இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!

|

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி கிழக்கு அண்டார்டிக்காவில் உள்ள பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பகுதி சுமார் 3.5 கிலோமீட்டர், அதாவது கடல்மட்டத்திலிருந்து 11,500 அடி ஆழத்தில் இந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதி

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதியைப் பனிப்பாறை வல்லுநர்கள் அண்டார்டிக்காவின் பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நிலத்தின் வரையறைகளின் மிகத் துல்லியமான உருவப்படத்தையும் தற்பொழுது அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பெட்மெஷின் அண்டார்டிக்கா திட்டம்

பெட்மெஷின் அண்டார்டிக்கா திட்டம்

பெட்மெஷின் அண்டார்டிக்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தலைமையிலான 19 நபர் கொண்ட குழு, பனி தடிமன் தரவைப் பயன்படுத்தி இந்த விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். இது 1967 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ரேடார் ஒலியைக் காட்டிலும் பல மில்லியன் வரி மைல் ரேடார் ஒலிகளை உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!வாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது! உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

100 கிலோமீட்டர் நீளம்

100 கிலோமீட்டர் நீளம்

பூமியின் மிக ஆழமான நிலப்பரப்பு பகுதியை என்று கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியின் அளவு என்னவென்று தெரியுமா? இந்த பகுதி சுமார் 20 கிலோமீட்டர் அகலமும், 100 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளதென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதுபோன்ற ஆழமான பகுதிகள் காணப்படும்.

டெட் ஸி

டெட் ஸி

இதற்கு முன்பு வரையில் நீர்ப்பரப்பை உள்ளடக்கிய பூமியின் ஆழமான இடம் எது என்று கேட்டால், டெட் ஸியின் (Dead Sea) மையப்பகுதிக்கு அருகே உள்ள இடம் சுட்டிக்காட்டப்படுகிறது. டெட் ஸியின் மையப்பகுதியில் இருக்கும் இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1355 அடி ஆழத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா?

மிகவும் கடினமான பனிக்கட்டி

மிகவும் கடினமான பனிக்கட்டி

தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாள் இந்த இடம் மிகவும் கடினமான பனிக்கட்டிகளாலும் சூழ்ந்துள்ளது. இங்குள்ள பனிக்கட்டிகள் அதிக அடர்த்தியுடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார். அதேபோல் இந்த பகுதி இருட்டு பிரதேசமாகவும் காட்சியளிப்பதாக நீண்டநாள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அறிவியலாளர் மார்லிகம் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Deepest point on land found in Antarctica : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X