மனிதர்களை போல் போதைக்கு அடிமையாகும் டால்பின்கள்! விஞ்ஞானிகள் போட்டு உடைத்த உண்மை!

|

பூமியில் மனிதர்களைப் போலப் பல உயிரினங்களுக்கு சில வகையான போதை பழக்கம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உதாரணத்திற்குக் குதிரைகள் மயக்கம் ஏற்படுத்தும் களைகளை ஆர்வமாகத் தேடி உட்கொள்கின்றன, அதேபோல் யானைகள் பழுத்த பழங்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் உச்ச நிலைக்குச் செல்கின்றன, இந்த வரிசையில் தற்பொழுது டால்பின்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

விசித்திரமான போதை பழக்கத்தை கொண்ட உயிரினங்கள்

விசித்திரமான போதை பழக்கத்தை கொண்ட உயிரினங்கள்

இந்த உயிரினங்கள் போல ஆடுகள் போதை லிச்சென் தாவரங்களை விரும்பி உண்கின்றன, குரங்குகள் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் எத்தனால் கொண்ட பழங்களை அதிகம் விரும்பி உண்கின்றன, இது போன்ற சில உணவுப் பழக்கத்தின் மூலம் இந்த உயிரினங்கள் போதையில் இருப்பது போன்ற உச்சநிலையை அடைந்து, இயல்புக்கு மாறாக விசித்திரமாக நடந்து கொள்ளுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

டால்பின் மீன்களும், பஃபர் ஃபிஷ் மீன்களும்

டால்பின் மீன்களும், பஃபர் ஃபிஷ் மீன்களும்

இந்த வரிசையில் டால்பின் மீன்களும் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தின் மூலம் இந்த உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களுக்கு எப்படி ஆல்கஹால் போதையூட்டுகிறதோ, அதேபோல் டால்பின் மீன்களுக்கு பஃபர் ஃபிஷ் மீன்களின்(puffer fish) உடலில் இருந்து வெளிவரும் ரசாயன நஞ்சு போதையேற்றுகிறது என்று தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பார்த்தால் டால்பின்களுக்கு குஷி

இவற்றை பார்த்தால் டால்பின்களுக்கு குஷி

இந்த பஃபர் ஃபிஷ் மீன்களை, டால்பின்கள் பார்த்தால் குஷியாகிவிடுகின்றன, அவற்றை நேரடியாக அதன் வாயில் கடித்து நீந்துகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஃபர் ஃபிஷ் மீன்களின் உடலின் உள்ள முட்களில் சிறிய அளவு நஞ்சு தன்மை இருக்கிறது. இந்த மீன்களை வேறு மீன்கள் வேட்டையாடும் போது பஃபர் ஃபிஷ் மீன்கள் தனது உடலை காற்றடைத்த பந்து போல மாற்றி அதன் உடலில் உள்ள முட்களைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துகின்றன.

இப்படி தான் டால்பின்கள் போதையாகின்றது

இதை டால்பின்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றியுள்ளது. பஃபர் ஃபிஷ் மீன்களின் உடலிலிருந்து வெளியேறும் நஞ்சுகள் மூலம் டால்பின்கள் போதையாகின்றன என்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஃபர் ஃபிஷ் மீன்களை தாக்கிய பின்னர் டால்பின்கள் கடலின் அடிப்பகுதிக்குச் சென்று தங்களின் நிழல்களைப் பார்த்து விசித்திரமாக நடந்துகொள்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பஃபர் ஃபிஷ் மீன்களின் நஞ்சில் உள்ள நன்மை

பஃபர் ஃபிஷ் மீன்களின் நஞ்சில் உள்ள நன்மை

பஃபர் ஃபிஷ் மீன்களை டால்பின்கள் போதைக்காகப் பயன்படுத்துவது இப்போது தெரியவந்துள்ளது. பஃபர் ஃபிஷ் மீன்கள் தனது பாதுகாப்பிற்காக இந்த சக்திவாய்ந்த இரசாயனத்தை உருவாக்குகிறது, குறிப்பாக பஃபர் ஃபிஷ் மீன்கள் அச்சுறுத்தும் போது இவற்றை வெளியேறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பஃபர் ஃபிஷ் மீன்களின் கொடிய நஞ்சு கீமோ நோயாளிகளுக்கு மருந்தாக உதவக்கூடும் என்று சில ஆராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கின்றது.

Best Mobiles in India

English summary
Dolphins Seem to Use Toxic Puffer fish to Get High Like Humans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X