காஸ்மிக் இலக்கு : விண்வெளி ஆராய்ச்சியில் புதிய முயற்சியில் இறங்கியுள்ள டீம் இந்துஸ் (Team Indus).!

இங்குள்ள டீம் இந்துஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக ரோபோவின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

By GizBot Bureau
|

காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் மிகவும் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகளில் மிகப் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாலிவுட் படங்களின் கற்பனைகளுக்கு காஸ்மிக் பற்றிய உண்மைகள் அடிப்படையாக அமைகின்றன.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய முயற்சியில் இறங்கியுள்ள டீம் இந்துஸ்.!

50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த Space Odyssey படம் முதல், கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த Gravity, Interstellar, Martian, Guardians of the Galaxy போன்ற ஹாலிவுட் படங்கள் வரை அனைத்தும் செவ்வாய்கிரகம், நிலா என நம்மை விண்வெளிக்கு உலா அழைத்துச் செல்லும் வகையில் எடுக்கப்பட்டிருந்தன. இருந்தாலும், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த WALL-E படத்தில் வரும் ரோபோ பார்வையாளர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன… இப்பொழுது உண்மையிலுமே ஒரு ரோபோ நிலவுக்குப் பயணிக்கிறது, ஒரு முக்கியமான குறிக்கோளோடு.

சரியான பாதையில் பயணிக்கும் டீம் இந்துஸ்

சரியான பாதையில் பயணிக்கும் டீம் இந்துஸ்

பெங்களுரை மையமாகக் கொண்டு செயல்படும் டீம் இந்துஸ் என்னும் நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சியின் பயனாக, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்பவிருக்கிறது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் நான்கு சக்கரங்களுடன் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படவிருக்கிறது.

பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ரோபோ

பூமியிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ரோபோ

இங்குள்ள டீம் இந்துஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக ரோபோவின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். "ரோபோ விண்வெளியை அடைந்து நிலவில் மெதுவாகத் தரையிறங்கி அங்குள்ள மேற்பரப்பில் இயங்குவது வரை அனைத்தும் இம் மையத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்" எனக் கூறுகிறார், இத்திட்டத்தின் கட்டுப்பாட்டு மையத் தலைவர் ஸ்ரீநிவாச ஹெக்டே. விண்வெளி ஆய்வுத் திட்டச் செயற்பாடுகளில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் இவர். முதலில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்காகவும், தற்போது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காகவும் பணியாற்றுகிறார். திட்டத்தில் உள்ள கணிதவியல் கூறுகள் மற்றும் ரோபோவின் இயக்கத்திற்கான வழியமைப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மிகவும் சவாலான விசயம் எதுவென்றால்?

மிகவும் சவாலான விசயம் எதுவென்றால்?

"வடிவமைப்புக்குத் தேவையான பொருட்களை ஆன் லைன் மூலமாகக் கூடப் பெற்று விண்வெளியின் சுற்றுவட்டப் பாதைக்குச் செல்லக் கூடிய வகையில் ஒரு ரோபோவை எளிதாக உருவாக்கிவிடலாம். ஆனால் அதனை நிலவில் தரையிறக்கி அதனுடைய இயக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் மிகவும் சிக்கலான விசயம்" என்கிறார், டீம் இந்துஸ் நிறுவனத்தின் வடிவமைப்புப் பொறியாளர், நிர்மல் காட்டி. "விண்வெளிக்கு ஏவுவதற்கு முன்னர் குறிப்பிட்ட சில சோதனைகளைச் செய்ய வேண்டியுள்ளது. தற்போது நாங்கள் அந்தச் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறோம்" என்கிறார் இவர். இவருடைய கருத்துப்படி இந்தத் திட்டம் முக்கியமான இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று சுற்றுவட்டப் பாதையில் இணைத்தல். இரண்டாவது, நிலவில் தரையிறக்குதல்.

நிலவில் தரையிறங்கும் ரேபோ

நிலவில் தரையிறங்கும் ரேபோ

"சுற்று வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லல் என்பது பெரும்பாலான விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் மேற்கொள்கின்ற செயல். ஆனால், நிலவின் மேற்பரப்பில் தரையிறக்குதல் அரிதான செயலாக இருக்கிறது. நாங்கள் இம்முயற்சியில் வெற்றி பெற்றால், ரோபோவை வடிவமைத்து, நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கி, இயங்க வைத்த உலகின் முதல் தனியார் நிறுவனம் என்கின்ற பெருமை எங்களுக்குக் கிடைக்கும்" என ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கூறுகிறார் நிர்மல்.

விண்வெளி ஆய்வுக்கான போட்டியில் டீம் இந்துஸ்

விண்வெளி ஆய்வுக்கான போட்டியில் டீம் இந்துஸ்

டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்த ராகுல் நாராயண் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டீம் இந்துஸ் (Team Indus). 20 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கொண்ட Google Lunar X Prize (GLXP) போட்டியில் இந்நிறுவனம் பங்கேற்றது. போட்டியில் பங்கேற்ற 32 நிறுவனங்களுள் முதல் 5 நிறுவனங்களுள் ஒன்றாக இந்நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒரே நிறுவனம் இதுதான்.

நிலவில் தரையிறக்குவதற்கான செயல் திட்டம்

நிலவில் தரையிறக்குவதற்கான செயல் திட்டம்

"எங்களுடைய ரோபோவை பி.எஸ்.எல்.வி வாகனம் விண்வெளியில் 79,000 கி.மீட்டர் உயரத்திற்குக் கொண்டு செல்லும். அங்கிருந்து அதனுடைய உயரத்தை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்போம். குறிப்பிட்ட உயரத்தை எட்டியதும் அங்கிருந்து தரையிறக்குவதற்கு ஏற்ற தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். அங்கிருந்துதான் எங்களுடைய திட்டத்தின் சவாலான பகுதி தொடங்குகிறது" என்கிறார் ஹெக்டே. ஸ்பேஸ் கிராஃப்டின் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து அதனை முன்கூட்டியே திட்மிடப்பட்ட இடத்தில் மெதுவாகத் தரையிறக்கம் செய்கின்ற பணியை டீம் இந்துஸ் பொறியாளர்கள் கவனித்துக் கொள்வர்.

புதிய டிஜிட்டல் தொழில் நுட்பம்

புதிய டிஜிட்டல் தொழில் நுட்பம்

" பெரும்பாலான ஏரோ ஸ்பேஸ் நிறுவனங்கள் மாறுபடும் உந்துவிசை அடிப்படையிலான இயந்திரங்களின் மூலம் (variable thrust engine) விண்கலங்களைத் தரையிறக்குகின்றன. தேவைக்கு ஏற்ப உந்துவிசையைச் சரி செய்வதன் மூலம் சரியான திசையில் பாதுகாப்பாக விண்கலத்தை இறக்குவதற்கு இந்தத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் வழியாக உந்துவிசை இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் புதிய முறையைப் பயன்படுத்துகிறோம்." என்கிறார் ஹெக்டே. "இது ஒரு சவாலான தொழில்நுட்பம் என்றாலும் எங்களைப் போன்ற தனியார் நிறுவனங்கள் இது போன்ற செலவு குறைவான தொழில்நுட்பத்தை நாடுவது தவிர்க்க இயலாத ஒன்று" என்றும் இவர் கூறுகிறார்.

விண்வெளி ஆய்வை ஊக்குவிக்கும் GLXP

விண்வெளி ஆய்வை ஊக்குவிக்கும் GLXP

கூகுள் நிறுவனமும் XPRIZE பவுண்டேசன் ஆகிய இரண்டும் இணைந்த GLXP பவுண்டேசனின் முக்கிய நோக்கம், விண்வெளி ஆய்வில் புதிய சிந்தனைகளையும், புத்தாக்க முயற்சிகளையும் ஊக்குவிப்பதுதான் என்கிறார் GLXP-யின் இயக்குநர். GLXP -யின் ஒன்பது நபர்கள் கொண்ட நடுவர் குழுவினர் டீம் இந்துஸ் நிறுவனத்தின் திட்டத்தை மதிப்பீடு செய்கின்றனர். டீம் இந்துஸ் நிறுவனதத்தினர் தங்களுடைய திட்டத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர். "GLXP-யின் போட்டித் திட்டத்தில் கடைசியாக வந்து பதிவு செய்த நிறுவனமாக இருந்தாலும் தங்களுடைய நீண்ட முயற்சியின் விளைவாகத் திட்டத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளனர்" என்கிறார் GLXP-யின் இயக்குநர், திருமதி ஷான்டா கோன்ஜேல்ஸ்- மோவ்ரர்.

வரலாறு படைக்கும் நம்பிக்கை

வரலாறு படைக்கும் நம்பிக்கை

நடுவர் குழுவின் தலைவராக உள்ளவரும், NASA நிறுவனத்திடமிருந்து மூன்று முறை சாதனை அவார்டு வாங்கியவருமான பேராசிரியர் ஆலன் வெல்ஸ் கூறுகையில், " டீம் இந்துஸ் நிறுவனத்தினரின் கடுமையான முயற்சியின் விளைவாக இப்பொழுது திட்டத்தை நிறைவு செய்யத் தயாராக உள்ளனர். அவர்களுடைய ரோபோ சரியான பாதையில் பயணித்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும்" என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Best Mobiles in India

English summary
Cosmic ambitions Team Indus is attempting something even ISRO has not tried : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X