விண்வெளியில் இறந்து போகும் வீரர்களை, நாசா என்ன செய்கிறதென்று தெரியுமா.?

பழங்கால ஸ்டார் டெர்க் கோட்பாடு போல, இறந்தவர் உடலை நேரடியாக விண்வெளியில் செலுத்தி விட்டு விடலாம். ஆனால், ஒரு சக விண்வெளி வீரரிடம் இருந்து எவரும் இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்க மாட்டார்கள்.

|

1971-ஆம் ஆண்டு, ஜூன் 31-ஆம் தேதி, 3 விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியத்தின் சோயுஸ் 11 விண்கலம் (Soyuz 11 spacecraft) விண்வெளியில் இருந்து பூமி கிரகத்திற்குள் மறுநுழைவு செய்கிறது.

விண்கலத்தினுள் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாக (depressurization) அதில் இருந்த மொத்த குழுவும் (விளாடிஸ்லாவ் வோல்கோவ், ஜோர்ஜி டோப்ரோவோல்ஸ்கி மற்றும் விக்டர் பட்சயெவ்) மரணித்தது. இதுதான் 'முதலும் கடைசியுமான' விண்வெளி மரணம் ஆகும்.

மரணம் என்பது மிகவும் சத்தியமான ஒன்று

மரணம் என்பது மிகவும் சத்தியமான ஒன்று

விண்வெளியில் வீரர்கள் இறந்து போனால் அவர்களை என்ன செய்வார்கள் என்பது இன்று வரையிலாக ஒரு அனுமான சூழ்நிலை தான், அதாவது என்ன செய்யலாம்.? என்ற யோசனைகளால் மட்டுமே நிறைந்தது . இருப்பினும் கூட செவ்வாய் கிரக பயணம் போன்ற மனித இனத்தின் மாபெரும் வருங்கால ஆய்வுகளில் மரணம் என்பது மிகவும் சத்தியமான ஒன்று என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

3 பிரச்சனைகள் எழும்

3 பிரச்சனைகள் எழும்

சோவியத் ஒன்றியத்தை போல ஒருமுறை கூட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தனது விண்வெளி வீரரை உயிரிழக்க செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது நீடிக்குமா என்பது கேள்விகுறி தான். பெரும்பாலான விபத்துக்கள் ராக்கெட் ஏவும் போதும், விண்கலம் தரை இறங்கும் போதும் தான் ஏற்படுகிறது. மீறி, இந்த இரண்டிற்கும் நடுவில் மரணம் நிகழ்ந்தால் - அதாவது விண்வெளியில் மரணம் நிகழ்ந்தால், 3 பிரச்சனைகள் எழும்.

பிரச்சனை #01 :

பிரச்சனை #01 :

இறந்தவரை விண்கலத்திலேயே லாக்கரில் வைக்க இயலாது, ஏனெனில் அது சக வீரர்களை மனதளவில் மற்றும் உடலளவில், மிகவும் பாதிக்கும்.

பிரச்சனை #02 :

பிரச்சனை #02 :

விண்வெளியில் கல்லறை ஒன்றை வடிவமைப்பது பல மில்லியன் டாலர்கள் திட்டமாகும், அதுமட்டுமின்றி நாசாவிடம் அதுபோலோரு திட்டம் கிடையவே கிடையாது. அதுமட்டுமின்றி இறந்தவர் இறந்தவர்தான், மறுபடி ஒரு விண்கலம் அவரது உடலை பூமிக்கு கொண்டு வருவதற்குள் அவரின் பாதிக்கும் மேற்பட்ட உடல் அழிந்து போயிருக்கும் என்பது தான் நிதர்சனம்.

பிரச்சனை #03 :

பிரச்சனை #03 :

பழங்கால ஸ்டார் டெர்க் கோட்பாடு போல, இறந்தவர் உடலை நேரடியாக விண்வெளியில் செலுத்தி விட்டு விடலாம். ஆனால், ஒரு சக விண்வெளி வீரரிடம் இருந்து எவரும் இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த கொடிய காரியத்தை செய்யும் மனதைரியம் கொண்ட சக வீரர்கள் இருப்பினும் கூட உலக விண்வெளி சட்டத்தின் கீழ் இது குற்றமாகும்.

குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!

விண்வெளிக்குள் செலுத்தப்பட கூடாது

விண்வெளிக்குள் செலுத்தப்பட கூடாது

எந்த விதமான பொருளும் விண்வெளிக்குள் செலுத்தப்பட கூடாது. அவைகள் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் பிற விண்வெளி பொருட்களின் மீது மோதி செயலிழக்க செய்யக்கூடும். ஆக மேற்கூறிய எந்த விதமான செயலையும்' விண்வெளியில் நிகழ்த்த முடியாது. இந்த விண்வெளி மரணம் சார்ந்த விடயத்தில் சிறந்த நடைமுறை என சமீப ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு முறை தான் - 'பாடி பேக்' (Body Back).

பவுடர் போல் ஆகும் வரை

பவுடர் போல் ஆகும் வரை

இந்த முறையிலான இறுதி சடங்கு, பசுமை முறையிலான நல்லடக்கம் செய்யும் நிறுவனமான ப்ரோமெஸ்சா (Promessa) உடன் இணைந்து நாசா நிகழ்த்த இருக்கிறது. அதாவது விண்வெளியில் இறந்தவர் உடலை ஒரு பையில் 'ஸிப்' (Zip) செய்ய வேண்டும், பின்பு அதை விண்வெளியில் உறைய வைத்து, சிறுசிறு துகள்களாகும் வரையிலாக (பவுடர் போல் ஆகும் வரையிலாக ) வைப்ரேட் செய்ய வேண்டும்.

சீனா மீது இந்தியா அணு ஆயுதம் வீசினால், சீனாவின் நிலை இதுதான்.! சீனா மீது இந்தியா அணு ஆயுதம் வீசினால், சீனாவின் நிலை இதுதான்.!

எதிர்காலத்திற்காக..

எதிர்காலத்திற்காக..

இது மிகவும் செலவு நிறைந்த ஒரு காரியமாகினும் கூட கொடுமையான ஒன்றாக இல்லை என்பது தான் வாதம். செவ்வாய் கிரகம் போன்ற மிக நீளமான மற்றும் சிக்கலான விண்வெளி பயணங்கள் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நிலையில், விண்வெளி மரணம் மற்றும் அடக்கம் சார்ந்த விடயங்களில் மேலும் நல்ல நல்ல திட்டங்கள் அவசியமான ஒன்றாகும்.

Best Mobiles in India

English summary
Death in space: The ethics of dealing with astronauts' bodies. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X