Subscribe to Gizbot

இந்த சிக்னல் மேட்டர்ல ஸ்டீபன் ஹாக்கிங்கே ஏமாந்து விட்டாரே.?!

Written By:

அன்னிய நாகரிகத்தின் (அதாவது வேற்றுகிரகவாசிகளின்) இருப்பைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசும் உலக புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் - ஏலியன்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிப்பதோடு, விண்வெளிக்கு செல்லாதவரை மனித இனத்தின் அழிவை தடுக்க முடியாது என்று கூறிவரும் மறுகையில், 100 மில்லியன் டாலர் செலவிலான பிரேக்த்ரூ லிசன் என்ற ஏலியன் தேடல் சார்ந்த பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சிக்னல் மேட்டர்ல ஸ்டீபன் ஹாக்கிங்கே ஏமாந்து விட்டாரே.?!

சமீபத்தில் (ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம்) இந்த தேடல் முயற்சியில் 15 வேகமான ரேடியோ வெடிப்புகளை பிரேக்த்ரூ லிசன் குழு கைப்பற்றியது. இவைகள் கிடைக்கப்பெற்ற உடனேயே "மிகவும் சத்தியமான ஏலியன் சமிக்ஞைகள்" என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவிற்கு வந்தன. ஆனால், அது மிகவும் அவசரமானதொரு முடிவென்பதை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை விளக்கியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எங்கிருந்து வந்தது.? உண்மையில் தெரியாது.!

எங்கிருந்து வந்தது.? உண்மையில் தெரியாது.!

ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் அல்லது எப்ஆர்பி-கள் (Fast radio bursts or FRBs) என்பது தொலைதூர மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பிரகாசமான ப்ல்ஸ்களின் ரேடியோ உமிழ்வுகளாகும் பிரேக்த்ரூ லிசன் திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியாவை சேர்ந்த விஷால் கஜார் மூலம் கண்டறியப்பட்ட "சமீபத்திய 15 ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி நமக்கு உண்மையில் தெரியாது.

வெளி கிரகத்திலிருந்து வந்தது என்ற முடிவானது தவறு.!

வெளி கிரகத்திலிருந்து வந்தது என்ற முடிவானது தவறு.!

ஆதாரங்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமான கோட்பாடுகள் உள்ளதால், பதில்களை விட அதிகமான கேள்விகளே இங்குள்ளது. மேலும் பல ஆய்வுகள் செய்வதின் மூலமாகேவ இன்னும் பல வித்தியாசமான விடயங்களை கண்டறிய முடியும் என்ற நிலைபாட்டில் இந்த சிக்னல்கள் வெளி கிரகத்திலிருந்து வந்தது என்ற முடிவானது தவறு என்பதை உணர்த்தும் ஐந்து காரணங்களை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

காரணம் #01

காரணம் #01

வெடிப்புகள் ஒரு பொதுவான நிகழ்வாகும். சாட்சியின் அடிப்படையில், விண்வெளி முழுவதும் ஒவ்வொரு நாளும் 10,000-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட எப்ஆர்பி (FRB) வெடிப்புகள் நிகழ்கின்றன. அவைகள் சக்தி வாய்ந்தவைகளாக இருந்தாலும் அதன் பல்ஸ்கள் காலப்போக்கில் ஒழுங்கற்றவையாகி, ஆற்றலில் மாறுபடும். இது இயற்கையானது, செயற்கையானது அல்ல (அதாவது நாகரீக வளர்ச்சியினால் தூண்டப்பட்டவைகள் அல்ல)

காரணம் #02

காரணம் #02

மேலே குறிப்பிட்டபடி, எப்ஆர்பி சமிக்ஞைகள் மாறும் தன்மை கொண்டவைகள். ஆக அதன் ஆற்றல் அடர்த்தி, சமிக்ஞை வலிமை, நேர இடைவெளிகள் போன்ற அனைத்து இயல்பான நிகழ்வுகளும் அதுவொரு இயற்கையான செயல்முறை என்பதற்கான அத்தாட்சிகள் ஆகும்.

காரணம் #03

காரணம் #03

கடந்த காலங்களில் செயலில் இருந்த விண்மீன் திரள்கள், மாபெரும் கருந்துளைகள் மூலமாக இதுபோன்ற ரேடியோ சமிக்ஞைகளை உருவாகியுள்ளன. ஆக, இந்த அண்டம் எப்ஆர்பி வெளிப்பாடு போன்ற குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது என்பது வெளிப்படை.

காரணம் #04

காரணம் #04

எப்ஆர்பி(FRB)க்கள் மனிதனின் வலுவான டிரான்ஸ்மிஷன்களை விட 1019 மடங்கு பலமானவைகளாகும். அதிகமானவை. கிடைக்கப்பெற்ற எப்ஆர்பிக்கள் அந்த அளவிலான சக்தியும், மைக்ரோ- எப்ஆர்பிக்கள் இல்லாமலும் உள்ளன.

காரணம் #05

காரணம் #05

எப்ஆர்பி-க்கான பல விண்வெளி இயற்பியல் விளக்கங்கள் உள்ளன. அவைகளில் - ஏஜிஎன் என்றழைக்கப்டும் செயல்பாட்டு மண்டல மையங்கள் (Active galactic nucleus - AGN) மற்றும் மேக்னடார்ஸ் என்று கூறப்படும் மிகவும் சக்திவாய்ந்த காந்தப் புலம் கொண்ட நட்சத்திர வகைகள் ஆகிய பொதுவான கோட்பாடுகளின் இடையே ஏலியன் கோட்பாடு ஒப்பிட முடியாத ஒன்றாகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Did Stephen Hawking's Breakthrough initiative detect signals, 5 reasons why it's a hasty conclusion. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot