வெகுஜன அழிவின் பாதிப்புகள் என்ன.? அவைகளுக்கு காரணம் என்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பயிர்வகைகள் முடங்கக்கூடும்

பயிர்வகைகள் முடங்கக்கூடும்

தேசிய அகாடமி ஆஃப் சயின்ஸ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஆறாவது வெகுஜன அழிவு தற்போது நடைபெறுகிறது என்றும் இதன் விளைவாக நான்கில் மூன்று பங்கு பயிர்வகைகள் முடங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் முக்கியமான பங்களிப்பு

மனிதர்கள் முக்கியமான பங்களிப்பு

இதற்கு முன்பு நிகழ்த்த ஐந்து பெரிய அழிவுகளுமே பூமி இயற்கையாகவே ஏற்படுத்துக்கொண்டதால் நிகழ்ந்தவை என்பதும் தற்போதைய உயிரியல் அழிப்புக்கு மனிதர்கள் முக்கியமான பங்களிப்பு செய்கின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு ஆபத்தளிக்கும் வண்ணம்

பூமிக்கு ஆபத்தளிக்கும் வண்ணம்

உலகெங்கிலும் பல பொதுவான இனங்களை மதிப்பிடுவதின் மூலம் சமீபத்திய தசாப்தங்களில் அனைத்து தனி விலங்குகளிலும் 50 சதவிகிதம் வரை அழிவை கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. அதில் 30 சதவிகிதம் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனங்கள் மற்றும் நீர்நில வாழ்வனவைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவைகள் விரைவானதொரு அழிவை கண்டிருந்தாலும் தற்போது பூமிக்கு ஆபத்தளிக்கும் வண்ணம் இல்லாமல் இருந்தது.

விளைவுகள்

விளைவுகள்

இருப்பினும், அது இதர இனங்களின் அழிவுகளுக்கு ஒரு முன்னுரையாகவே இருக்கின்றன, எனவே புவியின் ஆறாவது வெகுஜன அழிவின் அத்தியாயம் பெரும்பாலான கருத்துக்களை உறுதி செய்யும் நோக்கில் தொடர்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த உயிரியல் அழிப்பு வெளிப்படையாக தீவிர சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி அந்த அறிக்கை முடிகிறது.

நேர்மறை விளைவுகளை வழங்காது

நேர்மறை விளைவுகளை வழங்காது

இந்த சரிவு நிறுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன ஆனால் நேர்மறை விளைவுகளை வழங்காது என்றும் அவர்கள் நம்புகின்றன. அப்படியாக, "மனித வாழ்வு உள்ளிட்ட இதர பல்லுயிர்களின் மீது இன்னும் சக்தி வாய்ந்த தாக்குதல்கள் நிகழ்வதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிகிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

தொடர்ச்சியான மக்கள்தொகை வளர்ச்சி

தொடர்ச்சியான மக்கள்தொகை வளர்ச்சி

பெரும்பாலும் வேட்டைகள், அன்னிய இனங்களின் படையெடுப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நச்சு மாசுபாடு ஆகியவற்றால் உயிரினங்களில் இறந்து போகின்றன. இருப்பினும், அனைத்திற்கும் பிரதான இயக்கமாக மனிதர்கள் திகழ்கிறார்கள். அதாவது மக்கள்தொகை மற்றும் தொடர்ச்சியான மக்கள்தொகை வளர்ச்சியும், அதீத நுகர்வு (குறிப்பாக பணக்கார வர்க்கத்தினால்) போன்றவைகள் பிரதான இயக்கியாக இருக்கின்றன.

"நேரம் மிகவும் குறுகியதாக உள்ளது"

1968 வெளியான புத்தகமான தி பாப்புலேஷன் பாம்ப் என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் ஆன பால் எர்லிச் "செயல்பட வேண்டிய நேரம் மிகவும் குறுகியதாக உள்ளது" என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

சரி இதற்கு முன்னர் நிகழ்ந்த பூமியின் வெகுஜென பேரழிவுகள் என்னென்ன.?

சரி இதற்கு முன்னர் நிகழ்ந்த பூமியின் வெகுஜென பேரழிவுகள் என்னென்ன.?

1. எண்ட்-ஆர்டோவிசியன் - சி 443 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு : புவியின் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய அழிவான இது ஐஸ் ஏஜ் காலத்தில் நிகழ்ந்தது - கடல் மட்டம் 100 மீட்டர் வீழ்ச்சியின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதில் 60-70 சதவிகித அனைத்து வகை உயிரினங்களும் அழிந்துள்ளது. அது பூமியில் வாழ்ந்த பெரும்பகுதி உயிரினங்கள் கடலில் இருந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

2. லேட் டெவோனியன் - சி 360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

2. லேட் டெவோனியன் - சி 360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் நான்கில் மூன்று பங்குகளை அழித்த இந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் உண்டாகியுள்ளது. மிக மோசமான பாதிப்புள்ள பகுதிகளாக கடல்கள் திகழ்கின்றன. திட்டுகள் கடினமாகி, கிட்டத்தட்ட அனைத்து பவளங்களும் மறைந்தே போன பேரழிவு இது.

3. பெர்மினியன் ட்ரையஸிக் - 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

3. பெர்மினியன் ட்ரையஸிக் - 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

'மகத்தான இறப்பு' என்று பெயரிடப்படும் இந்த உலகின் மூன்றாவது பரவலான அழிவானது, 96 சதவீத உயிரினங்களை அழித்தது. சைபீரியாவில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்புகள், கடுமையாக பூகோள வெப்பமயமாதல் இந்த அழிவுக்கு ஆதி காரணமாக நிகழ்ந்துள்ளன.

4. டிரையசிக்-ஜுராசிக் - சி 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

4. டிரையசிக்-ஜுராசிக் - சி 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

காலநிலை மாற்றம், ஒரு சிறுகோள் தாக்கம் மற்றும் வெள்ள பாதிப்பு வெடிப்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடிய இந்த பேரழிவானது பூமியிலுள்ள உயிரினங்களின் மூன்றில் ஒரு பகுதியை அகற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

5. கிரெடிசஸ்-டெர்டியரி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

5. கிரெடிசஸ்-டெர்டியரி - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

டைனோரசர்கள் அழிந்த காலம் என்று மிகப்பெரிய பரவலான அழிவாக நம்மால் அறியப்படும் இந்த தா அழிவு ஒரு மிகப்பெரிய உடுக்கோல் தாக்கத்தினால் ஏற்பட்டு பல தொன்மாக்களை அழித்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Earth’s sixth mass extinction is already underway, scientists have warned. Read more about this in Tamil Gizbot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot