பூமியின் 'இதயத் துடிப்பு' மனிதர்களை பாதிக்கிறதா? ஆராய்ச்சியில் வெளிவந்த திடுக்கிடும் ரிப்போர்ட்..

|

மனிதர்கள் இப்போது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேற்று கிரகங்களில் இருக்கும் மர்மங்களை அவிழ்க்க அயராது பாடுபட்டு வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் மனிதக்குலம் இன்னும் கண்டுபிடிக்காத பல மர்மங்களும், உண்மைகளும் நாம் வாழும் இந்த பூமியிலேயே இருக்கிறது. அதையே நாம் இன்னும் முழுமையாக அவிழ்க்கவில்லை என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை.

பூமி பற்றி நமக்கு தெரியாத மிகப் பெரிய உண்மை தான் 'பூமியின் இதயத் துடிப்பு'

பூமி பற்றி நமக்கு தெரியாத மிகப் பெரிய உண்மை தான் 'பூமியின் இதயத் துடிப்பு'

அப்படி இருக்கையில், பூமி பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு மிகப் பெரிய உண்மை என்னவென்றால், பூமிக்கும் நம்மைப் போன்று 'இதயத் துடிப்பு' இருக்கிறது. பூமி பற்றிய இந்த மர்மம் மனிதர்களுக்குத் தெரியாது. உதாரணமாக, நீங்கள் யாரிடமாவது இந்த கேள்வியைக் கேட்டுப் பாருங்கள், பூமிக்கு 'இதயத் துடிப்பு' இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது அறியாமல் இந்த கிரகத்தில் வாழும் நம் அனைவரையும் பாதிக்கும் என்கிறார்களே அது உண்மை தானா? என்று கேட்டுப்பாருங்கள்.

 பூமியின் இதயத் துடிப்பு எப்படி உருவாகிறது?

பூமியின் இதயத் துடிப்பு எப்படி உருவாகிறது?

சரி இப்போது, பூமியின் இந்த இதயத் துடிப்பு எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ளலாம். நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், நாம் வாழ்ந்து வரும் இந்த பூமியை ஒவ்வொரு விநாடியிலும் சுமார் 50 மடங்கு மின்னல்கள் தாக்குகிறது. இதனால், நாம் வாழும் கிரகத்தின் முழு கிரகத்தையும் உள்ளடக்கிய குறைந்த அதிர்வெண் மின்காந்த அலைகள் உருவாகின்றது.

புது போன் வாங்க சரியான நேரம்.. OnePlus 8T, OnePlus 8 Pro, Redmi 9 Prime, Galaxy M21 மீது பெஸ்டான ஆஃபர்..புது போன் வாங்க சரியான நேரம்.. OnePlus 8T, OnePlus 8 Pro, Redmi 9 Prime, Galaxy M21 மீது பெஸ்டான ஆஃபர்..

ஷுமன் ஒத்ததிர்வு (Schumann Resonances) என்றால் என்ன?

ஷுமன் ஒத்ததிர்வு (Schumann Resonances) என்றால் என்ன?

இவை ஷுமன் ஒத்ததிர்வு (Schumann Resonances) அல்லது பூமியின் இதயத் துடிப்பு என்று குறிப்பிடப்படுகின்றது, மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் இவை மனித நடத்தையைப் பாதிக்கும் என்று நம்புகிறார்கள். இதை கேட்கவே சற்று நடுக்கமாக தான் இருக்கிறது. இதை பற்றி விவரிவாக பார்க்கலாம்.

பூமியின் இதயத் துடிப்பு எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

பூமியின் இதயத் துடிப்பு எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

வின்பிரைட் ஓட்டோ ஷுமன் என்பவர் தான் முதன்முதலில் உலகளாவிய அதிர்வுகளைப் பற்றி கண்டுபிடித்தார். 1950 களின் நடுப்பகுதியில் உலகளாவிய அதிர்வுகளைப் பற்றிய பணிக்கு மரியாதை செலுத்துவதற்காக இதற்கு, வின்பிரைட் ஓட்டோ ஷுமனின் பெயரிடப்பட்டது. இது முதன்முதலில் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டது. 7.83 ஹெர்ட்ஸ் அடிப்படை அதிர்வெண்ணில் அலைகள் அதிக மற்றும் குறைந்த ஆற்றலுக்கு இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஆகையால், இந்த அதிர்வெண்களை ஆராய்ச்சியாளர்கள் 'பூமியின் இதயத் துடிப்பு' என்றும் குறிப்பிடத் துவங்கினர்.

ஹலோ.. Ola கஸ்டமர் கேரா சார்.. நம்பி பேசின பெண்ணிடம் ரூ. 52,260 அபேஸ்.. எப்படி தெரியுமா?ஹலோ.. Ola கஸ்டமர் கேரா சார்.. நம்பி பேசின பெண்ணிடம் ரூ. 52,260 அபேஸ்.. எப்படி தெரியுமா?

அதிர்வெண்களில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கான முக்கிய காரணம்?

அதிர்வெண்களில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கான முக்கிய காரணம்?

இந்த அதிர்வெண்களில் உள்ள ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக ஐயனோஸ்பியர் என்று அழைக்கப்படும் அயான் மண்டலத்தின் (ionosphere) மாறுபாடுகள் மற்றும் சூரிய கதிர்வீச்சின் தீவிரம் இங்குள்ள முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஐயனோஸ்பியர் இரவில் மெல்லியதாகவும் மற்றும் பகலில் தடிமனாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்வு வலிமையை பாதிக்கும் மற்றொரு காரணி உலகின் மின்னல் வெப்பப் பகுதிகள் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

ஷுமன் ஒத்ததிர்வு மனிதர்களைப் பாதிக்குமா?

ஷுமன் ஒத்ததிர்வு மனிதர்களைப் பாதிக்குமா?

கடந்த கால ஆய்வுகள், இந்த அலைகள் உண்மையில் மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறுகின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அதிர்வெண்கள் பல்வேறு வகையான மூளை அலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஷுமன் மற்றும் மூளை செயல்பாட்டு ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றில் உள்ள 6 முதல் 16 ஹெர்ட்ஸ் ஃபிரிக்வென்ஸி மாறுபாடுகளால் இதை 'நிகழ் நேர ஒத்திசைவு' என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.

விசித்திரமான மற்றும் நம்ப முடியாத மூளை செயல்பாடு

விசித்திரமான மற்றும் நம்ப முடியாத மூளை செயல்பாடு

கனடாவின் லாரன்டியன் பல்கலைக்கழகத்தின் நடத்தை நரம்பியல் ஆய்வகத்தால் நடத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டின் மற்றொரு ஆய்வில், மூன்றரை ஆண்டுகளில் சுமார் 184 நபர்களிடமிருந்து விசித்திரமான மற்றும் நம்ப முடியாத 238 மூளை செயல்பாடு மற்றும் பூமி-அயனோஸ்பெரிக் அதிர்வு அளவீடுகள் காணப்பட்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் வடிவங்கள் மற்றும் மின்காந்த புலங்களின் பலங்களில் விசித்திரமான மற்றும் கணிக்க முடியாத ஒற்றுமைகள் இதில் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

மனிதர்களை இது பாதிக்கக்கூடும்

மனிதர்களை இது பாதிக்கக்கூடும்

இன்னும் சிலர் இந்த 7.83 ஹெர்ட்ஸின் ஷுமன் ஒத்ததிர்வு மனிதர்களின் ஹிப்னாஸிஸ், தியானம் மற்றும் மனிதர்களில் வளர்ச்சி ஹார்மோன்களுடன் இணைத்துள்ளனர், இருப்பினும் இந்த கூற்றுக்களை ஆதரிக்கும் உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'நியூ ஏஜ் சயின்ஸ்' பகுதியின் கணிப்புப் படி, ஷுமன் அதிர்வு மனித நனவால் கூட பாதிக்கப்படலாம் என்று பலர் நம்புகிறார்கள் என்று கூறுகிறது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது தாக்கம்

மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது தாக்கம்

இதனால், மனிதர்களின் கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தத்தின் உலகளாவிய உயர்வு (தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் நிகழ்ந்தது போன்றது) ஷுமன் அதிர்வுகளைப் பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக, இந்த அதிர்வெண்களில் ஒரு அசாதாரண ஸ்பைக் கூட மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யூகிக்க முடியவில்லை

யூகிக்க முடியவில்லை

இவை அனைத்தும் கேட்கவே மிகவும் பயமாக இருந்தாலும், இந்த கோட்பாடுகளுக்குப் பின்னால் விஞ்ஞான ஆதரவு இல்லாததால் இவற்றைப் புறக்கணிக்கலாம், ஆனால் அது எதிர்காலத்தில் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், இந்த கருது என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யூகிக்க முடியவில்லை.

Best Mobiles in India

English summary
Earths 7 83 Hz Heartbeat Could Affect Human Behaviour Is It Really True : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X