Home
Scitech

ரயில் பெட்டியில் இருந்து பாய்ந்த அக்னி பிரைம் ஏவுகணை.. DRDO விளக்கம்!

டிஆர்டிஓ (DRDO) என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) ஆனது ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணையை (Agni Prime Missile) ஏவியது போன்ற புகைப்படம் பலரையும் குழப்பம் அடைய செய்துள்ளது.

டிஆர்டிஓ ஆனது உண்மையிலேயே இரயில் பெட்டியில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவியதா? என்கிற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன: முதல் பதில் - ஆம், ஏவியது; இரண்டாவது பதில் - இல்லை, ஏவவில்லை. உடனே இன்னும் குழப்பம் அடைய வேண்டாம்!

ரயில் பெட்டியில் இருந்து பாய்ந்த அக்னி பிரைம் ஏவுகணை.. DRDO விளக்கம்!

டிஆர்டிஓ ஆனது இரயில் பெட்டியில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி, முக்கியமான சோதனை ஒன்றை மேற்கொண்டது உண்மை தான். ஆனால் அது உண்மையான இரயில் பெட்டி அல்ல. அது இரயில் அடிப்படையிலான ஒரு மொபைல் லாஞ்சர் (Rail based mobile launcher) ஆகும்!

அதாவது இது தண்டவாளங்களில் ஓடும் ஒரு சாதாரண ரயில் பெட்டி அல்ல, மாறாக ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட, அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். ரஷ்யா (Russia) மற்றும் சீனா (China) போன்ற நாடுகளிடம் கூட ரயில் அடிப்படையிலான மொபைல் ஏவுகணை அமைப்புகளை (Rail based mobile missile systems) உருவாக்கி வைத்துள்ளன.

இதன் மூலம் பெரிய அளவிலான ஏவுகணைகளை கூட மிகவும் பாதுகாப்பாக நகர்த்த முடியும் மற்றும் குறைந்தபட்ச எச்சரிக்கையுடன் அவைகளை ஏவவும் முடியும். ரஷ்யா மற்றும் சீனாவிற்கே இதுவொரு முக்கிய பலமாக இருக்கிறது என்றால், மிகவும் விரிவான ரயில் வலையமைப்பை கொண்டுள்ள இந்தியாவிற்கு இது எவ்வளவு பெரிய பலமாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

இரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர்கள் மூலம் இந்தியாவின் ஏவுகணை சொத்துக்கள் ஆனது எல்லா சூழ்நிலைகளிலும் - எளிதாக நகர்த்தப்பட கூடியதாக, மறைக்கப்பட்டதாக மற்றும் நம்பகமானதாக இருப்பதை உறுதி செய்ய முடியும். இதனால் தான் டிஆர்டிஓ ஆனது இந்த வளர்ச்சியை "ஒரு கேம் சேஞ்சர்" (Game Changer) என்று விவரிக்கிறது.

ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சரின் மற்ற சிறப்புகள்: முன்னரே குறிப்பிட்டபடி இது சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட, ரயில்களில் பொருத்தப்பட்ட ஒரு மிஸைல் டிப்ளாய்மென்ட் பிளாட்ஃபார்ம் (Missile deployment platform) ஆகும். இந்த அமைப்பு ஏவுகணைகளை நாடு முழுவதும் பரவியுள்ள ரயில்வே நெட்வொர்க் மூலம் கொண்டு செல்லவும், மறைக்கவும், ஏவவும் அனுமதிக்கிறது.

இது அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் உட்பட அனைத்து சுயாதீன ஏவுதள திறன் அம்சங்களையும் கொண்டுள்ளது. ரோட்-மொபைல் ஏவுகணைகள் ஆனது ஏற்கனவே மறைத்தல் மற்றும் வரிசைப்படுத்தலை கண்டறிவதை கடினமாக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற இரட்டை-பயன்பாட்டு ஏவுகணைகள் ஆனது இந்திய படைகளுக்கு கூடுதல் பலத்தை வழங்கும் என்பதிலும், ரயில் அடிப்படையிலான அமைப்புகளை சேர்ப்பது எதிரி நாட்டின் கண்காணிப்பை மேலும் சிக்கலாக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.

அக்னி பிரைம் ஏவுகணையின் திறன்கள்: இந்தியாவின் அக்னி ஏவுகணை சீரீஸின் ஒரு பகுதியான அக்னி பிரைம் ஏவுகணை ஆனது அதிநவீன வழிகாட்டுதல், துல்லியம் மற்றும் சூழ்ச்சித்திறன் கொண்ட ஒரு மேம்பட்ட நடுத்தர தூர ஏவுகணை (Advanced medium range Missile) ஆகும்.

ஒரு ரயில் அடிப்படையிலான ஏவுதளத்திலிருந்து இதை சோதிப்பது, ஒரே விநியோக அமைப்பின் கீழ் பல ஏவுதள விருப்பங்களை (Fielding Multiple Launch Options) நிலைநிறுத்துவதற்கான இந்தியாவின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இது செயல்பாட்டு சூழ்நிலைகளில் (Operational scenarios) மீள்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகிய இரண்டையும் உறுதி செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
DRDO Successfully Tested Agni Prime Missile from Rail based Mobile Launcher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X