செவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்!

இப்போதைக்கு எம்எஸ்எல் க்யூரியாசிடி விண்கலம் மவுண்ட ஷார்ப் பகுதியில் களிமண்ணை தேடி பாறைகளை ஆய்வு செய்துவருகிறது.

|

களிமண் என்பது செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரிய விசயம், ஏனென்றால் அது பெரும்பாலும் தண்ணீருடன் தொடர்பு கொள்வதன் மூலமே உருவாகிறது. எனவே களிமண்ணை கண்டுபிடிப்பதன் மூலம் வழக்கமாக நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியும். செவ்வாய் கிரகத்தின் இயல்பு, வரலாறு, தற்போதைய நீர் அளவு அனைத்தும் அந்த கிரகத்தை புரிந்து கொள்ள மிகவும் முக்கியமானவை மற்றும் இதன் மூலம் அங்கு உயிரினங்கள் எப்போதாவது வாழ்ந்தனவா என்பதையும் அறிய முடியும்.

க்யூரியாசிடி விண்கலம்

க்யூரியாசிடி விண்கலம்

இப்போதைக்கு எம்எஸ்எல் க்யூரியாசிடி விண்கலம் மவுண்ட ஷார்ப் பகுதியில் களிமண்ணை தேடி பாறைகளை ஆய்வு செய்துவருகிறது. மவுண்ட் ஷார்ப்-ல் களிமண் இருப்பதற்கான ஆதாரங்களை முதன்முதலாக ஆர்பிட்டர் விண்கலங்கள் கண்டுபிடித்தன. நாசா எம்எஸ்எல் க்யூரியாசிடி விண்கலம் தரையிறங்கும் தளமாக பள்ளத்தாக்கை தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணம், இப்பள்ளதாக்கின் உள்ளே உள்ள மவுண்ட் ஷார்ப்-ல் களிமண் ஆகும்.

"அபெர்லேடி" மற்றும் "கில்மேரி"

'களிமண் தாங்கி அலகு' என்று நாசாவால் அழைக்கப்படக்கூடிய இரண்டு பாறைகளின் மாதிரியை க்யூரியாசிடி விண்கலம் சேகரித்து ஆராய்ந்த பிறகு, அதில் களிமண் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


உண்மையில் இதுவரை க்யூரியாசிடி கண்டுபிடித்ததிலேயே இந்த இரண்டு பாறைகளில் தான் மிகவும் அதிக அடர்த்தியுள்ள களிமண் காணப்படுகிறது. இவ்விரு பாறைகளும் "அபெர்லேடி" மற்றும் "கில்மேரி" என்று அழைக்கப்படுகின்றன. இது மிஷனின் முதன்மை நோக்கமாக கருதப்படும் மவுண்ட் ஷார்பின் கீழ் பகுதியில் இவ்விரு பாறைகளும் அமைந்துள்ளன.

மவுண்ட் ஷார்ப்

மவுண்ட் ஷார்ப்

மவுண்ட் ஷார்ப் பள்ளத்தாக்கின் தரைப்பகுதியில் இருந்து 5.5 கிமீ (18,000 அடி) உயரத்திற்கு இருப்பதால், இது செவ்வாய் கிரகவியல் அமைப்பில் அணுகக்கூடிய அடுக்கு ஆகும். இது காலப்போக்கில் காற்றோட்டத்தின் காரணமாக பல்வேறு அடுக்குகள் வெளிப்பட்டு, க்யூரியாசிடி விண்கலம் துளையிட்டு ஆய்வுசெய்ய எளிதான இலக்குகளை உருவாக்கியுள்ளது.

எயோலிஸ் மோன்ஸ்

எயோலிஸ் மோன்ஸ் என்று அழைக்கப்படும் மவுண்ட் ஷார்ப் எவ்வாறு உருவானது என்பதை அறிந்துகொள்வதில் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர், பண்டைய தாக்கத்தை ஏற்படுத்திய பள்ளதாக்கான கேல் பள்ளத்தாக்கு முன்னர் தண்ணீரால் நிரம்பியிருந்திருக்கும் எனவும், மேலும் வண்டல் ஏரியின் கீழே சேகரமாகும் என்பதால் இந்த மவுண்ட் ஷார்ப் சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக உருவாகியிருக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

 வண்டலால் நிரம்பியிருந்து

வண்டலால் நிரம்பியிருந்து

ஒரு காலத்தில் பள்ளத்தாக்கு முழுவதும் வண்டலால் நிரம்பியிருந்து, பின்னர் படிப்படியாக அரிப்பு ஏற்பட்டு இறுதியில் மவுண்ட் ஷார்ப் மட்டும் எஞ்சியிருக்கலாம்.


மவுண்ட் ஷார்ப் உருவான கால அளவு தொடர்பாக சில நிச்சயமற்றதன்மை நிலவி வரும் நிலையில், க்யூரியாசிடி அதை கண்டுபிடிக்கும் என நம்பலாம். எப்படியிருந்தாலும் மவுண்ட் ஷார்ப் வண்டல் படிமங்களின் அரிப்பினால் உருவானது போல தெரிந்தாலும், க்யூரியாசிடி தொடர்ந்து அதன் ஆய்வை நடத்திவருவதால் விஞ்ஞானிகள் இறுதியாக எப்படி அது உருவானது என்ற தெளிவான பார்வையை பெறலாம்.

ஏரியின் அடிப்பகுதியில்

ஏரியின் அடிப்பகுதியில்

க்யூரியாசிடி விண்கலத்தின் புதிய கண்டுபிடிப்புகளில் எதிர்பார்க்கப்பட்டபடி, கேல் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் தண்ணீர் மிகுதியாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் அந்தத் தவிர, மற்ற விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டும்.


இந்த மலையின் கீழ் வரம்பில் உள்ள களிமண் நிறைந்த பாறைகள் ஏரியின் அடிப்பகுதியில் வண்டலாக உருவாகியிருக்கலாம் என்று தெரிகிறது. புவியியல் காலகட்டத்தில், தண்ணீர் மற்றும் வண்டல் களிமண் ஆகியவை இணைந்து களிமண்ணாக உருமாறியிருக்கலாம்.

ஆக்ஸிஜன் தாங்கிய கனிமங்களை கொண்ட அடுக்குகள் உள்ளன

ஆக்ஸிஜன் தாங்கிய கனிமங்களை கொண்ட அடுக்குகள் உள்ளன

குறிப்பிட்ட அடுக்குகளில் குறிப்பிட்ட வகையான களிமண்ணை கண்டுபிடிப்பதன் மூலம் செவ்வாயில் நீரின் கால அளவைப் பற்றி விஞ்ஞானிகள் தெரிந்துகொள்ளலாம். மவுண்ட் ஷார்ப் மலையில் பல்வேறு தாதுக்கள் கொண்ட பல்வேறு அடுக்குகள் உள்ளன என்று நமக்குத் தெரியும்.


மேலே குறிப்பிட்டுள்ள படி, கீழ் அடுக்குகள் களிமணை கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு மேல் கந்தகங்களைக் கொண்ட அடுக்குகள் உள்ளன. அதற்கு மேலே ஆக்ஸிஜன் தாங்கிய கனிமங்களை கொண்ட அடுக்குகள் உள்ளன. இங்குள்ள சல்பர் இப்பகுதி உலர்ந்ததாக அல்லது தண்ணீர் அதிக அமிலத்தன்மையாக இருந்தது என்பதைக் குறிக்கிறது.

Best Mobiles in India

English summary
Curiosity Has Made a Huge Discovery at Its Primary Mission Target on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X