இதெல்லாம் சாத்தியமானால் அமெரிக்கா உலகை ஆள துடிக்குமென்பதில் சந்தேகமேயில்லை.!

சூப்பர் பவர் நாடாக கருதப்படும் அமெரிக்கா மென்மேலும் சூப்பர் பவர் ஆகிக் கொண்டே போகிறது.

|

'நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்' என்பது ஒரு நல்ல பழமொழி தான். அதற்காக 'எதாச்சும் பண்ணியே ஆகணுமே.. சும்மா இருக்கவே கூடாதே..?' என்பதற்காக எதையாச்சும் செய்துக் கொண்டே இருப்பதும், அதை வளர்ச்சி என்று கூறிக் கொள்வதிலும் நியாயம் இருக்கிறதா, இல்லையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இது சாத்தியமானால் அமெரிக்கா உலகை ஆள துடிக்குமென்பதில் சந்தேகமேயில்லை.!

அப்படியான 'குண்டக்க மண்டக்க' வளர்ச்சியில் 'சில' உலக நாடுகள் கவனம் செலுத்தினாலும், குறிப்பிட்ட சில நாடுகள் மிகவும் தெளிவாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

அதிலும் சூப்பர் பவர் நாடாக கருதப்படும் அமெரிக்கா மென்மேலும் சூப்பர் பவர் ஆகிக் கொண்டே போகிறது.

செல்ப்-டிரைவிங் கப்பல்கள்

செல்ப்-டிரைவிங் கப்பல்கள்

நாளைய பொழுதே அமெரிக்காவிற்கு எதிராக ஒரு யுத்தம் என்று வந்தால்கூட, அதில் அமெரிக்கா தான் வெல்லும். அப்படியானதொரு நிலையில் இருக்கிறது அமெரிக்க ராணுவ வளர்ச்சி. அதிலும் அமெரிக்க ராணுவத்தின் எதிர்காலம் ஆனது, ஹைபர்வெலாசிட்டி ஆயுதங்கள் தொடங்கி செல்ப்-டிரைவிங் கப்பல்கள் என இன்னும் அபாரமாக இருக்க போகிறதாம்.

எப்படி முன்னிலை வகிப்பது

எப்படி முன்னிலை வகிப்பது

அமெரிக்க இராணுவம் துல்லியமான முடிவுகளை எடுப்பதற்காக கம்ப்யூடிங் சக்தி (computing power) மற்றும் லட்சக்கணக்கான தரவுகள் சார்ந்த விடயத்தில் தீவிரமான கற்றலில் இறங்கியுள்ளதாம். யுத்தம்தனை மிகவும் வெற்றிகரமாக எப்படி நடத்துவது, எப்படி முன்னிலை வகிப்பது போன்ற விடயங்களை டிஜிட்டல் உலக வடிவில் ஒத்திகை பார்த்து அதன் பின்பு யுத்தத்தை எதிர்கொள்ளும் முறைகளை கையாள திட்டமிடுகிறது பென்டகன்.

களத்தில் குதிக்க தயாராக இருக்கும்

களத்தில் குதிக்க தயாராக இருக்கும்

அமெரிக்க ராணுவத்தை மிகவும் அபாயகரமானதாக அதே சமயம் கடுமையான நன்னடத்தைகளை பரிந்துரைக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு (artificial intelligence - AI) சார்ந்த வளர்ச்சியிலும் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருகிறது. யுத்தம் தொடங்குவதற்கு முன்பே களத்தில் குதிக்க தயாராக இருக்கும் ஸ்மார்ட் இயந்திரங்கள் சார்ந்த வளர்ச்சியிலும் அமெரிக்க ராணுவம் அபாரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு ராணுவப் படை

செயற்கை நுண்ணறிவு ராணுவப் படை

எடுத்துக்காட்டுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தாக்குதல் ஏரியல் ட்ரோன்கள். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் ராணுவப் படைக்காக அமெரிக்க ஏற்கனவே பெரிய அளவிலான முதலீடுகளை செய்துவிட்டது.

ட்ரோன் விமான தொழில்நுட்பம்

ட்ரோன் விமான தொழில்நுட்பம்

கடந்த 10 ஆண்டுகளாக ட்ரோன் விமான தொழில்நுட்பம் ஒரு புரட்சியை கண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தரையில் மட்டுமின்றி நீருக்குள்ளும் செயல்படும் தானியங்கி விமானங்களை உருவாக்கும் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ரோபோட்கள்

ரோபோட்கள்

தரைப் படைகளுக்கு ஆயுதங்களையும் தேவையான உதவி பொருட்களையும் வழங்கும் ரோபோட்கள் ஏற்கனவே பரிசோதனை செய்யபப்ட்டுவிட்ட நிலையில் தற்போது அனைத்து வகையான மிஷன்களிலும் ஈடுபடும் சுயமாக இயங்கும் கப்பல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன.

மிசைல் டிபன்ஸ் சிஸ்டம்

மிசைல் டிபன்ஸ் சிஸ்டம்

பனிப்போர் காலம் முடிந்து விட்டாலும் கூட அணு ஆயுத வளர்ச்சியானது முடியவே இல்லை. அணு ஆயுதங்களுக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏவுகணை தொழில்நுட்பத்தில் உச்சத்தை அடைந்த பின்பு உருவானதே மிசைல் டிபன்ஸ் சிஸ்டம் அதாவது தாக்க வரும் ஏவுகணையை வழியிலேயே தடுத்து அழிக்கும் அதிநவீன ஆயுதம். இவ்வகை ஆயுதத்தில் அமெரிக்காதான் உலகின் முன்னோடி.

ஹைபர்வெலாசிட்டி

ஹைபர்வெலாசிட்டி

அமெரிக்க கப்பற்ப்படையானது தற்போது ஹைபர்வெலாசிட்டி ஆயுத உருவாக்கத்தில் முனைப்பாக உள்ளது. ஹைபர்வெலாசிட்டி ஆயுதம் ஆனது ஒலியின் வேகத்தை விட 7 மடங்கு வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ நெட்வர்க்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹேக்கர்கள் மற்றும் திடமான தொடர்பு அமைப்புகள் ஆகிய வளர்சிகளிலும் பென்டகன் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே போகிறது.

Best Mobiles in India

English summary
Computing power, AI, Drones, Hypervelocity weapon tech The Future of the US Army. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X