இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

|

பூமியின் மிகப் பழைமையான நீர் ஆதாரம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் ஆதாரம் கனடாவின் டிம்மின்ஸ் நகரில் உள்ள கிட் க்ரீக் சுரங்கத்திற்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'பூமியின் மிகப் பழைமையான நீர்' என்று அழைக்கப்படும் இந்த நீர் ஆதாரம் சுமார் 1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த நீர் ஆதரம், செவ்வாய் கிரகத்தின் ஆழ் துளைகளுக்குள் உயிர்கள் மறைந்திருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தை இப்போது நம்ப வைத்துள்ளது. இது பற்றிய கூடுதல் உண்மைகளைப் பார்க்கலாம்.

மீண்டும் லோலரை அழைத்த சுரங்கம்

மீண்டும் லோலரை அழைத்த சுரங்கம்

1992 ஆம் ஆண்டில், 29 வயதான பெண் புவியியலாளர் பராபரா ஷெர்வுட் லோலர் என்பவர் கனடாவின் டிம்மின்ஸ் நகரில் உள்ள கிட் க்ரீக் சுரங்கத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, அவர் சுரங்கத்தை ஒரு அளவிற்கு மட்டுமே ஆராய்ந்து விட்டு வீடு திரும்பியிருக்கிறார். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியின் அதிசயத்தைக் கட்டவிழ்க்க அந்த சுரங்கம் மீண்டும் லோலரை அழைத்துள்ளது. இம்முறை சுரங்கத்திற்குள் சென்ற லோலர் வெறும் கையுடன் திரும்பி வரவில்லை. புதிய அதிசயத்துடன் திரும்பியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் புதிய கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் புதிய கண்டுபிடிப்பு

இது பூமியுடன் முடிந்துவிடும் ஒரு அதிசயமாக இல்லாமல், செவ்வாய் கிரகம் வரை நீண்டு செயல்படும் ஒரு கண்டுபிடிப்பாக மாறியுள்ளது.

இந்த மிகப் பழமையான நீருக்கான பயணத்தை லோலர் ஒரு மணிநேர பயணம் எடுக்கும் சுரங்கங்கள் வழியாகவும், பேட்டரி மூலம் இயங்கும் சுரங்க ரயில் சவாரிகள் மற்றும் கார்க்ஸ்ரூ வடிவ வளைவில் அமைந்துள்ள பல கடினமான வழிகளில் பயணம் செய்து கண்டறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான அறிவியல் ஆய்வகம்

உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான அறிவியல் ஆய்வகம்

பன்னாட்டு நிறுவனமான க்ளென்கோருக்குச் சொந்தமானது இந்த சுரங்கம் என்பதும், இது "உலகின் திரவங்கள் மற்றும் ஆழமான நுண்ணுயிரியலுக்கான மிக நீளமான மற்றும் ஆழமான அறிவியல் ஆய்வகங்களில் ஒன்று" என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த முறையை விடச் சுரங்கத்திற்குள் அதிக தூரம் லோலர் பயணித்துள்ளார். அவர் மேற்கொண்ட கடினமான பயணம் அவருக்குப் பூமியின் மிகப் பழமையான நீர் ஆதாரத்தை அடையாளம் காட்டியுள்ளது.

1.6 பில்லியன் ஆண்டு பழைமையான 'பூமியின் மிகப் பழைமையான நீர்'

1.6 பில்லியன் ஆண்டு பழைமையான 'பூமியின் மிகப் பழைமையான நீர்'

இம்முறை லோலர் புவியியல் ஆராய்ச்சியில் மிகப் பெரிய அற்புதமான கண்டுபிடிப்பாக கருதப்படும் 1.6 பில்லியன் நூற்றாண்டு பழைமையான 'பூமியின் மிகப் பழைமையான நீர்' உடன் திரும்பியுள்ளார். லொல்லர் சுரங்கத்தின் அடிப்பகுதியில் இருந்து இந்த நீர் மாதிரியைச் சேகரித்திருக்கிறார். லோலர் மூக்கு வழியாக அவர் கண்ட விசித்திரமான வாசனையைப் பின்தொடர்ந்து இந்த நீர் ஆதாரத்தை அவர் கண்டுபிடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

