சூரியக்குடும்பத்தை நோக்கி வரும் 24 விண்மீன்கள் பூமியுடன் மோதுமா.?

|

நமது சூரிய குடும்பத்தை நோக்கி செல்லும் 24 நட்சத்திரங்களில் பல வால்மீன்கள் பூமியை நோக்கி திசைதிருப்பப்படலாம். இதன் விளைவாக அடுத்த மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளில் பூமி மீது அவைகள் மோதல்கள் நிகழ்தலாமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூரியக்குடும்பத்தை நோக்கி வரும் 24 விண்மீன்கள் பூமியுடன் மோதுமா.?

ஊர்ட் மேகங்கள் (Oort) எனப்படும் நமது சூரிய மண்டலத்தை மூடிமறைக்கும் எண்ணம் கொண்ட பில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருள்களின் ஒரு பரந்த, கோள வடிவிலான மேல் ஓடுகளில் இருந்து எத்தனை நட்சத்திரங்கள் அடிக்கடி வீழ்கிறதென்ற ஆய்வை ஜெர்மனியில் உள்ள விண்வெளி ஆய்விற்கான மாக்ஸ் பிளாங்க் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இத்தகைய நெருக்கமான சந்திப்புகளில், தளர்வான சுற்றுப்பாதைகளை கொண்ட வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டலத்திற்குள் வீசியெறியப்படும் அந்த வீச்சில் பூமி கிரகத்தின் மீதும் மோதல் நிகழ்வை அவைகள் ஏற்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

சூரியக்குடும்பத்தை நோக்கி வரும் 24 விண்மீன்கள் பூமியுடன் மோதுமா.?

அடுத்த பில்லியன் ஆண்டுகளுக்குள், சுமார் 3.26 ஒளியாண்டு தொலைவிற்குள் இருந்து வீசப்படும் 19 முதல் 24-க்கும் மேலான நட்சத்திரங்கள் சூரியன் அருகாமையில் தங்களது அசல் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு கணித்துள்ளது.

அனைத்து நெருங்கிய சந்திப்புக்களுமே பூமியை தாக்கும் வால்மீன்களுக்கு வழிவகுக்கும் என்று அர்த்தமில்லை. பூமியின் சுற்றுப்பாதையில் மிகவும் துல்லியமாக கடந்து செல்லும் விண்மீன்களே மோதல்களை நிகழ்த்தும் என்றுகூறும் ஆராய்ச்சியாளர்கள் இருப்பினும் இந்த வகை மோதல் வாய்ப்புகள் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கும் சுமார் 490 முதல் 600 நட்சத்திரங்கள் சூரியனை 16.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் கடந்து செல்லும் என்றும் கூறியுள்ளது.

சூரியக்குடும்பத்தை நோக்கி வரும் 24 விண்மீன்கள் பூமியுடன் மோதுமா.?

இந்த ஆய்வின் அறிக்கையானது வானியல் மற்றும் வானியற்பியல் பத்திரிகையில் (Journal Astronomy and Astrophysics) வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Decoded: Here's how stars can cause comets to strike Earth. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X