Home
Scitech

இன்றுவரை உண்மையென்று நாம் நம்பும் 9 அப்பட்டமான பொய்கள்.!

போங்கய்யா.. போய் புள்ளகுட்டிக்கள நல்லா படிக்க வைங்கய்யா.!

ஆரம்பத்தில் மான்களுக்கு இருப்பது போலத்தான் ஒட்டச்சிவிங்கிகளுக்கும் கழுத்து இருந்ததாம். ஒருகட்டத்தில், காட்டின் தரை பகுதியில் இருந்த எல்லா செடி கொடிகளையும் தின்று தீர்த்த ஒட்டகசிவிங்கிகளுக்கு மிகவும் உயரமான மரங்களில் மட்டுமே தழைகள் கிடைத்தனவாம். அதை எட்டியெட்டி தின்பதற்கு அனுதினமும் முயற்சி மேல் முயற்சி செய்து, பல்லாண்டு கால பரிணாம வளர்ச்சிக்கு பின்னர் ஒட்டகசிவிங்கியின் கழுத்து நீளமானதாக டார்வின் கதையொன்று உண்டு.

இன்றுவரை உண்மையென்று நாம் நம்பும் 9 அப்பட்டமான பொய்கள்.!

அதெல்லாம் சரி.? அப்போ பல்லாண்டு காலத்திற்கும் காட்டின் தரை பகுதியில் செடி கொடிகள் முளைக்கவே இல்லையா.?? அதே போன்ற பரிணாம வளர்ச்சியின் மான்களுக்கு ஏன் கழுத்து நீளவில்லை.? என்ற கேள்வி எத்தனை பேருக்கு எழுகிறது.?

இப்படியாக "கதைகள் சொன்னால் அல்லது அறிவுரை சொன்னால் அனுபவிக்கணும், அதை ஆராயக்கூடாது" என்று சொல்லிச்சொல்லி நம் எல்லோரையும் முட்டாள்களாக்கி வைத்திருக்கிறது ஒரு 'ஆதிகால' கூட்டம், அதற்கு ஆயிரமாயிரம் சான்றுகள் உண்டு. எதையும் நன்கு ஆராய்ந்து பார்த்த பின்னரே புரிகிறது - 'யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பி, அவர்கள் முடித்த இடத்தில் இருந்து அனுபவத்தை தொடங்கி விடக்கூடாது. முதலில் ஆராய வேண்டும் பின் தான் முதல்படியில் இருந்துஅனுபவிக்க வேண்டும்' என்று.!

அப்படியாக இதுநாள் வரை உண்மை என்று நம்பப்படும் 9 வெவ்வேறு கட்டுக்கதை, புரளி, பொய்களைத்தான் இங்கு நீங்கள் பார்த்து கடுப்பாக போகிறீர்கள். ரெடி ஜூட்.!

09. தொடரும்.!

09. தொடரும்.!

பரிணாம வளர்ச்சி என்பது தாழ்வான ஒரு நிலையில் இருந்து மேல்நோக்கி அழைத்து செல்லும் ஒரு வளர்ச்சி என்று பலரும் நம்பிக்கிறார்கள்.

மனிதர்களுக்கும் இறக்கை முளைக்கும்.?

மனிதர்களுக்கும் இறக்கை முளைக்கும்.?

ஆனால், உண்மையில் வளர்ச்சி என்பது சுற்றுப்புறசூழலை பொருத்ததே தவிர. பரிணாமத்தை பொருத்தது அல்ல. ஆக, மனிதர்களுக்கும் இறக்கை முளைக்கும், பல நூற்றாண்டு காலம் கழித்து பரிணாம வளர்ச்சியின் காரணத்தினால் நாமெல்லாம் பறப்போம் என்று யாரேனும் நம்பிக் கொண்டிருந்தால் - ஐ யம் வெரி சாரி.!

08. விண்வெளியில் மனிதன்.!

08. விண்வெளியில் மனிதன்.!

விண்வெளியில் மூச்சைப்பிடித்துக் கொண்டு மனிதன் உலாவலாம் என்று பலரும் நம்புகிறார்கள். அது கிட்டத்தட்ட உண்மைதான். ஆனால் அது வெறும் 15 - 30 நொடிகள் வரை மட்டும் தான் சாத்தியமாகும்.

மயக்கம் முதல் மரணம் வரை

மயக்கம் முதல் மரணம் வரை

விண்வெளியில் பிராண வாயு உதவியின்றி, மூச்சைஇழுத்துபிடித்து தாக்குப்பிடிக்கும் முதல் 15 அல்லது அதற்கு மேற்பட்ட நொடிகளுக்குள் மயக்கம் முதல் மரணம் வரை நிகழலாம் என்பதே உண்மை. ஆக, பூமி கிரகத்தில் தண்ணீருக்கு அடியில் பல மணித்துளிகள் மூச்சுப்பிடிக்கும் திறன் கொண்டவர்களை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு குட் பை.!