ஸ்பெக்ட்ரோமீட்டர் ஸ்கேல் ரீடிங் காட்ட முடியாமல் உடைந்தது

ஸ்பெக்ட்ரோமீட்டர் ஸ்கேல் ரீடிங் காட்ட முடியாமல் உடைந்தது

அந்த விசித்திரமான வாசனையை அவர் பாறை விரிசல்கள் மற்றும் பாறை முறிவுக்கு இடையில் நுகர்ந்து சென்று, இப்படி ஒரு நீர் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளார். சேகரிக்கப்பட்ட நீர் மாதிரி சோதனைக்குச் சென்று வந்த போது, ​​அதன் முடிவுகளைப் பற்றிக் கேட்க லோலர் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தார். இதற்கான சோதனையை மேற்கொள்ளப் பொறுப்பான ஆராய்ச்சியாளரை அவர் அழைத்து சோதனையை நடத்தியுள்ளார். சோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்துபோனார்கள், காரணம் அவர்கள் சோதனை செய்த ஸ்பெக்ட்ரோமீட்டர் ஸ்கேல் ரீடிங் காட்ட முடியாமல் உடைந்துவிட்டது.

1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்

1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான நீர்

எதிர்பார்த்ததை விட இது மிகவும் பழைமையானது, இது சரியாக இருக்க முடியாது என்று வியந்து ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இறுதியாக, நீர் ஆதாரம் சுமார் 1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு பற்றி டிசம்பர் 2016 இல் அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து லோலரின் கண்டுபிடிப்பு மீண்டும் வேகத்தை அடைந்துள்ளது, அவர் இப்போது ஒரு சமீபத்திய ஆய்வை மேற்கொண்டு அதற்கான முடிவை வெளியிட்டுள்ளார்.

எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வாய்பிளக்க வைக்கும் எடுக்கப்பட்டதே விண்வெளியில் இருந்துதான்: வாய்பிளக்க வைக்கும் "சூப்பர் மூன்" புகைப்படம்

உயிர் இருப்பதற்கான வாய்ப்பு தெளிவாக உள்ளது

உயிர் இருப்பதற்கான வாய்ப்பு தெளிவாக உள்ளது

அதில் அவர், நிலத்தடி நீர் அடையாளம் இருந்தால் அங்கு உயிர் இருப்பதற்கான வாய்ப்பு தெளிவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் புறப்பரப்புகளில் உயிர் இருப்பதற்கான தெளிவான சான்றுகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் நம்மை வழிநடத்தும் என்று அவர் இப்போது சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தடி நீர் இருப்பதன் விளைவாகச் செவ்வாய்க் கிரகத்தில் பல அரியப்படாத அம்சங்கள் மறைந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நம்ப முடியாத புதிய கோட்பாடு செவ்வாயில் புதிய திருப்பங்களை உருவாக்குமா?

இந்த நம்ப முடியாத புதிய கோட்பாடு செவ்வாயில் புதிய திருப்பங்களை உருவாக்குமா?

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருந்தது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நம்ப முடியாத புதிய கோட்பாடு பல புதிய திருப்பங்களை உருவாக்கக் கூடும் என்றும் நம்பப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், பல செவ்வாய்க் கிரக விண்கற்கள் பூமிக்கு அடியில் உள்ள பண்டைய தனிமைப்படுத்தப்பட்ட நிலத்தடி நீரில் காணப்பட்ட பாக்டீரியாக்களைத் தக்கவைக்கும் திறன் கொண்டவை என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவர் சொல்வது உண்மையானால், எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்

இவர் சொல்வது உண்மையானால், எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்

தற்போது 59 வயதான லோலரின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிர்களை பூமியின் மேற்பரப்பில் வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது, இது நமது கிரகத்தின் இருப்பை ஆழமாக ஊடுருவிச் செல்லும் ஒன்று என்று கூறியுள்ளார். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புகளை பில்லியன் ஆண்டுகள் பழமையான நீர் மாதிரியுடன் இணைக்கும் அவரது ஆய்வு ஏப்ரல் 2021 இல் ஆஸ்ட்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் சொல்வது உண்மையானால், இவரின் யூகித்தது போல் செவ்வாய் கிரகத்தில் அடிப்பகுதியில் நீர் இருந்தால், அதில் உயிர் அடையாளம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Earths Oldest Water Found Underneath Canadian Mine Could Lead to Secrets of Life on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X