Home
Scitech

சந்திராயன்2க்கு ஒத்துழைக்கவில்லை காங்.மீது மாதவன் நாயர் பகீர் குற்றச்சாட்டு.!

அன்றைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

சந்திராயன் 1 என்ற செயற்கைகோள் இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு அனுப்பட்டது. இந்த செயற்கை கோள் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றது என்று கண்டுபிடித்து கூறியது.

உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியது. மேலும், இதை நாசாவும் தண்ணீர் இருக்கின்றது. சந்திராயன் கூறியது உண்மை தான் என நிருபித்தது. இந்நிலையில், சந்திராயன்-1 செயலிழந்தால், சந்திராயன் 2 திட்டம் செயல்படுத்த இஸ்ரோ ஆயத்தமாகியது.

சந்திராயன்2  ஒத்துழைக்கவில்லை காங். மீது மாதவன் நாயர் குற்றச்சாட்டு.!

அன்றைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

சந்திராயன்-1:

சந்திராயன்-1:

கடந்த 2008ம் ஆண்டு இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலம் செலுத்தப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் விண்கலம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ல் ரேடியோ சிக்னல்களை அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது.

நாசா விண்வெளி மையம்:

நாசா விண்வெளி மையம்:

இந்நிலையில் 2016ம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் ரேடாரை பயன்படுத்தி சந்திராயனை மறுபடியும் அதே இடத்தில் நிறுவியது. பிறகு, சந்திராயன் அனுப்பிய தகவல்களின் படி நிலவில் தண்ணீர் இருக்க சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டது.

இஸ்ரோவுக்கு பாராட்டு:

இஸ்ரோவுக்கு பாராட்டு:

உலக அளவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரட்டுகள் குவிந்தன. மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ விண்கலமான சந்திராயன்-1 என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்தது. இந்தியா விண்வெளித்துறை மீது உலகத்தின் பார்வை திரும்பியது.

சந்திரனில் உறைந்த தண்ணீர்:

சந்திரனில் உறைந்த தண்ணீர்:

இந்நிலையில், சந்திராயன்-1 தெரிவித்தபடி, சந்திரனில் இருண்ட மற்றும் குளிர்ச்சியான துருவ பகுதியில் உறைந்த நிலையில் தண்ணீர் காணப்படுகிறது. இதேபோல், சந்திரனின் வடதுருவத்தில் பரந்த அளவில் அங்குமிங்கும் பனிகட்டிகள் பரவிக்கிடக்கின்றன.

156 டிகிரி செல்சியஸ்:

156 டிகிரி செல்சியஸ்:

சந்திரனின் வட துருவ பகுதியில், மைனஸ் 156 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான குளிர்ந்த நிலையில் ஒரு போதும் பாதிவாகவில்லை. இந்த பகுதியிலில் சூரிய வெளிச்சம் ஒருபோதும் சென்றடைந்ததில்லை எனவும் நாசா சந்திராயன் உதவியோடு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாசாச விஞ்ஞானிகள் தகவல்:

நாசாச விஞ்ஞானிகள் தகவல்:

சந்திரனினல் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக இருக்கின்றது என நாசா விஞ்ஞானிகள் முழுமையாக அறிவியல் மாத இதழ் ஒன்றுக்கு அறித்த பேட்டியில் இந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்திராயன்-2  அடுத்த மாதம் ஏவுதல்:

சந்திராயன்-2 அடுத்த மாதம் ஏவுதல்:

ஸ்ரீ ஹரிகோட்ட ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-2 அடுத்த மாதம்-9ம் தேதி ஏவப்படுகின்றது. இதற்கான அடுத்த கட்டபணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றது.

சந்திராயன்-2 விண்வெளியில் நிலை நிறுத்துவது என்பது மிகவும் சாதாரண காரியமில்லை. இதில் ஏராளமான சிக்கல் இருக்கின்றது.

மாதவன் நாயர் குற்றச்சாட்டு :

மாதவன் நாயர் குற்றச்சாட்டு :

சந்திராயன் 2 திட்டத்தை 2012ம் ஆண்டே செயல்படத்த முயன்றதாகவும் ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் இருந்து இஸ்ரோவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அதன் முன்னாள் தலைவரும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளவருமான மாதவன் நாயர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை:

காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை:

2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி சந்திராயன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை அடுத்து சந்திராயன் 2 திட்டத்தை 2012ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தமானதாகவும் ஆனால் 2014 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சந்திராயன் 2 திட்டத்திற்கு அப்போதைய மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மங்கள்யானுக்கு அழுத்தம்:

மங்கள்யானுக்கு அழுத்தம்:

சந்திராயன் 2 திட்டத்திற்கு பதில் மங்கள்யான் திட்டத்தை நிறைவேற்றுமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். இந்த செய்தி தற்போது, வேகமாக பரவி வருகின்றது.

Best Mobiles in India

English summary
congress failed to support chandrayan 2 says isro chairman madhavan nair : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X