டைம் டிராவல் : வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள்.!!

By Meganathan
|

டைம் டிராவல் அல்லது காலப்பயணம் சார்ந்த குழப்பத்திற்கு இன்று வரை பதில் இல்லை என்றாலும், இதனை நிரூபிக்கும் வகையிலோ அல்லது குழப்பத்தைத் தூண்டும் வகையிலோ பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இணையத் தொகுப்பில் காலப்பயணம் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட காலப்பயணம் குறித்த தகவல்கள் ஸ்லைடர்களில்..

மரணம்

மரணம்

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முப்பது வயது மிக்க ருடோல்ஃப் ஃபென்ட்ஸ் என்பவர் கார் விபத்தில் மரணித்தார். மரணித்தவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்.

விசாரணை

விசாரணை

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கார் விபத்தில் மரணித்த ருடோல்ஃப் 1876 ஆம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனது தெரிய வந்தது.

மான்டாக் திட்டம்

மான்டாக் திட்டம்

மான்டௌக் விமான நிலையத்தில் பரிமாணங்களுக்கிடையே அமைந்திருக்கும் சுரங்கங்கள் ஆய்வாளர்களை 1943 ஆம் ஆண்டிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

துவக்கம்

துவக்கம்

ஆய்வகங்களில் பணியாற்றிய நினைவுகளை நினைவு கூறும் போது ப்ரெஸ்டன் பி. நிக்கோலஸ் மற்றும் அல் பெய்லக் என்ற ஆய்வாளர்கள் 1980களில் இதனைத் தெரிவித்தனர்.

பிலாடெல்ஃபியா ஆய்வு

பிலாடெல்ஃபியா ஆய்வு

பென்சில்வேனியாவின் பிலாடெல்ஃபியா கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்கக் கப்பல் படையினர் மேற்கொண்ட ஆய்வு தான் பிலாடெல்ஃபியா ஆய்வு என அழைக்கப்படுகின்றது.

யுஎஸ்எஸ் எல்ட்ரிட்ஜ்

யுஎஸ்எஸ் எல்ட்ரிட்ஜ்

அமெரிக்கக் கப்பல் படையின் யுஎஸ்எஸ் எல்ட்ரிட்ஜ் போர் கப்பல் 10 விநாடிகள் பின்னோக்கி பயணித்ததாகக் கூறப்படுகின்றது. இந்தப் பயணத்தில் பலர் மரணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர் விக்டர் கொடார்டு விமானம்

சர் விக்டர் கொடார்டு விமானம்

பிரிட்டன் விமானப் படை அதிகாரியான சர் விக்டர் கொடார்டு தனது விமானத்தை எடின்பர்க் பகுதியில் கைவிடப்பட்ட ட்ரெம் விமானத் தளத்தின் மேல் பறந்து கொண்டிருந்தார். மீண்டும் அதே வழியில் திரும்பும் பொழுது கைவிடப்பட்ட ட்ரெம் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு அங்கு நான்கு மஞ்சள் நிற விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.

ராயல் விமானப் படை

ராயல் விமானப் படை

பின் 1939 ஆம் ஆண்டு ராயல் விமானப் படை செயல்படத் துவங்கி அதன் விமானங்கள் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டன. ஒரு வேலை விக்டர் அவ்வழியாகத் திரும்பும் போது எதிர்காலத்தைக் கடந்து வந்தாரா என்ற கேள்வி இன்றளவும் எழுகின்றது.

கல்லறை

கல்லறை

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீன தொல்லியல் துறையினர் சி குயிங் கல்லறையைத் திறந்தனர். இந்தக் கல்லறை சுமார் 400 ஆண்டுகளாகத் தொந்தரவு செய்யப்படாமல் இருந்தது. இப்பகுதியைத் திறக்கும் போது சிறிய அளவிலான கை கடிகாரம் ஒன்றை கண்டெடுத்தனர், அதில் நேரம் 10.06 என்ற மணியில் அப்படியே நின்று போயிருந்தது.

ஸ்விஸ்

ஸ்விஸ்

கண்டெடுக்கப்பட்ட கை கடிகாரத்தில் 'Swiss' என அச்சிடப்பட்டிருந்தது. 400 ஆண்டுகளாகத் தொந்தரவு செய்யப்படாமல் இருந்த கல்லறையில் கை கடிகாரம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்றும் பதில் இல்லை.

Best Mobiles in India

English summary
Documented Cases of Possible Time Travel Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X