பால்வீதியின் தோற்றத்தை மாற்றியமைத்த பிரபஞ்ச மோதல் : வானியல் ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்!

|

பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகள் எப்பொழுதும் ஆச்சரியம் மிக்கதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமையும். தற்போது வெளிவந்துள்ள பிரபஞ்சவியல் ஆய்வும் விழிகளை விரிய வைக்கின்றன. ஆம்! கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பிரபஞ்சத்தில் ஏற்பட்ட கேலக்ஸிகளுக்கு இடையிலான மோதலைப் பற்றிய ஆய்வுதான் அது. கற்பனைக்கும் எட்டாத, அறிவியல் ஆய்வுக்கும் அடங்காத வெட்ட வெளியாய் விரிந்து பரவியுள்ளது இப் பிரபஞ்சம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற விண்மீன்கள், கிரகங்கள் மற்றும் விண்மீன்களுக்கு இடையே உள்ள பொருட்கள் ஆகியவை ஈா்ப்பு விசையால் தங்களுக்குள் ஒன்றிணைந்துள்ள பரந்து விரிந்த அமைப்பை கேலக்ஸி (Galaxy ) என்கிறோம். சூரிய மண்டலத்தில் உள்ள விண்மீன்கள், கிரகங்கள் ஈா்ப்பு விசையால் தங்களுக்குள் ஒன்றிணைந்து உருவாகும் இது போன்ற கேலக்ஸி அமைப்பை பால்வீதி (Milky Way) என்கிறோம். இதனைப் போன்ற எண்ணற்ற கேலக்ஸிகளால் நிறைந்தது இந்த அண்டம்.

பால்வீதியுடன் சிறிய கேலக்ஸி மோதல்

பால்வீதியுடன் சிறிய கேலக்ஸி மோதல்

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால், சிறிய கேலக்ஸி ஒன்றுடன் பால்வீதி நேருக்கு நேர் மோதியதால் நம்முடைய பால் வீதியின் அமைப்பு மாறிவிட்டது. மோதிய கேலக்ஸிக்கு "Gaia Sausage" எனப் பெயரிட்டுள்ளனர். இதனால், பால்வீதியின் உட்புறப் புடைப்பும், வெளிப்புற ஒளி வட்டமும் மாற்றமடைந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மோதலால் சிதறிய கேலக்ஸி

மோதலால் சிதறிய கேலக்ஸி

மோதலின் பாதிப்பில் இருந்து குட்டி கேலக்ஸியால் மீள முடியவில்லை. சிதைந்து வீழ்ந்த குட்டி கேலக்ஸியின் பகுதிகள் பிரபஞ்ச வெளியைச் சுற்றிலும் உள்ளன என்பதும் ஆய்வின் வழியாகத் தெரிய வந்திருக்கிறது. "மோதலின் காரணமாகப் பிளவுண்ட குட்டி கேலக்ஸி சிதறியது. அதனால் கேலக்சியில் இருந்து தெறித்துச் சிதறிய நட்சத்திரங்கள் நீள் சுற்று வட்டப் பாதையில் நகர்ந்தன. அவை நீளமாகவும், குறுகலாகவும் ஒரு ஊசியைப் போலத் தோன்றின." என்கிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணக்கீட்டு வான் இயற்பியல் மைய அறிஞர் வாசிலி பொலோகுரோவ் (Vasily Belokurov).

கயா விண்வெளி ஆய்வுக்கலம் (Gaia satellite)

கயா விண்வெளி ஆய்வுக்கலம் (Gaia satellite)

விண்மீன் பாதைகள் அவற்றை நம்முடைய கேலக்சியின் மையப்பகுதிக்கு அருகே எடுத்து வந்தன. குட்டி கேலக்ஸி மாறுபட்ட சுற்று வட்டப்பாதையில் இருந்ததையும், அதனுடைய உயிர்ப்புத் தன்மை முடங்கிப் போனதையும் இவை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த ஆச்சரியமான வானியல் நிகழ்வு குறித்தத் தகவல்கள், ராயல் வானியல் கழகத்தின் மாத ஆய்விதழில் (Monthly Notices of the Royal Astronomical Society) வெளியான கட்டுரைகளிலும், "arXiv.org " என்னும் இணைய தளத்திலும் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை GyuChul Myeong என்னும் பெயர் கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்தான் முன்னெடுத்துச் சென்றுள்ளார். இவரும் இவருடைய குழுவினரும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கயா விண்வெளிக் கலம் (Gaia satellite) மூலம் பெறப்பட்ட தரவுகளை இந்த ஆய்வுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த விண்கலம் கேலக்ஸியில் உள்ள விண்மீன்களுக்கு இடையேயுள்ள பொருட்களைக் கண்டறிந்து வின்மீன்களின் பால்வீதி வழியான பணத்தைப் பதிவு செய்துள்ளது.

"Gaia" செயற்கைக் கோள் மூலமாக வானியல் அறிஞர்கள், விண்ணில் உள்ள கேலக்ஸிகள், கிரகங்கள் ஆகியவற்றின் நிலையினையும் அவற்றின் போக்கினையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் துல்லியமாக அறிய முடிந்திருக்கிறது.

 “Sausage ” வடிவ கேலக்ஜி

“Sausage ” வடிவ கேலக்ஜி

அண்டவெளியில் இணைந்திருந்த நட்சத்திரங்களின் பாதையை "Gaia Sausage " என்னும் புனைப் பெயரால் வானியல் அறிஞர்கள் அழைக்கின்றனர். சிறியதாக வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளைச் சேர்த்து ஒரு குறுகிய வளைந்த டியூப் வடிவில் தயாரிக்கப்படும் உணவு வகையை ஆங்கிலத்தில் " Sausage" என்று அழைப்பர். சிறிய வடிவ கேலக்ஸி இந்த வடிவத்தில் இருந்ததால் இதற்கு இப்பெயர் சூட்டியுள்ளனர்.

"நட்சத்திரங்களின் திசைவேகத்தை நாங்கள் தொகுத்திருக்கிறோம். மோதலின் காரணமாக சிறிய கேலக்ஸி சிதைவுற்ற போது அதில் இணைந்திருந்த நட்சத்திரங்கள் நீளமான குறுகிய சுற்று வட்டப் பாதையை நோக்கி தூக்கி வீசப்பட்டன. இந்த நட்டசத்திரங்கள் பால் வீதியுடன் இணைந்தன. இதுதான் பால்வீதியில் நிகழ்ந்த கடைசி பெரும் இணைவாககக் கருதப்படுகிறது." என்கின்றனர் ஆய்வாளர்கள். Sausage கேலக்ஸியின் மோதலால் குறைந்தது எட்டு பெரிய நட்சத்திரக் கோளங்களின் தொகுதிகள் பால்வீதியின் பாதையில் இணைந்தன.

 Sausage galaxy

Sausage galaxy

பொதுவாக சிறிய கேலக்ஸிகளுக்கு கோளத் தொகுதிகள் (globular clusters) இருப்பதில்லை. ஆனால், Sausage galaxy தனக்கெனத் தனியாகக் கோளத் தொகுதிகளை வைத்திருக்கும் அளவுக்குச் சற்றுப் பெரிய அளவில் ஆன கேலக்ஸியாக இருந்திருக்கலாம்.

"ஒரு பால்வீதியின் வாழ்நாளில் இது போன்ற சிறிய மோதல்கள் நிகழ்வுது இயல்புதான் என்றாலும் இது சற்றுப் பெரிய மோதல்" என்கின்றனர் வானியல் அறிஞர்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Cosmic Crash With Dwarf Galaxy Reshaped Milky Way Study : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X