பூமிக்கு போன் செய்யும் ஏலியன்கள்! நியூட்ரான்- நட்சத்திர மோதல் காரணமா?
"கடந்த ஆகஸ்டில் கண்டறிந்த நியூட்ரான் ஸ்டார் இணைப்புடன் தொடர்புடைய வானியல் ஆய்வில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சி எங்களை உண்மையாகவே ஆச்சர்யப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு முதல்முறையாக நடைபெற்ற பைனரி நட்சத்திரங்களை இணைக்கும் ஆய்வு முடிவுகள் வானியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ஏதேனும் ஒருநாள் வேற்றுகிரகத்தில் இருந்து வரும் சிக்னலை கண்டு உலகம் வியப்பில் ஆழ்வதைப் போல இல்லை.

இந்த புதிய ஆய்வறிக்கை, வேற்றுகிரக அறிவிற்கான தேடுதல் என்று அழைக்கப்படும், தற்போது நடைபெறும் தேடுதலுக்கான அறிவியல் முயற்சியான பைனரி நட்சத்திரங்களை இணைக்கும் போது கிடைத்த ஆய்வுமுடிவுகள் இரண்டாவது கண்டறிதலுக்கு முக்கிய அம்சமாக இருக்கும் என வாதாடுகிறது.

நியூட்ரான் ஸ்டார்
"கடந்த ஆகஸ்டில் கண்டறிந்த நியூட்ரான் ஸ்டார் இணைப்புடன் தொடர்புடைய வானியல் ஆய்வில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சி எங்களை உண்மையாகவே ஆச்சர்யப்படுத்துகிறது. பாரம்பரிய வானியல் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்ட ஆச்சர்யமளிக்கும் சாத்தியகூறுகளைப் பற்றி சிந்திக்க இது தூண்டுகிறது" என்கிறார் ஜப்பான் கியோடோ பல்கலைகழகத்தின் இயற்பியலாளர் யூகி நிஷினோ. "ஆனால் இதற்கு முன்பாக நாங்கள் "வேற்றுகிரகவாசி தேடல்" செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்கவில்லை" என்கிறார்.

ஏலியன் சமூகம்
நமது பால்வெளி அண்டத்திற்கு அப்பால் உள்ள தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஏலியன் சமூகம், இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் உருவாகும் வலுவான சமிக்ஞைகளை பயன்படுத்தி எப்படி நமது கவனத்தை ஈர்க்க முயலும் என இந்த ஆய்வாளர்கள் ஆராய துவங்கியுள்ளனர்.

பைனரி நியூட்ரான்
எங்காவது நடைபெறும் இந்த பைனரி நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலை தங்களின் சொந்த பால்வெளி அண்டத்தில் பல்வேறு எச்சரிக்கையுடன் கண்டறியும் திறன் ஏலியன்களுக்கு இருக்கலாம் என்பது இவர்களின் கருத்து. தற்போது நம்மாலும் அதை செய்ய முடியும். ஏனெனில் பல நியூட்ரான் நட்சத்திரங்கள் சுழலும் ஒளியை வெளிவிடும் பல்சர்கள் ஆகும். எனவே ஏலியன் எங்கு உள்ளன மற்றும் அவர்கள் எப்படி பைனரி முறையில் ஊடாடுகின்றன என்பதை நம்மால் கண்காணிக்க முடியும்.

வலுவான சிக்னல்
அடுத்ததாக, ஏலியன்களும் இந்த நட்சத்திர மோதலின் போது சிக்னலை உருவாக்கலாம். எனவே மோதல்களை பல ஆண்டுகள் முன்கூட்டியே கண்டறியும் ஈர்ப்பு அலை கண்டறியும் கருவியை உருவாக்க விஞ்ஞானிகள் முனைப்பு காட்டுகின்றனர். மோதல் கண்டறிந்தவுடன் அவர்கள் தங்களின் டெலஸ்கோப்பை தயாராக வைத்துள்ளனர். இதன் மூலம் இயற்கையான மோதலுக்கு பின்போ அல்லது முன்போ அதன் சிக்னல் மூலம் ஏலியன்கள் நமது கவனத்தை ஈர்க்க முயற்சிக்கலாம்.
இதற்கு மிகவும் வலுவான சிக்னல் தேவைப்படும். ஏனெனில் இந்த ஆய்வு படி, நமது பால்வெளி அண்டத்திற்கு அப்பால் உள்ள வேற்றுகிரகவாசிகள் இருப்பதால், பயண நேரம் அதிகமாக தேவைபடும்.அதாவது ஒளியின் வேகத்தை விட அதிகமாக கூட தேவைபடலாம்!


Click it and Unblock the Notifications