07. மிக பிரகாசமான நட்சத்திரம்.!

07. மிக பிரகாசமான நட்சத்திரம்.!

வட துருவத்தில் பொலரிஸ் (Polaris) தான் மிகப் பிரகாசமான நட்சத்திரம் என்றும் பலரும் நம்புகிறார்கள். ஆனால் அது பார்க்க மட்டும் தான் அப்படி, உண்மையில் ஸிரியஸ் (Sirius) நட்சத்திரம் தான் வட துருவத்தில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமாகும்.

எவ்வளவு பெரிய அபத்தம்.?

எவ்வளவு பெரிய அபத்தம்.?

இதில் மற்றொரு உண்மை என்னவெனில், பூமியில் இருந்து நட்சத்திரங்களைப் பார்க்கும்போது நீங்கள் கடந்த காலத்தை தான் பார்க்கிறீர்கள். அதாவது இரவில் நீங்கள் பார்க்கும் பல நட்சத்திரங்கள் ஏற்கனவே இறந்துவிட்டன. இதற்கு தொலைவு மிகப்பெரிய காரணமாக திகழ்கிறது. இந்நிலைப்பாட்டில், இது தான் பிரகாசமான நட்சத்திரம் என்று முடிவு செய்வது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

06. ஐந்து நொடி மட்டும்.!

06. ஐந்து நொடி மட்டும்.!

தரையில் விழுந்த உணவை 5 நொடிக்குள் எடுத்து விட்டால் அது உண்ண தகுந்ததென்றும் அல்லது அதில் கிருமிகள் ஏறிக்கொள்ளும் என்று ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை உண்டு, அது உண்மையல்ல. தரையில் விழுந்த ஒரு உணவு பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பில்லாதது என்பது தரையின் சுத்ததை பொருத்ததேயின்றி எடுக்கும் நேரத்தை பொருத்தது அல்ல.

05. நிலவின் முதுகு.!

05. நிலவின் முதுகு.!

பெரும்பாலானோர்கள் இன்று வரை நிலவிற்கு முதுகு பக்கம் (டார்க் சைட் ஆஃப் தி மூன்) உண்டு என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி ஒன்றுமில்லை என்பது தான் நிதர்சனம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் சில சமயங்களில், அதிகப்படியான சூரிய ஒளியானது நிலவை முழுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதே உண்மை என்கிறார்கள் வானவியல் ஆய்வாளர்கள்.

04. இறந்தால் இறந்தது தான்.!

04. இறந்தால் இறந்தது தான்.!

மூளையுள் உள்ள செல்கள் இறந்தால் இறந்தது தான், அது மறு உற்பத்தியாகாது என்று பலரும் நம்புகின்றனர், அது வெறும் கட்டுக்கதை. உண்மை என்னவென்றால், மனித மூளையின் கற்றல் மற்றும் நினைவு சார்ந்த செல்கள் உற்பத்தி ஆகிக்கொண்டே தான் இருக்கும்.

03. உராய்வு வெப்பம்.!

03. உராய்வு வெப்பம்.!

உலகின் வளிமண்டலத்திற்க்குள் நுழையும் விண்கற்கள் தீப்பிடித்து எரியக் காரணம் - உராய்வு வெப்பம் தான என்று ஒரு நம்பிக்கை உண்டு, அது பொய். இன்னும் சொல்லப்போனால் விண்கற்கள் மிகவும் குளுமையானவைகள் ஆகும். அதன் மேல் பனித்துளிகள் கூட இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

02.  மீண்டும் மீண்டும்.!

02. மீண்டும் மீண்டும்.!

மின்னல் ஒரு முறை ஓரு இடத்தில் விழுந்தால், மறுமுறை அதே இடத்தில் விழாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. அது பொய். மின்னல்கள் பெரும்பாலும் உயர்ந்த கட்டிடங்கள் அல்லது மரங்களைத்தான் தாக்கும். மின்னல்கள் வேறு இடம் நோக்கி நகரும் வரை ஒரே இடத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் கூட தாக்கும்.

01. விண்வெளி ஈர்ப்பு.!

01. விண்வெளி ஈர்ப்பு.!

பெரும்பாலோனோர்கள் விண்வெளியில் துளிகூட ஈர்ப்பு சக்தி இல்லை, அதனால் தான் நாம் விண்வெளியில் மிதக்கிறோம் என்று நம்புகின்றனர். ஆனால் அது வெறும் கட்டுக்கதையாகும். பூமியை விட்டு சுமார் 250 மைல்கள் சென்ற பின் கூட, பூமியில் இருப்பதை விட 10% ஈர்ப்பு சக்தி தான் அங்கு குறைவாக இருக்கும், அதுவே நம்மை மிதக்க செய்யும் என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
Common Science Myths That Most People Believe. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X