பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?

|

இன்றைய காலகட்டத்தில் வளிமண்டல மாசு, ஓசோன் சிதைவு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வெப்பமயமாதல் போன்றவை காரணமாக நாம் வாழும் உலகை மனிதர்கள் வாழ ஏற்பற்றது என்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டோம். இந்த உண்மை நிலையை உணர்ந்த ஆராய்ச்சியாள்கள் நம் எதிர்கால சந்ததிகளை மனதில் கொண்டு பல ஆண்டுகளாகப் பூமியைத் (Earth) தாண்டி மனிதர்களை ஆதரிக்கும், உயிர்கள் வாழக் கூடிய ஒரு புதிய கிரகத்தைத் தேடி வருகின்றனர்.

பூமியை விட மிகப் பெரிய கிரகம் ஆழமான கடல்களுடன் கண்டுபிடிப்பு

பூமியை விட மிகப் பெரிய கிரகம் ஆழமான கடல்களுடன் கண்டுபிடிப்பு

இந்த நோக்கத்தின் மற்றுமொரு படிக்கட்டாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புது கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். பூமியைப் போல் மனிதர்கள் வாழ ஏதுவானது என்று கருதப்படும் இந்த கோள் பூமியை விட மிகப் பெரியது மற்றும் மிகவும் ஆழமான சமுத்திரங்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கிரகத்தைப் பற்றிப் பல சுவாரசியமான தகவலை நாசா இப்போது வெளியிட்டுள்ளது.

இரண்டு சூரியர்களுடன் பூமியை விட அதிக எடை கொண்டதா இந்த சூப்பர் எர்த்?

இரண்டு சூரியர்களுடன் பூமியை விட அதிக எடை கொண்டதா இந்த சூப்பர் எர்த்?

பூமியை விடக் குறைந்தபட்சம் 70% அதிக எடை உள்ளதாக இந்த புதிய பூமி போன்ற கிரகம் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நம் பூமி ஒரு சூரியனை மையமாக வைத்துச் சுற்றி வருவது போல, இந்த புதிய பூமி இரண்டு சூரியர்களை மையமாக வைத்துச் சுழன்று கொண்டு இருக்கிறது. பூமியிலிருந்து கிட்டத்தட்ட 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, சூப்பர் எர்த் என்று கூறப்படும் இந்த புதிய பூமியை TOI-1452b என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

ஆழமான பெருங்கடல்களை கொண்ட மிகப்பெரிய கிரகம் இது தானா?

ஆழமான பெருங்கடல்களை கொண்ட மிகப்பெரிய கிரகம் இது தானா?

பூமியை விட இந்த சூப்பர் எர்த் 70% பெரியதாக இருப்பதால் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு பூமியை விடக் கூடுதல் எடை உள்ளதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சூப்பர் எர்த்தின் அடர்த்தியைப் பார்க்கும்போது, இது ஆழமான பெருங்கடல்களைக் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனித இனம் உயிர் வாழத் தேவையான மிக முக்கியமான காரணிகளில் நீர் ஆதாரம் மிக முக்கியமானது என்பதை நாம் அறிவோம்.

ஏன் மற்ற கிரகங்களில் நீர் ஆதாரங்களை நாசா தேடுகிறது?

ஏன் மற்ற கிரகங்களில் நீர் ஆதாரங்களை நாசா தேடுகிறது?

இதனால், தான் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் கூட நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நீர் ஆதாரங்களைத் தொடர்ந்து தேடி வருகிறது. இப்படி, பல ஆண்டுகளாக மனிதர்களுக்கான மற்றொரு கிரகத்தைத் தேடிக்கொண்டிருந்த வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த புதிய சூப்பர் எர்த் ஒரு வரப்பிரசாதமாகக் காட்சியளிக்கிறது. இந்த கிரகம் பற்றிய கூடுதல் விபரங்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்! இந்த கிரகத்தில் இவ்வளவு பெரிய கடல் பகுதி இருக்கிறதா?

அம்மாடியோவ்! இந்த கிரகத்தில் இவ்வளவு பெரிய கடல் பகுதி இருக்கிறதா?

