பெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..

|

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபத்தில் 'டைனோசர் முட்டைகள்' கண்டுபிடிக்கப்பட்டதாகப் படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டின் 'ஜுராசிக் பார்க்' பெரம்பலூர் தான் என்ற லெவலில் செய்திகள் தீயாய் பரவியது.

இது டைனோசர் முட்டைகளே இல்லை

இது டைனோசர் முட்டைகளே இல்லை

தீயாய் பரவிய காட்டுத்தீயில் நீரை ஊற்றி அணைத்ததுபோல, பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளே இல்லை என்று ஆராய்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.பெரம்பலூர் பகுதியில் கிடைத்த கட்டமைப்புகள் அனைத்தும் டைனோசர் முட்டைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் பகுதியில் கிடைத்த மர்ம பொருள் என்ன தெரியுமா?

பெரம்பலூர் பகுதியில் கிடைத்த மர்ம பொருள் என்ன தெரியுமா?

பெரம்பலூர் பகுதியில் கிடைத்த மர்ம பொருட்கள் அனைத்தும் உண்மையில் அம்மோனைட் (ammonite) உயிரினத்தின் படிவு என்பதை வல்லுநர்கள் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளனர். உள்ளூர் புவியியல் மற்றும் தொல்பொருள் ஆர்வலர்கள் குழு அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, 'டைனோசர் முட்டைகள்' கண்டுபிடிக்கப்பட்ட கூற்றை மறுத்துவிட்டது.

என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்..என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்..

அம்மோனைட்ஸ் (ammonoids) உயிரினங்கள்

அம்மோனைட்ஸ் (ammonoids) உயிரினங்கள்

அம்மோனைட்ஸ் (ammonoids) உயிரினங்கள் சுமார் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டெவோனியன் (Devonian) காலத்தில் உயிர்வாழ்ந்தவை என்று தகவல் தெரிவிக்கிறது. இவை டெவோனியன் காலத்தில் எழுந்த ஒரு பெரிய மற்றும் மாறுபட்ட கடல் உயிர் இனம் என்று இதன் வரலாற்றுத் தகவல் தெரிவித்துள்ளது.

டைனோசர் முட்டைகள் என்று பரவிய பொய்யான தகவல்

டைனோசர் முட்டைகள் என்று பரவிய பொய்யான தகவல்

நிபுணர்களின் குழு குன்னம் தொட்டி எனப்படும் நீர்நிலைகளில் இந்த அம்மோனைட் படிவுகளைக் தற்பொழுது கண்டறிந்துள்ளது."இந்த கடல் உயிரினங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒத்திசைவு செயல்பாட்டின் காரணமா சிக்கியிருக்க வேண்டும் என்றும், இவை டைனோசர் முட்டைகள் என்று தவறாகக் கருதப்பட்டது, "என்று நிபுணர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரமேஷ் கருப்பையா கூறியுள்ளார்.

ATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா? எவ்வளவு என்று தெரியுமா?ATM இயந்திரத்தில் இனி ரூ. 5000-திற்கு மேல் பணம் எடுக்க கட்டணமா? எவ்வளவு என்று தெரியுமா?

ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்த பகுதி

ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்த பகுதி

தமிழ்நாட்டின் தற்போதைய அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் கடற்பரப்பாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.அம்மோனைட்டுகள் அழிந்துபோன கடல் இனங்கள், அவை சுமார் 416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்தவையாகும். "அம்மோனைட்" என்ற பெயர் அவற்றின் புதைபடிவ ஓடுகளின் சுழல் வடிவத்தால் உருவாக்கப்பட்டது.

குழப்பம் ஏற்பட காரணம் இது தான்

குழப்பம் ஏற்பட காரணம் இது தான்

இவை பார்ப்பதற்குச் சுருண்ட ஆட்டுக்கடாக்களின் கொம்புகளைப் போன்றது, இந்த உயிரினங்கள் ஆக்டோபஸ்கள், ஸ்க்விட் மற்றும் கட்டில்ஃபிஷ் போன்ற உயிரினங்களுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.பல மில்லியன் நூற்றாண்டுகளாகப் பூமிக்குள் புதைந்து கிடந்த அம்மோனைட்கள், உருளை பாறைகளாக உருவம் மாறி, முட்டை போன்ற வடிவத்தில் கண்டுபிடிக்கப்பட்டதினால் இவை டைனோசர் முட்டைகள் என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

பெரம்பலூர் ஜுராசிக் பார்க் கதைக்கு The End

பெரம்பலூர் ஜுராசிக் பார்க் கதைக்கு The End

உண்மையில் இவை டைனோசர் முட்டை இல்லை என்பதும், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் அம்மோனைட்ஸ்கள் தான் என்றும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பெரம்பலூர் ஜுராசிக் பார்க் கதைக்கு தி எண்டு (The End) போடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Dinosaur Eggs Found In Tamil Nadus Perambalur Turn Out To Be Ammonite Sediments : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X