பூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு! வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு!

|

பல ஆண்டுகளாக நாம் மற்ற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான அறிகுறிகள் அல்லது குறைந்தபட்சம் அதை ஆதரிக்கக்கூடிய ஆதாரங்களையாவது தேடி வருகிறோம். இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்க விரும்பவில்லை மற்றும் வேறு இடங்களிலும் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை அறிய விரும்புகிறோம்.

110 ஒளி ஆண்டு

தற்போது நாம் அந்த முயற்சியில் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் எனலாம்.110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள "பூமி போன்ற" ஒரு கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.

கே2-18பி கிரகம்

கே2-18பி கிரகம்

கே2-18பி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகம் 2015 ஆம் ஆண்டில் கெப்லர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட சாத்தியமான கிரகங்களில் ஒன்றாகும். நம்முடைய சொந்த கிரகத்தை ஒத்த ஒப்பனையைக் காட்டும் இவை கிரகங்கள், அவற்றின் தாய் நட்சத்திரத்திற்கு அருகிலுள்ள உயிர் வாழக்கூடிய மண்டலத்தில் உள்ளன. அதாவது இதன் பொருள் என்னவெனில் அவை தண்ணீரைக் கொண்டிருக்கலாம்.

வெளிப்படையாக கூறவேண்டுமானால் கே2-18பி கிரகம் உண்மையில் அதன் வளிமண்டலத்தில் நீராவி படலத்தை கொண்டுள்ளது.

ஏடிஎம் மோசடிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கியது புதிய ஏடிஎம் சேவை!

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி

இரண்டு வெவ்வேறு விஞ்ஞானிகள் குழுக்கள், இந்த வாரம் அக்கிரகத்தின் காற்றில் நீராவி இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளன. அதில் ஒன்று, இன்று வெளியிடப்பட்ட லண்டன் பல்கலைக்கழக கல்லூரி விண்வெளி எக்சோகெமிஸ்ட்ரி டேட்டா மையத்தின் (சி.எஸ்.இ.டி) ஏஞ்சலோஸ் சியாரஸ் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை ஆகும். மற்றொன்று நேற்று வெளியான யுனிவர்சிட்டி ஆப் மான்ட்ரியலின் பிஜோர்ன் பென்னகே தலைமையிலான ஆய்வறிக்கை ஆகும்.

சூப்பர் பூமி

சூப்பர் பூமி

"சூரிய மண்டலத்திற்கு வெளியே சரியான வெப்பநிலை மற்றும் நீரைக் கொண்ட ஒரே கிரகம் இதுதான்" என்று சியாராஸ் தொலைபேசி உரையாடலின் போது செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும் அவரும் அவரது சகாக்களும், இது பூமியை ஒத்த கிரகம் அல்ல என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில் இதை ஒரு சூப்பர் பூமி எனலாம். ஏனெனில் இது நம் உலகத்தை விட எட்டு மடங்கு பெரியது.

ஜியோ ஜிகாஃபைபர் அசத்தலான 6பிளான்கள் சத்தமில்லாமல் கசிந்தது.!

33 நாட்கள் மட்டுமே

33 நாட்கள் மட்டுமே

கூடுதலாக கே2-18 பி கிரகத்தின் நட்சத்திரம் ஒரு சிவப்பு குள்ள கிரகம் மற்றும் இது நமது சூரியனை விட மிகச் சிறியது மற்றும் குளிரானது. அதனால்தான் இந்த கிரகம் அதன் நட்சத்திரத்துடன் மிக நெருக்கமாக இருந்தபோதிலும், அது இன்னும் உயிர் வாழக்கூடிய மண்டலத்தில் உள்ளது. இருப்பினும் கே2-18பி கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியில் 33 நாட்கள் மட்டுமே என்பதையும் இது குறிக்கிறது.

அலைகளால் பூட்டப்பட்டிருக்கலாம்

அலைகளால் பூட்டப்பட்டிருக்கலாம்

இதனுடைய விரைவான சுற்றுப்பாதையின் காரணமாக இந்த கிரகம் "அலைகளால் பூட்டப்பட்டிருக்கலாம்" என்று விஞ்ஞானிகள் முன்பு கூறியுள்ளனர். அதாவது சந்திரன் எப்போதும் ஒரே பக்கத்தை நமக்கு காண்பிப்பது போல, அந்த சிவப்பு குள்ள நட்சத்திரமும் ஒரே பக்கத்தை மட்டுமே காண்பிக்கிறது. ஆனால் அது ஒரு பிரச்சனையாக இருக்காது.

சி.எஸ்.இ.டி.யின் இங்கோ வால்ட்மேன் கூறுகையில், "அலைகளால் பூட்டப்பட்ட கிரகமும் கூட உயிர் வாழ ஏற்றதாக இருக்கும்.பகல்நேரத்திலிருந்து வரும் ஆற்றலை இரவு நேரத்திற்கு சமமாக விநியோகிக்க முடியும்." என்கிறார். எனவே அடிப்படையில் இது சில வேலைகளை எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் செய்துமுடிக்கக்கூடியது.

 பூமியை விட மிகவும் வித்தியாசமாக இருக்கலாம்

உண்மையில் கே2-18பி கிரகத்தில் உள்ள வாழ்க்கை பூமியை விட மிகவும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் சியாராஸ் கூறுகையில், அது வானியலாளர்களைத் தடுக்காது என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பூமியை போன்ற ஒரு கிரகத்தை தேட வேண்டிய அவசியமில்லை. உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருந்தால் போதும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Earth-Like Planet Discoverd! Even Water And Oxygen Is Found In This Planet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X