எதிரி ரேடாரை நோட்டமிடும் இந்திய சேட்லைட் கதறும் பாக்.-சீனா: மீண்டும் விண்வெளியில் சாதனை.!

|

இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் வான்வொளியில் உளவு பார்க்கும் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் ஏ-சாட் செயற்கைகோள் ஏவி வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்தது.

எதிரி ரேடாரை நோட்டமிடும் இந்தியசேட்லைட் கதறும்பாக்.சீனா:மீண்டும்சாதனை!

இதை மற்ற நாடுகள் இந்தியாவை கண்டு வியந்தன.

இந்நிலையில், இந்தியா விண்வெளியில் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது செயற்கைகோள் மூலம் எதிரிகள் என்ன வகையான ரேடாரை பயன்படுத்துகின்றனர் என்று கண்டுபிடித்து விடும் என்பது தான் தனிச்சிறப்பே.

ஆன்டி சேட்லைட் ஆயுதம் வெற்றி:

ஆன்டி சேட்லைட் ஆயுதம் வெற்றி:

இந்தியாவின் ஆன்டி சேட்லைட் ஆயுதம் எனப்படும் செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதம் வெற்றியடைந்துள்ளது. மேலும், குறைந்த புவிவட்ட பாதையில், செயற்கைகோளை எதிர்த்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சோதனையில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. மேலும், விண்வெளி வல்லரசு ஆகவும் உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

4 வது நாடான இந்தியா:

4 வது நாடான இந்தியா:

வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும். இதன் மூலம் ஆன்டி சேட்லைட் ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியில் இந்தியா தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து 4 வது நாடாக உருவாகியுள்ளது.

குறைந்த புவி வட்ட பாதை:

குறைந்த புவி வட்ட பாதை:

மேலும், குறைந்த புவி வட்ட பாதையில் இந்தியா செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுத்தால் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது மூன்று நிமிடத்தில் நிகழ்த்தப்பட்டது. இது இது மிஷன் சக்தியின் கீழ் நடத்தப்பட்டது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

2000 கி.மீ உயரத்தில் அழிக்கும்:

2000 கி.மீ உயரத்தில் அழிக்கும்:

மேலும், குறைந்த புவிவட்ட ஆர்பிட் எனப்படும் 2000 கி.மீ உயரத்தில், ஏ-சாட் செயற்கை ஆயுதங்களை அழிக்க அல்லது இது செயலிக்க செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு ஆயுதமாகும். இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதுகாப்பதற்காக மிஷன் சக்தி ஒரு முக்கிய படிக்கல்லாக இருக்கின்றது.

A-SAT ஏவுகணை :

A-SAT ஏவுகணை :

இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு A-SAT ஏவுகணை புதிய பலத்தை தருவதாக பிரதமர் கூறினார். மேலும், எங்கள் திறனை யாருக்கும் எதிராக பயன்படுத்த முடியாது. சர்சதே நாடுகளுக்கும் உறுதியளித்தார். இந்தியாவின் பாதுகாப்புத் திட்டமாகும். நாம் விண்வெளியில் ஆயுதங்களை எதிர்த்து நிற்கிறோம். இந்த சோதனையானது சர்வதேச சட்டம் அல்லது ஒப்பந்தங்களை மீறுவதாக இல்லை. "

எமிசாட் செயற்கைகோள்:

எமிசாட் செயற்கைகோள்:

இந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை கூட்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 749 கிலோ மீட்டர் தொலைவில் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டுள்ள எமிசாட் செயற்கைக்கோளானது, எதிரிகளின் ரேடார் சிக்னல்களை கண்டறியும் வல்லமை பெற்றது.

ரேடாரை  காட்டும்:

ரேடாரை காட்டும்:

என்ன மாதிரியான ரேடாரை எதிரிகள் பயன்படுத்துகின்றனர் என்பதையும் இந்த செயற்கைக்கோள் மூலம் அறியமுடியும்.

சில நாட்களுக்கு முன்னர் விண்ணில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் மிசன் சக்தி என்ற சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது.

கதறிய பாகிஸ்தான்-சீனா:

கதறிய பாகிஸ்தான்-சீனா:

இந்த நிலையில், எமிசாட் செலுத்தப்பட்டு இருப்பது இந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை கூட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் இந்த இரண்டு செயற்கைகோள்களும் வெற்றியடைந்துள்ளதால், சீனாவும் பாகிஸ்தானும் அதிர்ந்து போயியுள்ளனர்.

உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இஸ்ரோ & டிஆர்டிஓ

உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இஸ்ரோ & டிஆர்டிஓ

நேற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இணைந்து விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கலை அடைந்து இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

பூமியின் சுற்றுப்பாதையில் அச்சுறுத்தலாக இருப்பவற்றை இலக்காககொள்ளும் வகையிலான ஏவுகணைகளை வெற்றிகரமாக இவ்விரு அமைப்புகளும் பரிசோதித்துள்ளன. மிஷன் சக்தி என்ற ASAT தொழில்நுட்பத்தின் மூலம் நம் நாடு விண்வெளி வல்லரசு ஆகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் விஞ்ஞான மற்றும் மூலோபாய முன்னேற்றங்களில் இந்தியாவை தலைநிமிர வைத்த இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ ஆகியவற்றின் சமீபத்திய முக்கிய பங்களிப்புகளை நாம் இங்கே காணலாம்.

1.ரோபோ காவல்

2017 ஆம் ஆண்டில் டி.ஆர்.டி.ஓ ரோபோசென் என்ற ரோபோவை வெளியிட்டது. இது முக்கியமான அரசாங்க அல்லது இராணுவ பகுதிகளில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படக்கூடியது. மொபைல் ஆட்டோமேசன் மூலம் இயங்கும் இதை தொலைதூரமாக கட்டுப்படுத்தவும், ரோந்து பாதையில் பயன்படுத்தவும் முடியும். பின்னர் அதன் கேமரா மற்றும் சென்சார்களை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான பொருள்களைப் போன்றவை புகைப்படம் எடுத்து அருகில் உள்ள வயர்லெஸ் கட்டளை மையத்திற்கு அனுப்பும்.

2.தானாக வெளியேறும் கருப்பு பெட்டி

2.தானாக வெளியேறும் கருப்பு பெட்டி

விமான விபத்து ஏற்பட்டால் அதற்கான காரணத்தைத் தீர்மானிக்க உதவும் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. எனவே விபத்தின் போது தானாக வெளியேறும் வகையில் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது வெடித்து வெளியேறும் திறன் கொண்ட கருப்புபெட்டியை டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ளது.

3. ஆளில்லா இராணுவ டாங்கி

3. ஆளில்லா இராணுவ டாங்கி

அதே வருடம் பாதுகாப்பு குழு முந்த்ரா எனும் ஆளில்லா பீரங்கி டாங்கியை நாட்டிற்கு அர்பணித்தது. கண்காணிப்பு கண்டறிதல் மற்றும் மறுசீரமைப்புக்கு என மூன்று வகையிலான இந்த இராணுவ டாங்கிகளை,15கிமீ தொலைவில் இருந்து இயக்கலாம்.

4.ரஸ்டம் ட்ரோன்

4.ரஸ்டம் ட்ரோன்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் முழுதும் உள்நாட்டிலேயே தய்ரிக்கப்பட்ட இந்தியாவின் இராணுவ ட்ரோனை தனது முதல் விமானத்தில் வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ. ரஸ்டம் 2 என பெயரிடப்பட்டுள்ள இது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்களுக்கு மாற்றாக ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வாகனமாக பயன்படுத்தப்படவுள்ளது.

5.எமிசேட்

5.எமிசேட்

அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள எமிசேட், டிஆர்டிஓ-வின் மற்றொரு மைல்கல் ஆகும். நிலப்பகுதி வரைபடங்களை சேகரிப்பதை தவிர, எதிரிநாட்டு தகவல்தொடர்பு அமைப்புகளை கண்டறியும் திறனையும் கொண்டுள்ளது இந்த செயற்கைக்கோள்.

6.மங்கள்யான் மிஷன்

6.மங்கள்யான் மிஷன்

இது செவ்வாய் சுற்றுப்பாதை மிஷன் (எம்ஓஎம்) மட்டுமில்லாமல், விண்வெளிக்கு இந்தியாவின் முதல் பெரிய விண்கலம் என்பதால் மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இதுவரையிலான செவ்வாய் கிரக பயணத்தில் மிகவும் மலிவான விண்வெளிப் பயணமாக இதற்கு இஸ்ரோ, தனது 460 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெறும் 2.61 கோடியை மட்டுமே செலவளித்தது.

7. ஜிசாட்

7. ஜிசாட்

இஸ்ரோ அனுப்பிவரும் ஜிசாட் செயற்கைக்கோள் மூலம் இந்தியா 100Gbps இணைய வேகத்தை பெற முடியும். கூடுதலாக இந்திய இராணுவத்தின் தொலைதொடர்பு மற்றும் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் இந்த வலையமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Double Bullseye ISRO Launches Intel Satellite Days After ASAT : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more