எதிரிக்கு கிலி கிளப்பும் இந்தியாவின் ஆளில்லா டாங்கி - அன்புடன் ஆவடியில் இருந்து.!

|

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டிஆர்டிஓ (DRDO) இந்தியாவின் முதல் ஆளில்லா டாங்கியை உருவாக்கியுள்ளது. எந்தவொரு கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செய்லபடும் வண்ணம் மூன்று பிரிவுகளில் இந்த டாங்கிகள் உருவாக்கம் பெற்றுள்ளன. ஒன்று கண்காணிப்பு, மற்றொன்று சுரங்க கண்டறிதல் மற்றும் மூன்றாவது வகையானது அணுசக்தி மற்றும் உயிரி அச்சுறுத்தல்கள் ஆகிய பகுதிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மிகவும் சிறப்பான விடயம் என்னவென்றால் இந்தியாவின் முதல் ஆளில்லா டாங்கியான இது நம்ம சென்னையில் உள்ள ஆவடி ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதுதான்.

உருவாக்கம்

உருவாக்கம்

நாட்டின் முதன் ஆளில்லா டாங்கியான இது சென்னை ஆவடியில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமான காம்பாட் வெஹிகில்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டிபிளிஷ்மென்ட் (CVRDE) ஆய்வுகூடத்தில் உருவாக்கம் பெற்று பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா கண்காணிப்புப் பணி

ஆளில்லா கண்காணிப்புப் பணி

முந்த்ரா-எஸ் ஆனது ஆளில்லா கண்காணிப்புப் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முந்த்ரா-எம் ஆனது சுரங்கங்களை கண்டுபிடிப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி கதிர்வீச்சு அல்லது உயிரியல் ஆயுத ஆபத்துகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் முந்த்ரா-என் பயன்படுத்தப்படும்.

தொலைவில் உள்ள இலக்குகளை உளவு

தொலைவில் உள்ள இலக்குகளை உளவு

ராஜஸ்தானில் உள்ள மகாஜன் பிரதேசத்தில் இந்த டாங்கிகள் சோதிக்கப்பட்டன. அந்த வாகன சோதனையின் போது இதில் ஒருங்கிணைந்த கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு ரேடார் ஆனது 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை உளவு பார்க்க உதவும் என்று கண்டறியப்பட்டது.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை

இந்திய ஏவுகணை நாயகனாக அறியப்பட்ட மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதையை செலுத்தும் நோக்கில் அண்மையில் டி.ஆர்.டி ஒ. ஏற்பாடு செய்த விஞ்ஞான கண்காட்சியில் இவ்வகை கவசங்கள் வடிவமைப்பிலான இரண்டு டாங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டது.

சுவர் ஊடுருவல் ரேடார்

சுவர் ஊடுருவல் ரேடார்

இந்திய ஆயுத படைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளை எளிதாக்கும் இவ்வகை ஆளில்லா டாங்கிகள் தவிர்த்து டிஆர்டிஓ ஆனது சுவர் ஊடுருவல் ரேடார் போன்ற ஒரு சில கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. இவ்வகை தொழில்நுட்பம் ஆனது ஒரு சுவரில் வைக்கப்பட அதற்கு பின்னால் உள்ள மக்களை ஒரு திரையில் காட்சிப்படுத்தும்.

கட்டுப்பாட்டு அமைப்பு

கட்டுப்பாட்டு அமைப்பு

இதுமட்டுமின்றி டிஆர்டிஓ தலைவர் எஸ்.கிறிஸ்டோபர் சமீபத்தில் அளித்த தகவலொன்றின் கீழ் ஏ330 வகை விமானத்தில் ஏடபுள்யூஏசி (AWAC ) அதாவது வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு சார்ந்த நிறுவலில் நிறுவனம் செயல்பட்டு வருவதாக அறியப்படுகிறது. இந்த முறையானது தற்போது சிறிய வகை எம்பேரர் விமானங்களில் பயன்படுத்தப்பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
DRDO develops India's first unmanned tank, Muntra; rolls it out of Chennai lab. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X