38 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கும் 'தேசி போபர்ஸ்' தனுஷ் பீரங்கி.!இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு.!

இந்திய இராணுவ படைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக, தனுஷ் பீரங்கி இன்று இந்திய இராணுவத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது.

|

இந்திய இராணுவ படைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக, தனுஷ் பீரங்கி இன்று இந்திய இராணுவத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது.

தனுஷ் 155 மிமீ / 45 காலிபர் பீரங்கி

தனுஷ் 155 மிமீ / 45 காலிபர் பீரங்கி

உள்நாட்டிலேயே முதல் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தனுஷ் 155 மிமீ / 45 காலிபர் டோவ்டு கன் தொழில்நுட்ப பீரங்கி இந்திய இராணுவத்திடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம்

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம்

இந்த புதிய தனுஷ் பீரங்கியில் இருக்கும் 85 சதவீத பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

"தேசி போபர்ஸ்"

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போபர்ஸ் பீரங்கியை விடக் கூடுதலாக 11 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட விதத்தில்,இந்த தனுஷ் பீரங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனுஷ் பீரங்கிக்கு "தேசி போபர்ஸ்" என்ற பெயரும் இடப்பட்டுள்ளது.

38 கிலோ மீட்டர் வரை துல்லியமாக தாக்கும் பீரங்கி

38 கிலோ மீட்டர் வரை துல்லியமாக தாக்கும் பீரங்கி

குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சரியாக 38 கிலோ மீட்டர் வரை துல்லியமாக இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கக் கூடிய வல்லமை கொண்டது. இந்த பீரங்கியின் விலை சுமார் 14 கோடியே 50 லட்சம் ஆகும்.

இந்திய இராணுவத்தில் 114 தனுஷ் பீரங்கிள்

இந்திய இராணுவத்தில் 114 தனுஷ் பீரங்கிள்

பனிப்பிரதேசம், பாலைவனம் போன்ற பல இடங்களில், பல கட்ட சோதனைக்குப் பின் தனுஷ் பீரங்கி இந்திய இராணுவத்தில் இன்று சேர்க்கப்படுகிறது. இந்திய இராணுவத்தின் கீழ் 114 தனுஷ் பீரங்கிகளை இந்தியா சேர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் பீரங்கி இந்திய இராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Desi Bofors Dhanush to be inducted into Indian Army on Monday : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X