பரபரப்பை கிளப்பிய நாசாவின் புதிய தகவல்! செவ்வாய் கிரகத்தில் உயிர்களா?

|

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தின் அமைப்புகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆராயப் பல விதமான செயற்கைக்கோள்கள் அதை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர்.

க்யூரியாசிட்டி ரோவர்

க்யூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்த செயற்கைக்கோள்களில் மிக முக்கியமான செயற்கைக்கோள் தான் க்யூரியாசிட்டி ரோவர், இந்த ரோவர் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏரியாக இருந்ததாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தின் கேல் கிரேட்டரில் இறங்கி ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. க்யூரியாசிட்டி ரோவர் சமீபத்தில் புதிய தகவல் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

சாம்பிள் அனாலிசிஸ் அட் மார்ஸ்

சாம்பிள் அனாலிசிஸ் அட் மார்ஸ்

இந்த ரோவர் அனுப்பும் தகவல் சாம்பிள் அனாலிசிஸ் அட் மார்ஸ் (Sample Analysis at Mars, SAM) என்ற வேதியல் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுகிறது.செவ்வாய் கிரகத்தின் எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்த கூடம் ஆராய்ந்து அதன் பண்டை காலத்து அம்சங்களையும், வாழ்வியலையும் அறிந்துகொள்ள ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு ஆராய்ச்சியில் தான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததும், மார்டியன் பாறையில் ஆர்கானிக் மூலக்கூறுகள் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேல் கிரேட்டரில் பனி படர்ந்த ஏரி

கேல் கிரேட்டரில் பனி படர்ந்த ஏரி

சமீபத்தில் கிடைத்த குறிப்புகளின்படி கேல் கிரேட்டரில் பனி படர்ந்த ஏரி இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் ஒரு புவி வேதியியலாளரான ஹீதர் ஃபிரான்ஸ் இதைப் பற்றிக் கூறும் பொழுது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு சூடான வெப்பநிலையில் இருந்து, ஒரு கட்டத்தில் ஈரப்பதமாக மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த மாற்றம் எப்பொழுது நிகழ்ந்திருக்கும் என்று இன்னும் சரியாக அறியப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் புதிய தகவலை வெளியிட்ட குழு

செவ்வாய் கிரகத்தின் புதிய தகவலை வெளியிட்ட குழு

கோளின் ஆச்சு சாய்ந்ததினாலோ அல்லது எரிமலை சீற்றத்தினாலோ இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் யூகிக்கின்றனர். தற்போது இருக்கும் குளிர்ந்த வறண்ட நிலையை அந்த கிரகம் இத்தகைய மாற்றத்தினால் தன் அடைந்துள்ளது என்றும் கருதுகின்றனர். செவ்வாய் கிரகத்தில் ஃபிரான்ஸ் மற்றும் அவருடைய குழு கண்டுபிடித்த தகவலின் விவரத்தை இப்பொழுது விரிவாகப் பார்க்கலாம்.

13 பாறைகள் மற்றும் தூசி மாதிரிகள்

13 பாறைகள் மற்றும் தூசி மாதிரிகள்

கேல் கிரேட்டரில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளான 13 பாறைகள் மற்றும் தூசிகளை 900 டிகிரி செல்சியஸில் சூடாக்கும் பொழுது அதில் சேகரிக்க பட்டிருக்கும் பல வித வாயுக்கள் வெளியே வரும். இதில் ஒவ்வொரு விதமான வாயுக்களும் வெவ்வேறு வெப்பநிலையில் வெளியேறும். அந்த வெப்பநிலை கொண்டு அந்த சமயத்தில் வெளியேறும் வாயுவை பற்றிய குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த தகவலைக் கொண்டு செவ்வாய் கிரகத்தின் கார்பன் சைக்கிளை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

சிவப்பு கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா?

சிவப்பு கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா?

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, மேற்பரப்பு பாறைகள், துருவத் தொப்பிகள், நீர் மற்றும் வளிமண்டலம் என்று இந்த வாயு சுழன்று கொண்டே இருக்கும் பண்பைத் தான் கார்பன் சைக்கிள் என்று கூறுவார். இன்றும் இந்த நிகழ்வு செவ்வாய் கிரகத்தில் அதன் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல், சிவப்பு கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வேதியல் கூறுகளின் சுழற்சி

வேதியல் கூறுகளின் சுழற்சி

SAM பற்றிய முதன்மை ஆய்வாளர் பால் மஹாஃபியின் குறிப்பு படி இந்த கார்பன் சைக்கிள் சுழற்சியின் மூலம் செவ்வாய் கிரகத்தின் காலநிலையை அறிவது மட்டுமின்றி, அங்கு உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளையும் இந்த முயற்சியின் மூலம் அறியப்படலாம் என்று நம்புகிறார். ஏனெனில் வேதியல் கூறுகளின் சுழற்சியே உயிரினங்கள் உருவாவதற்கான அடிப்படை என்று முதன்மை ஆய்வாளர் பால் மஹாஃபி கூறியுள்ளார்.

ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடின் ஐசோடோப்கள்

ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடின் ஐசோடோப்கள்

ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடின் ஐசோடோப்களை ஆராயும் பொழுது பாறைகள் உருவான விதம் மற்றும் உயிரினங்கள் உருவான விதங்களைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்ளமுடியும். செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட கார்போனேட்களில் வளிமண்டலத்தில் இருப்பதை விட மிகவும் லேசான ஆக்சிஜன் ஐசோடோப்புகள் அமைந்துள்ளன. இது குளிர்ந்த சூழலில் உருவான கார்போனேடாக இருக்கும்.

பூமியில் உள்ள ஆக்சாலேட்

பூமியில் உள்ள ஆக்சாலேட்

சூடான சூழலில் உருவான கார்போனேடாக இருந்தால் வளிமண்டலத்தில் இருப்பதை விட கனமான ஆக்சிஜன் ஐசோடோப்புகளாக அமைந்திருக்கும். கார்போனேட்களை தவிர ஆக்சாலேட்டும் அந்த கிரேட்டரில் கண்டறிய பட்டுள்ளது. சில வாயுக்கள் கார்போனேட்டில் இருந்தும் சில வாயுக்கள் ஆக்சாலேட்டில் இருந்தும் வெளியிட படுகின்றன. நமது பூமியில் தாவரங்களின் வாழ்வியலுக்கு ஆக்சாலேட் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்ஸெவேரன்ஸ் ரோவர்

பெர்ஸெவேரன்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்தில் ஆக்சாலேட் இருப்பதை வைத்து அங்கே பண்டைக்காலத்தில் உயிரினங்கள் இருந்தன என்று உறுதியாகக் கூறிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சில தகவல்களை SAM பின்னரே ஆக்சாலேட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி முழுமையாக அறிய முடியும். கேல் கிரேட்டரை போல் ஜெசரோ கிரேட்டரை பற்றி ஆராய பெர்ஸெவேரன்ஸ் ரோவர் நாசா மூலம் செவ்வாய் கிரகத்திற்குச் செலுத்தப்பட உள்ளது.

விரைவில் ஆதாரம் வெளியிடப்படும்

விரைவில் ஆதாரம் வெளியிடப்படும்

இந்த பெர்ஸெவேரன்ஸ் ரோவர் பண்டைக் காலத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான சான்றுகளைச் சேகரிக்க பிரத்தியேகமாக வடிவமைத்து, உருவாக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ளது . இந்த பெர்ஸெவேரன்ஸ் ரோவரின் கண்டுபிடிப்புகள் மூலம் SAMன் தற்போதைய கண்டுபிடிப்பிற்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Curiosity Rover Finds Evidence For Ancient Ice-Covered Lake On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X