அதிர்ந்து போன வானம்.. விண்கல் மோதலில் நடந்தது என்ன? வியக்க வைத்த James Webb உண்மை!
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட DART மோதலின் படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
DART ஸ்பேஸ் கிராஃப்ட் மற்றும் விண்கல் மோதலை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இடதுபுறத்தில் இருந்தும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வலதுபுறத்தில் இருந்தும் காட்சிகளை பதிவு செய்துள்ளது.

டார்ட் மிஷின் நிகழ்வுகள்..
இந்த டார்ட் மிஷின் நிகழ்வுகளை அப்போதே டார்ட் சமூகவலைதளப் பக்கம் மற்றும் நாசா வெளியிட்டாலும். ஜேம்ஸ் வெப் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த துல்லியமான படங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
வெப் மற்றும் ஹப்பிள் ஆகிய இரண்டு தொலைநோக்கியும் ஒரே நேரத்தில் பால்வெளியில் நடந்த நிகழ்வை காட்சியாக பதிவு செய்தது இதுதான் முதன்முறை.

டார்ட் ஸ்பேஸ் கிராஃப்ட் மோதல்..
டார்ட் ஸ்பேஸ் கிராஃப்ட் மோதியதில் Dimorphos விண்கல்லில் எவ்வளவு தாக்கம் ஏற்பட்டது என்பதை வெப் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி துல்லியமாக காட்டி இருக்கிறது.
இரண்டு தொலைநோக்கி மூலமாகவும் தாக்கத்தின் சில மணிநேரங்களுக்கு முன்பு இருந்த நிலையும் தாக்கத்தின் போது நடந்த நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனி இந்த இரண்டு தொலைநோக்கியும் விண்கல் பாதையை கண்காணிக்கும் என கூறப்படுகிறது. அது என்ன டார்ட் மிஷின், விண்கல்லில் ஏன் மோதியது என்ற கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம்.

எதிர்கால நோக்கத்துடன் செயல்பட்ட நாசா
விண்கல்லில் இருந்து பூமியை பாதுகாக்கும் முயற்சி தான் நாசாவின் டார்ட் மிஷன் ஆகும். இது மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். டைனோசர் என்ற உயிரினம் விண்கல் விழுந்து அளிந்தது எனவும் அந்த விண்கல் விழுந்த போது ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிட முடியாதது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மீண்டும் அதுபோன்ற ஒரு விண்கல் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?.
இதை யோசித்த நாசா இதற்கான தீர்வாக தான் இந்த டார்ட் மிஷினைத் தொடங்கியது.
சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் ஆபத்தான விண்கல்
பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் ஆபத்தான விண்கல்லை கண்டறிந்து அதை தகர்த்து பூமியை பாதுகாப்பதே டார்ட் மிஷினின் நோக்கமாகும். மிஷினை வெற்றிகரமாக தொடங்கி முடித்த நாசா, அதை சோதனை செய்ய திட்டமிட்டது.
இதற்காக எப்போது விண்கல் பூமியை நோக்கி வரும் என்று காத்திருக்க முடியாது. அந்த நேரத்தில் சோதனை முயற்சி எதுவும் இல்லாமல் நேரடியாக செயல்படுத்தவும் முடியாது. இதையடுத்து நாசா பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லில் டார்ட் மிஷின் சோதனை செய்யப்பட்டது.

நாசாவின் டார்ட் மிஷின்
விண்வெளியில் Dimorphos மற்றும் Didymos என்ற இரண்டு விண்கல்கள் அருகருகே இருக்கிறது. இதில் டிடிமோஸ் சிறுகோளின் நிலவு போல் டீமோர்போஸ் இருக்கிறது. இந்த இரண்டு கோள்களாலும் பூமிக்கு ஆபத்து என்று கூறிவிட முடியாது. ஆனால் பூமிக்கு அருகில் இருக்கும் இரண்டு சிறுகோள்கள் இது.

டீமோர்போஸை தாக்கிய நாசா
இந்த சிறுகோள்கள் பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. இதில் டீமோர்போஸ் சிறுகோளை தான் நாசாவின் டார்ட் மிஷின் தாக்கி இருக்கிறது.

மையத்தை தாக்கிய ஸ்பேஸ் கிராஃப்ட்
Double Asteroid Redirection Test (Dart) மிஷின் ஆனது பூமியை நோக்கி வரும் விண்கல்லை ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்கி அதை தகர்த்துவது அல்லது அதன் பாதையை மாற்றுவது தான் நோக்கம்.
திட்டமிட்டபடி ஸ்பேஸ் கிராஃப்ட் சரியாக 24,000 கிலோமீட்டர் வேகத்தில் டீமோர்போஸ் விண்கல்லின் மையப்பகுதியில் தாக்கியது.

வெப் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி
மையத்தில் தாக்கியது வெற்றியாக கருதப்பட்டாலும், வரும் காலங்களில் அந்த விண்கல்லை கண்காணித்து அதன் பாதை நிர்ணயித்தப்படி திசை மாறினால் தான் முழு வெற்றியாகும். இந்த விண்கல்லின் பாதையை வெப் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கி கண்காணிக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications