அப்பல்லோ 11: கடைசியில இத கவனிக்க மறந்துட்டமே.! வசமாக சிக்கிய நாசா.!

By Vivek
|

விண்வெளியின் பூரணமான இருளை பின்புலமாக கொண்டு நிலவின் நாட்டப்பட்ட நீண்டு நிற்கும் அமெரிக்கக் கொடியின் அருகே நின்று, நிலவு பரப்பில் பஷ் ஆல்ட்ரின் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதுவரை எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான புகைப்படங்களில் ஒன்றாகும்.

கவனிக்க தவறிவிட்டனர்

கவனிக்க தவறிவிட்டனர்

ஆனால் மில்லியன் கணக்கான மக்கள் இந்த புகைபடத்தை பார்த்திருக்கும் நிலையில், பெரும்பாலானோர் அவரது விண்வெளி உடையினால் மூலம் மறைக்கப்பட்ட அந்த விண்வெளி வீரரின் முகத்தை கவனிக்க தவறிவிட்டனர்.

முகத்தை மெதுவாக வெளிப்படுத்தியுள்ளார்

முகத்தை மெதுவாக வெளிப்படுத்தியுள்ளார்

இருப்பினும் நிலவு தரையிறங்கல் நிகழ்வு நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு அனுபவமில்லா புகைப்படக் கலைஞர் புகைப்படத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த படத்தை சிரமமின்றி மீட்டெடுத்து ஆல்ட்ரின் புன்னகையை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

45 வயதான ஏன்டி சாண்டர்ஸ் எனும் அந்த புகைப்பட கலைஞர், இப்புகைப்படத்தின் நிழல்களை பிரகாசமாக்கி இருட்டடிப்பு செய்து, பெரும்பாலும் ஒரு நேரத்தில் சில பிக்சல்களை அவ்வாறு செய்து, மங்கலான ஹெல்மெட் கண்ணாடிக்கு அடியில் உள்ள முகத்தை மெதுவாக வெளிப்படுத்தியுள்ளார்.

 பல மணிநேரம் செலவிட்டார்

பல மணிநேரம் செலவிட்டார்

ஆல்ட்ரின் முக அம்சங்களின் வெளிப்பாடு சற்று தெளிவானவுடன், ஒரு சமயத்தில் சிறு பகுதிகளின் செறிவு மற்றும் மாறுபாட்டை மாற்றியமைக்க பல மணிநேரம் செலவிட்டார் ஏன்டி. கேமராவை எதிர்கொள்ள தலையைத் திருப்பியபோது, அந்த ​​விண்வெளி வீரர் ஒரு புன்னகையை உதிர்ப்பது முதல்முறையாக வெளிப்பட்டது. முன்னதாக அவரது பிரதிபலிப்பின் காரணமாக அது மறைக்கப்பட்டது.

ஜூலை 1969 இல்

ஜூலை 1969 இல்

ஜூலை 1969 இல் ஆல்ட்ரின் அமெரிக்கக் கொடியுடன் ஒரு கம்பத்தை நிலவு மேற்பரப்பில் நட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த படத்தை சக விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங் எடுத்தார். இது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான புகைப்படங்களில் ஒன்றாக மாறியது. எம்டிவி அதை சந்தைப்படுத்த பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க கொடிக்கு பதிலாக அதன் சொந்த லோகோவை அதில் வைத்தது.

அப்பல்லோ 11

அப்பல்லோ 11

அப்பல்லோ 11நிலவில் தரையிறங்கிய 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக ஏன்டி இந்த படத்தை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ' உண்மையான படத்தில் பஷ்-ன் தெரிந்ததை எத்தனை பேர் உணர்ந்தனர் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த புகைப்படம் பில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டிருக்க வேண்டும். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது எல்லா காலத்திற்குமான மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். மேலும் இதில் புதைந்துள்ள விசயங்களை நான் வெளிப்படுத்த முடிந்தது பெருமையாக உள்ளது. இதை நான் முதலில் செய்திருந்தாலும், அது உண்மையில் தொழில்நுட்பமானது அல்ல. நான் புகைப்பட செயலாக்க கருவிகளையும், அர்ப்பணிப்பையும் மட்டுமே பயன்படுத்தினேன்." என்கிறார்.

மைக்ரோஃபோனை அடையாளம் காண முடிந்தது

மைக்ரோஃபோனை அடையாளம் காண முடிந்தது

அவர் மேலும் கூறுகையில், " நான் ஒளி மாறுபாட்டை மாற்றியதுடன் ஒலியைக் குறைத்து எண்ணற்ற அடுக்குகளின் சிறப்பம்சங்களைத் திருத்தினேன்.டாட்ஜிங் மற்றும் பர்னிங் எனப்படுவதை நான் பயன்படுத்தினேன். இது அடிப்படையில் இலகுவான புள்ளியை இலகுவாகவும், இருண்ட புள்ளியை மேலும் இருட்டாகவும் ஆக்குகிறது. நான் அவரது முகத்திற்கு அருகிலிருந்த மைக்ரோஃபோனை அடையாளம் காண முடிந்தது.அங்கிருந்து அவரது கண்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு அதற்கு அடியில் இருப்பதை அம்பலப்படுத்த ஒரு சமயத்தில் இரு பிக்சல்கள் தொகுப்போடு வேலை செய்தேன்.ஆனால் புகைப்படத்தில் எதுவும் நகலெடுக்கப்படவில்லை. எல்லா தரவுகளும் ஏற்கனவே உள்ளது தான். நான் வெறுமனே அதை மேம்படுத்தினேன். இதைச் செய்ய எனக்கு பல மணிநேரம் ஆனது ' என்றார்.

டாக்டர் ராபர்ட் மாஸ்ஸி

டாக்டர் ராபர்ட் மாஸ்ஸி

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏன்டி இதே நுட்பங்களை நாசா வீடியோ காட்சிகளில் அப்பல்லோ 11 இல் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கும் புகைப்படங்களுக்கும் பயன்படுத்தினார். அதை செய்ய அவருக்கு பல நாட்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.


ஏன்டி மேலும் கூறுகையில்: 'அவை அத்தகைய மிகபிரபலமான புகைப்படங்கள் மற்றும் 50 வது ஆண்டுவிழாவில் அவர்களின் முகங்களை காண முடிந்தது என்பது உண்மையில் மிக நெகிழ்வான ஒன்று. இப்போது தான் நாம் அவர்களின் ஜோடியை விண்வெளியில் பார்க்க முடிகிறது. இது அப்பல்லோ 11 தருணத்தை நிறைவு செய்கிறது. ' என தெரிவித்தார்.


ராயல் வான்அறிவியல் சங்கத்தின் டாக்டர் ராபர்ட் மாஸ்ஸி கூறுகையில் 'விண்வெளியில் விண்வெளி வீரர்களின் முகங்களை காட்டும் புகைப்படங்கள் இல்லை. எனவே இது 1960களில் மனிதர்களின் நிலவு பயணத்தை திரும்பி பார்க்கும் ஒரு தருணம்" என்றார்.

Best Mobiles in India

English summary
Digitally enhanced photo reveals Buzz Aldrins smile beneath spacesuit Apollo 11 landing : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X