ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இந்தியா.!

|

இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை போல அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.

 சீனா ரஷ்யா

குறிப்பாக ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும், திறன் கொண்டவை தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள்.ஏற்கனவே அமெரிக்கா, சீனா ரஷ்யா போன்ற நாடுகளும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் அதிக ஆவர்ம்காட்டிவருகின்றன.

சார்ந்த வல்லுனர்கள்

இந்நிலையில் ஆயுத உற்பத்தியில் அடுத்தக் கட்டத்தை எட்டும் வகையில் இந்தியா ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க
திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தான் எதிர்காலமாக இருக்கும் என்கின்றனர் பாதுகாப்பு துறை சார்ந்த வல்லுனர்கள்.

மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: விலை எவ்வளவு? விற்பனை?

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

இதற்கு முக்கிய காரணம் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்கும் அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும். பின்பு ஏவுகணை தடுப்பு அமைப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ, ட்ராக் செய்யவோ முடியாது என்று கூறப்படுகிறது.

ராணுவ ஆராய்ச்சி

மேலும் டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹைபர்சோனிக் ஏவுகனை தயாரிப்பில் இறங்கியுள்ளது, இதனை சோதிக்கவும், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் காற்று சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது என்றும், இதனை விரைவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏவுகணைகள் தயாரிப்பில்

பின்பு நமது பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வளர வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தான் அடுத்த தலைமுறை ஏவுகணை எனக் கூறப்படும் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
DRDO starts work on ‘next-gen’ hypersonic weapon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X