மேண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் உள்ள உலக ஆராய்ச்சியாளர்கள் கூட்டணி தங்களது ஆராய்ச்சியில் இந்த புதிய சூப்பர் எர்த்தை உருவகப்படுத்தி (simulate) பார்த்த பொழுது, இதன் எடையில் 30% சமுத்திரப் பகுதியாக இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதாவது, 30% சதவீதம் இந்த கிரகம் கடலால் சூழப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பூமியில் 70% இருக்கும் நீர்ப்பரப்பு அதன் எடையின் 1% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

பூமியுடன் ஒப்பிட்டால் இது ஒரு வாட்டர் வேர்ல்ட் கிரகமா?

பூமியுடன் ஒப்பிட்டால் இது ஒரு வாட்டர் வேர்ல்ட் கிரகமா?

எனவே பூமியுடன் ஒப்பிடும் பொழுது, இந்த சூப்பர் எர்த் அதிக நீர்ப்பரப்பைக் கொண்டிருக்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த விகிதம் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள நீர் நிலவுகளை போல் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. வியாழனின் கேனிமீட் மற்றும் காலிஸ்டோ, சனியின் டைட்டன் மற்றும் என்செலடஸ் ஆகிய நிலவுகள் இந்த ஒப்பீட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

பூமியில் 1 ஆண்டு என்பது இந்த கிரகத்தில் எவ்வளவு நாட்கள் தெரியுமா?

பூமியில் 1 ஆண்டு என்பது இந்த கிரகத்தில் எவ்வளவு நாட்கள் தெரியுமா?

இந்த நிலவுகளின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான வெளிப்பாடுகள் இல்லை என்றாலும் அவை ஆழமான கடல்களை தங்களது பனிக்கட்டிகளின் கீழ் மறைத்து இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதேபோல், இந்த சூப்பர் எர்த்தும் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது என்பது நாசாவின் கருத்தாக உள்ளது. சூப்பர் எர்த் சுற்றிவரும் சூரியன்களில் அருகில் இருக்கும் ஒன்றை வெறும் 11 நாட்களில் சுற்றி வந்துவிடுகிறது. அதாவது நம்முடைய ஒரு ஆண்டு சூப்பர் எர்த்திற்கு வெறும் 11 நாட்கள் மட்டுமே.

எது சூரியனை சுற்றி வர இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகுமா?

எது சூரியனை சுற்றி வர இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகுமா?

அதேபோல் தொலைவில் இருக்கும் மற்றொரு சூரியனை ஒரு முறை இந்த கிரகம் சுற்றிவர 1400 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது என்பது விண்வெளியின் வியப்பு. மேலும் இந்த இரண்டு சூரியன்களும் ரெட் ட்வார்ஃப் என்ற வகையின் கீழ் வருவதால் நம்முடைய சூரியனை விட சிறியதாகவும் குளுமையானதாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இவ்விரு சூரியன்களால் சூப்பர் எர்த் உணரும் வெப்பமானது, நம்முடைய சூரியனால் வீனஸ் கிரகம் உணரும் வெப்பத்திற்கு இணையாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

சந்தேகங்களை கட்டவிழ்க்க திட்டமிடுகிறதா NASA?

சந்தேகங்களை கட்டவிழ்க்க திட்டமிடுகிறதா NASA?

ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி நீர் இருப்பதையும் இந்த சூப்பர் எர்த் மனிதர்கள் வாழ ஏதுவானது என்பதனை நிரூபிக்க இன்னும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக NASA கூறியுள்ளது. இந்த கிரகம் சிறிய அல்லது வளிமண்டலம் இல்லாத ஒரு பெரிய பாறையாக இருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தின் வளிமண்டலத்தைக் கொண்ட ஒரு பாறை கிரகமாகக் கூட இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கிரகம் பற்றிய பல உண்மைகளை James Web Space Telescope கண்டுபிடிக்குமா?

இந்த கிரகம் பற்றிய பல உண்மைகளை James Web Space Telescope கண்டுபிடிக்குமா?

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள ட்ரான்சிட்டிங் எக்ஸோபிளானட் சர்வே செயற்கைக்கோள் மற்றும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் பயன்படுத்தவிருப்பதாக NASA தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து வெறும் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால், வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் இதன் வளிமண்டலத்தைச் சிறப்பாக அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டார்கோ விண்மீன் கூட்டத்தில் சூப்பர் எர்த் அமைந்திருப்பதால் ஆண்டுதோறும் அதனை ஆராய்ச்சி செய்வதில் எந்த இடையூறும் இருக்காது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Best Mobiles in India

English summary
Earth Like Planet Found In Bigger Size With 2 Suns And Deeper Oceans By NASA

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X