கே. இனூய் சூரிய தொலைநோக்கி: சூரியனை மிக நெருக்கமாக படம் பிடித்து சாதனை.!

|

புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிவியல் சார்ந்த விளக்கங்களை நமக்கு எளிதாக புரிதல் செய்கிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி சூரியனை ஆய்வு செய்ய டேனியல் கே.இனூய் சூரிய தொலைநோக்கியை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை அமைத்துள்ளது. உள்ளது. குறிப்பாக இது ஹவாயில் உள்ள ஹலேகலே என்ற எரிமலை பகுதியில் அமைந்துள்ளது.

தொலைநோக்கி

தொலைநோக்கி

மேலும் சூரியனை முன்னோடியில்லாத வகையில் விரவாகக் காண தொலைநோக்கி கண்ணாடியைக் கொண்டுள்ளது,என இது சூரிய தொலை நோக்கியில் மிகப்பெரியது என்றுதான் கூறவேண்டும். இது வாணியாலார்களுக்கு இணையற்றசிறந்த பார்வை கோணங்களை வழங்குகிறது.

 சூரிய மேற்பரப்பு

சூரிய மேற்பரப்பு

தற்சமயம் இந்த டேனியல் கே. இனூய் சூரிய தொலைநோக்கி சூரியனை மிக நெருக்கமாக படம் பிடித்துள்ளது. அதுவும்இதுவரை எடுக்கப்பட்ட சூரிய மேற்பரப்பு படங்களைவிட மிக உயர்ந்த தெளிவித்திறன் கொண்ட படத்தை எடுத்துள்ளது.

கர்நாடகா கண்டக்டரானாலே அதிர்ஷ்டம் போல: அரசு பேருந்து கண்டக்டராக இருந்து IAS, IPS தேர்வில் தேர்ச்சிகர்நாடகா கண்டக்டரானாலே அதிர்ஷ்டம் போல: அரசு பேருந்து கண்டக்டராக இருந்து IAS, IPS தேர்வில் தேர்ச்சி

ரோலிங் பிளாஸ்மா

குறிப்பாக இது சூரிய அறிவியலின் புதிய யுகத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் சூரியதொலைநோக்கியின் இந்த படம் ஆனது சூரியனின் மேற்பரப்பை உருவாக்கும் ரோலிங் பிளாஸ்மாவில் உள்ளவடிவங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த புகைப்படம் 789நானோ மீட்டரில் எடுக்கப்பட்டது. இப்படம் முழு
சூரியனையும் உள்ளடக்கிய கொதிக்கும் வாயுவின் வடிவத்தைக் காட்டுகிறது. ஒவ்வொரு கலத்திலும் பிரகாசமான பாகங்கள்உள்ளன.

 சூரியனின் பிளாஸ்

இப்போது வெளியிடப்பட்ட படங்களில் உள்ள முக்கிய விவரங்கள் சூரியனின் பிளாஸ்மாவைக் காட்டுகின்றன. மேலும்இந்த படம் 22,600 சதுர மைல் (36,500 கிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் டெக்சாஸ் அளவிலா செல்கள் வெப்பச்சலனத்தை உருவாக்க உதவுகின்றன.

விண்வெளி வானிலை

விண்வெளி வானிலை

இந்த படத்தின் மூலம் சூரியனுக்குள் இருந்து வெப்பம் மேற்பரப்பு வரை இழுக்கப்படுகிறது, அதே நேரத்தில்மற்ற செல்கள் குளிர்ந்து அதன் அடியில் மூழ்குகிறது. இந்த தொலைநோக்கி ஆனது விண்வெளி வானிலைஎது என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதோடு, சூரிய புயல் குறித்து அறிவிக்கும் வானிலைஆய்வாளர்களுக்கு சிறந்த முறையில் உதவும்.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!

 6,000 கெல்வின் வெப்ப நிலையை  கொண்டது

6,000 கெல்வின் வெப்ப நிலையை கொண்டது

குறிப்பாக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியேறி, சூரிய மண்டலத்தின் குறுக்கே ஆற்றல்மிக்க துகள்களைவீசுகிறது. சூரியனின் கொரோனா, வெளிப்புற வளிமண்டலம் உண்மையான மேற்பரப்பை விட மிகவும் வெப்பமானது. கொரோனா ஒரு மில்லியன் டிகிரி கெல்வின், மேற்பரப்பு 6,000 கெல்வின் வெப்ப நிலையைகொண்டது.

சூரியக் காற்றைப் புரிந்துகொள்வது

சூரியக் காற்றைப் புரிந்துகொள்வது

மேலும் சூரிய காற்றை புரிந்துகொள்வதும், கொரோனவின் ஏரியும் வெப்பமும் மிகவும் முக்கியம், இவை இரண்டும்விண்வெளி வானிலை மற்றும் சூரிய புயல்களில் ஒரு பங்கை கொண்டுள்ளன. பின்பு சூரியக் காற்றைப் புரிந்துகொள்வது விண்வெளி வானிலை பற்றி நன்கு கணிக்க உதவும்.

 மின்னணு அமைப்புகள்

மின்னணு அமைப்புகள்

நமது மின்னணு அமைப்புகள் மற்றும் நெட்வொர்க்குகளை சீர்குலைக்கும் அளவுக்கு பெரிய விண்வெளி சூப்பர் புயல்கள்25
ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது என புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபெக்கில் ஒரு பெரிய சக்தி இருட்டடிப்புக்கு காரணமான 1989 ஆம் ஆண்டில் ஒரு புயலை ஆராய்ச்சியாளர்கள்
மேற்கோள் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Staggering New Images of The Sun Are The Most Detailed Ever Taken : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X