அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் கேலி செய்கிறாரா ? அல்லது புதிய கண்டுபிடிப்புக்கு விளம்ரம் செய்கிறாரா?

“நான் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள அறையில் இந்தக் காட்சியைப் பார்த்தேன்.

|

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெப் பெஜோஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படத்தினை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு பல யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது. "சக்கரத்தின் மேல் நகரும் அலெக்ஸா (Alexa-on-wheels)," எனச் சொல்லத் தக்க வகையில் இருந்த அந்தப் படத்தின் மூலம் பெஜோஸ் சொல்ல வரும் செய்தி என்ன என்பதுதான் குழப்பமாக உள்ளது. மின் வணிகத்தில் உச்சத்தில் இருக்கும் நிறுவனமான அமேசான், வீட்டு வேலைகளுக்கு உபயோகமாக இருக்கும் ரோபோவைத் தயாரித்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறதா என எண்ணத் தோன்றும் வகையில் அந்தப் பதிவு இருந்தது.

வீட்டில் உள்ள தூசு மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யும் வட்ட வடிவ ரோபோ இயந்திரத்தின் மீது அலெக்ஸா ஸ்பீக்கரைப் பொருத்தி அதனைச் சுற்றி நீல நிற டேப்களை ஒட்டவைத்துள்ள காட்சிதான் இன்ஸ்டாகிரமில் பதிவிடப்பட்டு இருந்தது. அவருடைய குழந்தைகள் செய்த குறும்புத்தனமான வேலையா? அல்லது தன்னுடைய கம்பெனியின் புது ரோபோ தயாரிப்புக்கான முன்னோட்ட விளம்பரமாக இதைப் பதிவிட்டிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

ஜெப் பெஜோஸ்

ஜெப் பெஜோஸ்

"நான் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள அறையில் இந்தக் காட்சியைப் பார்த்தேன். எனக்கு இதைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை" என்று ஜெப் பெஜோஸ் அந்தப் படத்தின் கீழ் பதிவிட்டிருந்தார். லைஃப் வித் போர் கிட்ஸ் (#LifeWithFourKids) என்னும் ஹேஸ்டேக்கில் இந்தப் பதிவை ஜெப் பெஜோஸ் செய்திருந்தார். உலகின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெஜோஸ், அமேசான் நிறுவனம் மட்டும் அல்லாமல், புளு ஆர்ஜின் (Blue Origin) என்னும் தனியார் விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அமெரிக்காவின் பழமையான பத்திரிகை நிறுவனமான தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பங்குகளின் பெரும் பகுதி இவரிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

எக்கோ ரோபோ

எக்கோ ரோபோ

அமேசான் நிறுவனம் புதிய மொபைல் எக்கோ ரோபோவை (mobile Echo robot) தயாரித்து வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக புளும்பொ்க் நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.

பெஜோஸ்

பெஜோஸ்

ஜெப் பெஜோஸ் தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக ஏதேனும் ஒரு புதிய பொருளை வெளியிடுவதற்கான குறிப்பினை இப்பதிவின் மூலம் உலகுக்கு அறிவித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "அலெக்ஸாவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதனை எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இயக்கக் கூடிய வகையில் தொழில் நுட்பத்தைக் கொடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என ஜெப் பெஜோஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட் மொபைல் போன் வெளியிடும் திட்டமும் இவரிடம் இருப்பதாகத் தெரிகிறது.

அறையைச் சுத்தம் செய்யும்

அறையைச் சுத்தம் செய்யும்

அல்லது ஜெப் பெஜோஸின் குழந்தைகள், அறையைச் சுத்தம் செய்யும் Roomba ரோபோவையும் அலெக்ஸாவையும் இணைத்து விளையாட்டுக்காக அவ்வாறு செய்திருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Did Bezos just tease Amazon plan for Alexa-on-wheels home robot: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X