காற்றை தண்ணீராக மாற்றும் நீரோ: கண்டுபிடித்து அசத்திய சென்னை ஐஐடி !

|

காற்றில் உள்ள ஈரப்பதத்தை தண்ணீராக மாற்றும் புதிய கருவியை சென்னை ஐஐடி கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

காற்றை தண்ணீராக மாற்றும் நீரோ: கண்டுபிடித்து அசத்திய சென்னை ஐஐடி !

சென்னை ஐஐடி குழு ஆஸ்ரேலியாவில் நடந்த ஆளில்லா விமானம் (டிரோன்) அதிக தூரம் பறக்கவிட்டு சாதனை படைத்தது. இந்த தக்ஷா குழுவும் சென்னை ஐஐடியும் உலக அளவில் பிரபலம் அடைந்தது.

உலகின் டாப் 10 விமான படைகள்: இந்தியாவிற்கு என்ன இடம்? முதலிடத்தில் யார்?

இந்நிலையில் தற்போது, காற்றில் இருந்து தண்ணீரை தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்து சென்னை ஐஐடி அசத்தியுள்ளது. இது மேலும் புகலை உயர்த்தியுள்ளது.

 சென்னை ஐஐடி:

சென்னை ஐஐடி:

சென்னை ஐஐடியும் தனியார் நிறுவனம் இணைந்து தற்போது, காற்றில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளது. குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளதால், உலகளவில் புகலை உயர்த்தியுள்ளது.

 நீரோ கருவி உருவாக்கம்:

நீரோ கருவி உருவாக்கம்:

சென்னை ஐஐடியும் தனியார் தொழில்நுட்ப நிறுவனமான தீர்த்தா உடன் இணைந்து காற்றில் இருந்து தண்ணீரை பிரித்து எடுத்தும் முயற்சியில் இறங்கின. இதன் பயனாக தற்போது, நீரோ என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது குறைந்த செலவில் தண்ணீரை பெற முடியும்.

 4 முதல் 5 லிட்டர் தண்ணீர்:

4 முதல் 5 லிட்டர் தண்ணீர்:

இந்த நீரோ கருவி மூலம் தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீரை காற்றில் இருந்து எடுக்க முடியும்.

அளவில் சிறியது:

அளவில் சிறியது:

அளவில் சிறியதாக இருக்கும் இருந்த கருவியை எடுத்து செல்வது மிகவும் எளியது. மேலும், இந்த கருவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன் கிழமை இருத்தரப்பும் கையொப்பம் இட்டுள்ளன.

சென்னை ஐஐடி ஒருங்கிணைப்பு:

சென்னை ஐஐடி ஒருங்கிணைப்பு:

சென்னையின் ஐஐடியின் மெக்கானிக்கல் துறை இந்த திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது. ஏற்கனவே உலகளவில் தக்ஷா ஆளில்லா விமான குழுவால் சென்னை ஐஐடி புகழடைந்துள்ளது. இந்நிலையில் தண்ணீர் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளதால், தற்போது, உலகளவில் சென்னை ஐஐடிய பிரபலமடைந்துள்ளது.

செலவும் குறைந்தது:

செலவும் குறைந்தது:

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இது சூரிய மின் சக்தியில் இயங்குவதால், இதை பயன்படுத்தும்போது, அதிக செலவும் ஏற்படாது.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

குறைவான பராமரிப்பு செலவு மட்டும் இருக்கும். அசையும் பாகம் ஏதும் இந்த கருவியில் இல்லை. இதன் அமைப்பு மேலும் பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

14 ஆண்டுக்கு முன்பே:

14 ஆண்டுக்கு முன்பே:

கடந்த 14 ஆண்டுக்கு முன்போ காற்றின் ஈரப்பத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் முயற்சியில் இறங்கி ஒரு கருவியை வடிவமைத்துள்ளது.

காப்புரிமை பதிவு:

காப்புரிமை பதிவு:

இதில் அந்த கருவிக்காக காப்புரிமையும் பதிவு செய்துள்ளது. இப்போது மின்சார வசதியும் இல்லாத சூரிய மின்சக்தியில் இயங்கும் கருவியை உருவாக்கியுள்ளது.

 குறைந்த மின் சக்தி போதும்:

குறைந்த மின் சக்தி போதும்:

காற்றில் இருந்து தண்ணீரை பெற குறைந்த மின் சக்தி தேவை. நாம் சூரிய சக்தி மூலம் தண்ணீரை எளிதாக பிரித்து எடுக்க முடியும்.

 2 ஆண்டுகளாக ஸ்மார்ட்போனில் முழு ப்ரைட்னஸ்; கண்ணில் 500 ஓட்டை!

2 ஆண்டுகளாக ஸ்மார்ட்போனில் முழு ப்ரைட்னஸ்; கண்ணில் 500 ஓட்டை!

ஒரு ஆய்வின் படி, ஒரு சராசரி ஸ்மார்ட்போன் பயனாளர் ஒரு நாளைக்கு சுமார் நாற்பத்தி ஏழு முறையாவது அவரின் ஸ்மார்ட்போனை எடுத்து பார்க்கிறார். இதற்கே ஷாக் ஆனால் எப்படி? அடுத்த மேட்டரை கேளுங்கள். அதே ஆய்வின் படி 18 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட வயதை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 86 முறையாவது தங்களது ஸ்மார்ட்போனை எடுத்து பார்த்து விடுகிறார்கள் என்கிறது

இந்த ஆய்வானது நாம் நமது தொலைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டோம் என்பதை எடுத்து கூறுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மேலும் இந்த ஆய்வின் படி, தூங்கி எழுந்து கண் விழித்து கொள்ளும் நேரத்திலும் மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் நாம் அதிகமாக ஸ்மார்ட்போனை கையாள்கிறோம்.

கட்டாயப்படுத்தும் கட்டுரையும் இது அல்ல!

கட்டாயப்படுத்தும் கட்டுரையும் இது அல்ல!

அழைப்பு, டெக்ஸ்ட் மெசேஜ், படிப்பது, பொழுதுபோக்கு பார்வை மற்றும் பிரவுசிங் செய்தல் என பல விடயங்களுக்கு உதவும் ஸ்மார்ட்போனை நம்மால் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது, நாம் புறக்கணிக்க போவதும், அதை செய்யும் படி, கட்டாயப்படுத்தும் கட்டுரையும் இது அல்ல! இது ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் பிரைட்னஸ் பற்றிய ஒரு கட்டுரை!

அங்குதான் ஆரம்பிக்கிறது சிக்கல்!

அங்குதான் ஆரம்பிக்கிறது சிக்கல்!

நம்மில் எத்தனை பேர் ஆட்டோமேட்டிக் ஸ்க்ரீன் பிரைட்னஸ் பயன்முறையை எனேபிள் செய்து வைத்துள்ளோம். நூற்றுக்கு பத்து பேர் கூற இருக்க ,மாட்டோம். அங்குதான் ஆரம்பிக்கிறது சிக்கல். பெரும்பாலும், நாம் நினைப்பதை விட மிக அதிக ஸ்க்ரீன் பிரைட்னஸையே நாம் வைத்து இருப்போம். மறுகையில் அதிக நேரம் பயன்படுத்துகிறோம்.

இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால்?

இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால்?

பகல் நேரம் என்றால் கூட பரவாயில்லை இரவு நேரத்திலும் கூட அதிக பிரைட்னஸ் வைத்திருக்கும்போது விளைவு மோசமடைகிறது. இதுவரை நீங்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சென்னின் கதையை அறிந்த பின், நீங்கள் உங்கள் "ஸ்க்ரீன் பிரைட்னஸை பற்றி" மறுபரிசீலனை செய்யலாம்.

மிகவும் மோசமான நிலைமை!

மிகவும் மோசமான நிலைமை!

தொடர்ந்து இரண்டு வருடங்களாக, முழுமையான ஸ்க்ரீன் பிரைட்னஸ் எனேபிள் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்திய சென்னின் கண்கள் தற்போது குலைந்து போய் உள்ளன. ஆம், ஒரு நாள் அவளுடைய கண்கள் மிகவும் மோசமான நிலைமை ஒன்றை சந்திப்பதை அவர் உணர்கிறார். உடனே அவர்ஒரு கண் மருத்துவரிடம் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

விழி வெண்படலத்தில் ஓட்டைகள் உருவாகி உள்ளது!

விழி வெண்படலத்தில் ஓட்டைகள் உருவாகி உள்ளது!

அவரைப் கண்களை பரிசோதனை செய்த மருத்துவர் அதிர்ந்து போய் உள்ளார். ஆம் பரிசோதனையில் சென்னின் கண்களில் சுமார் 500 துளைகள் வரை இருப்பதாக அவர் கண்டுபிடித்தார். பின் அதற்கான காரணம் என்னவென்று அறியும் போது, அதிர்ச்சி இரட்டிப்பானது. நீங்கள் நினைப்பது சரி தான், ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் பிரைட்னஸை முழு பிரகாசத்துடன் வைத்து பயன்படுத்தி காரணத்தினால் தான் சென்னின் விழி வெண்படலத்தில் ஓட்டைகள் உருவாகி உள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம்!

தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம்!

600 க்கும் மேற்பட்ட லுமென்ஸை (இது பிரகாசத்தின் நிலையை குறிக்கும் அளவீடு ஆகும்) தான் கண்கள் மீது சென் வெளிப்படுத்தி கொண்டதால் வந்த வினையே இந்த ஓட்டைகள் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். மிரர் பத்திரிக்கையின் படி, 600 லுமன்ஸை விட பிரகாசமான எதையும் நீங்கள் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் பார்ப்பதும், உங்கள் கண்களை ஒரு நுண்ணலைக்குள் (மைக்ரோ வேவ்) வைப்பதும் ஒன்று தான்.

இன்று ஒரு பாடத்தை கற்றுள்ளோம்!

இன்று ஒரு பாடத்தை கற்றுள்ளோம்!

ஆக இந்த கட்டுரையின் வழியாக மட்டும் சென்னின் கதை வழியாக நாம் இன்று ஒரு பாடத்தை கற்றுள்ளோம். அதாவது மின்னணு பொருட்களுடன் (குறிப்பாக ஸ்மார்ட்போன்) மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இரவு நேரங்களில் மற்றும் இருட்டான இடங்களில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது (மடிக்கணினிகளும் கூட) அதன் பிரைட்னஸ் மீது கவனம் செலுத்த விடும்.

நாமும் புரிந்து கொள்வோமா?

நாமும் புரிந்து கொள்வோமா?

நம்மில் சிலர் ஒரு சீரான ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கையில் எடுக்க தொடங்கி விட்டனர். அவர்கள் பூமியுடனும் அதன் வாசிகளிடமும் அதிக நேரத்தை செலவு செய்ய விரும்புகிறார்கள். அதாவது நண்பர்கள் உடனும், குடும்பத்தினர் உடனும் அமர்வதும், பேசுவதும் முக்கியம் என்பதை உணர்ந்து உள்ளனர். அந்த முக்கியத்துவத்தை நாமும் புரிந்து கொள்வோமா?

இவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

இவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

பிரேசிலில் உள்ள ரியாச்சோ பிஃரியோ நகரில் வசிக்கும் லூசியா பினஹெரியோவை மருத்துவமனைக்கு "மிக விரைவாக" கொண்டு சென்றும் கூட, அவளின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அவருக்கு என்ன நேர்ந்தது.? அவர் எப்படி இறந்தார்.? என்பதை அறிந்தபின்னர் ஸ்மார்ட்போனின் மீதான அச்சமும், முக்கியமாக ஹெட்செட் மீதான மரண பயம் தொற்றிகொள்கிறது என்றே கூறவேண்டும்.

விபரீதமான முறையில் பலி.!

விபரீதமான முறையில் பலி.!

ஸ்மார்ட்போனிற்கு சார்ஜ் ஏற்றும்போது அதை பயன்படுத்துவதே தவறு என்று பரிந்துரைக்கும் நிலைப்பாட்டில், தனது மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டே அதை பயன்படுத்தியது மட்டுமின்று அதனோடு இணைக்கப்பட்ட ஹெட்போனை காதுகளுக்குள் பொருத்தியிருந்த மாணவி ஒருவர், மிகவும் விபரீதமான முறையில் பலியாகியுள்ளார்.

விசாரணையில்.!

விசாரணையில்.!

அவர் மீது மின்சாரம் பாய்ந்தது மட்டுமின்றி காதுகளில் அணிந்திருந்த ஹெட்போன் உருகிய நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சார்ஜரில் செருகப்பட்டிருந்த அவரின் மொபைல் ஒரு "பெரிய அளவிலான மின்சாரம்" மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காதுகளில் ஹெட்ஃபோன்கள்.!

காதுகளில் ஹெட்ஃபோன்கள்.!

அவரின் பாட்டி அளித்த தகவலின்படி, அவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடந்துள்ள போதும் அவரின் காதுகளில் ஹெட்ஃபோன்கள் அப்படியே இருந்துள்ளது.

உருக்குலைவு.!

உருக்குலைவு.!

இதிலிருந்து அவர் தனது செல்போனை சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்தியதால் ஏற்பட்ட மின்சார தாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட மொபைல் மற்றும் ஹெட்செட் உருக்குலைவு ஆகிய காரணங்களினால் மரணித்துல்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு.!

ஒரு மணிநேரத்திற்கு பிறகு.!

"மின் அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு தான், லூசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று மருத்துவ பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் மழை எதுவும் பெய்யவில்லை, ஆனால் மின்னல் வெட்டுகள் இருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
drink water from air this initiative by iit madras teertha might enhance lives of millions : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X