மறைந்து கிடந்த மாயன் நகரம், காட்டிக் கொடுத்த கூகுள் மேப்..!

|

சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் மாயன் நாகரீகமானது, அறுவடை முதல் மரணம் வரையிலாக அனைத்தையும் வானவியலை கொண்டே அறிந்து கொள்ளும் அளவிற்கு மாபெரும் ஞானத்தை கொடிருந்துள்ளன என்றும் நம்பப்படுகிறது.

பிற நாகரீகம் போலின்றி மாயன் நாகரீகம் வாழந்த பெரும்பாலான பகுதிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று நம்பப்படும் நிலையில் தற்போது மெக்சிகன் காட்டில் மறைந்து கிடந்த மாயன் நகரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

#1

#1

மெக்சிகன் காட்டில் மறைந்து கிடந்த மாயன் நாகரீகத்து நகரத்தை வில்லியம் காடொரி (William Gadoury) என்ற பதினைந்து வயது சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.

#2

#2

பண்டைய மெக்சிகன் மக்களின் வானியல் அட்டவணை, செயற்கைகோள் புகைப்படங்கள் ஆகியவைகளை ஆராய்ந்து மறைந்து கிடந்த மாயன் நகரத்தை வில்லியன் கண்டுப்பிடித்துள்ளான்.

#3

#3

கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தை சேர்ந்த வில்லியம் யுகடன் காட்டில் காக் சீ (Yucatan jungle K'aak Chi) என்னும் பிரதேசத்தில் தான் கண்டுபிடித்த மாயன் நகரத்திற்கு லாஸ்ட் சிட்டி (Lost City) என்று பெயர் சூட்டியுல்லான், அதவாது தொலைந்த நகரம்.

#4

#4

கண்டுப்பிடிக்கப்பட்ட லாஸ்ட் சிட்டியின் செயற்கைகோள் புகைப்படம் ஆனது, அங்கு ஒரு பிரமிட் உருவம் போன்ற வடிவமைப்பை காட்சிபடுத்துகிறது.

#5

#5

மேலும் செயற்கைக்கோள் படங்களை ஆராயும்போது, 300 மற்றும் 700 கி.பி. இடையே செழித்த மற்றும் மிக பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட பண்டைய நாகரிகமாக மாயன் நாகரீகம் இருந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

#6

#6

வழக்கம்போல் இந்த நகரம் நதியோரத்தில் ஏன் கட்டமைக்கப்படவில்லை என்பதற்கு நட்சத்திர அமைப்பின் மூலம் விடை கண்டறிந்துள்ளார் வில்லியம்.

#7

#7

அதாவது, மாயன்கள் நட்சத்திரங்களை வழிபடுபவர்கள் என்றும் அவர்கள் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டே நகரங்களை கட்டமைத்ததாகவும் வில்லியம் உருவாக்கிய கோட்பாடு விளக்கம் அளிக்கிறது.

#8

#8

அதவாது 23 மாயன் நட்சத்திர அமைப்பு உள்ளது அவைகளை இணைத்தால் மொத்தம் 142 நட்சத்திரங்கள் என மொத்தம் 177 மாயன் நகரங்கள் இணைக்கப்படுகிறது என்கிறது வில்லியமின் கோட்பாடு..!

#9

#9

வில்லியமின் இந்த ஆய்விற்கு கனடாவின் விண்வெளி ஏஜென்சி மற்றும் கூகுள் எர்த் செயற்கைகோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

#10

#10

அதவாது மிகவும் பிரகாசமான நட்சத்திரங்களின் கீழ் வரிசைப் படுத்தப்பட்டு மிகவும் பெரிய அளவிலான மாயன் நாகரீகத்து நகரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது மிகவும் அசாதரணமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

#11

#11

பண்டைய மாயன் காலத்து நாகரீகம் பற்றிய பெரிய அளவிலான புரிதலை பெற உதவும் மாபெறும் ஐந்து பண்டைய மாயன் நகரங்களில் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட நகரமும் ஒன்றாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

#12

#12

பெர்முடா முக்கோணத்திற்குள்ளே : புதிய சர்ச்சை கிளப்பும் ஜெர்மன் கடல் ஆய்வாளர்..!


பனிக்கட்டிப் பாலைவனத்தின் கீழ் புதைந்து கிடக்கும் 'ரகசியம்'..?!

#13

#13

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : நாசா, கூகுல் எர்த், கனடா விண்வெளி ஏஜென்சி

Best Mobiles in India

English summary
Discovered a forgotten Mayan City hidden in the Mexican jungle by studying constellations. Read more about this in Tamil GizBOt.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X