நாளை நிகழும் சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய & செய்ய கூடாத செயல்கள்!
ஜூலை 2 ஆம் தேதி, தென் பசிபிக் பிராந்தியத்தில் மொத்த சூரிய கிரகணம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நிகழ உள்ள சூரிய கிரகணம் மனித உடலில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் செய்ய கூடாத செயல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

கவலை அளிக்கும் சூரிய கிரகணம்
இந்த நிகழ்வு சில்லி, அர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகிலுள்ள பகுதிகளில் தெளிவாகக் காணமுடியும். இந்தியாவில் இந்த முறை சூரிய சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்க முடியாதென்பது சற்று கவலை அளிக்கிறது. இருப்பினும் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து இடங்களிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நிமிடம் நடைபெறும் சூரிய கிரகணம்
இந்த மொத்த சூரிய கிரகணம் அமெரிக்க நேரத்தின்படி 12.55 மதியம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரத்தின்படி இரவு 10.25 மணிக்கும் நிகழும் என்பதனால் இந்தியர்கள் நேரத்தில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாது. இருப்பினும் ஆன்லைன் இல் நேரலை மூலம் மக்கள் இந்த சூரிய கிரகணத்தைக் காணலாம்.

நேரலையில் சூரிய கிரகணம் காண
நாளை நிகழும் இந்த சூரிய கிரகணத்தை நேரலையாக பார்க்க விரும்பினால் இந்த தளத்திற்கு செல்லுங்கள் www.exploratorium.edu, அதேபோல் உங்கள் போனில் நேரலையைத் தடை இல்லாமல் பார்ப்பதற்குப் பிரத்தியேக மொபைல் ஆப் செயலிகளும் உள்ளது அவற்றை டவுன்லோட் செய்யஇந்த டவுன்லோடு லிங்க்கிளிக் செய்யுங்கள்.

சூரிய கிரகணம் தொடர்பான விஷயங்கள்
இந்த முழு சூரிய கிரகணம், நான்கு நிமிடங்கள் 33 வினாடிகள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் தொடர்பான பல நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன, மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விஷயங்கள் பொதுவாக இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

மக்கள் செய்ய வேண்டிய செயல்கள்
- சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய செயல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- சூரிய கிரகணத்திற்குப் பிறகு குளித்துவிட்டு புதிய ஆடைகளுக்கு மாறுவதை இந்தியாவில் பலரும் பின்பற்றுகின்றனர்.
- கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
- கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும் என்று கூறப்படுகிறித்து.
- அப்புறப்படுத்த முடியாத உணவைத் துளசி இலைகளைப் பயன்படுத்தி பாதுகாக்காது கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சூரிய பகவான் மற்றும் இறைவனைத் மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
- சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்யக் கூடாதா செயல்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- கிரகணத்தின் போது மக்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது.
- கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.
- நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது.

மக்கள் செய்யக் கூடாதா செயல்கள்


Click it and Unblock the Notifications