சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

|

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA), சீனாவின் விண்வெளி நடவடிக்கை ஒன்றை மிகவும் கடுமையாக சாடியுள்ளது!

நாசா இப்படி கோபப்பட்டு "கழுவி ஊற்றும்" அளவிற்கு சீனா (China) அப்படி என்ன செய்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

புதிய பஞ்சாயத்தை கிளப்பிய சீனா!

புதிய பஞ்சாயத்தை கிளப்பிய சீனா!

நாசா ( NASA) என்று நன்கு அறியப்படும் அமெரிக்காவின் நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (National Aeronautics and Space Administration), அதன் அடுத்த நிலவு பயணத்திற்கு தயார் ஆகி வருகிறது.

நாசாவின் இந்த நிலவு பயணம் வருகிற 2025 ஆம் ஆண்டு நிகழும்படி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் சீனா ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

அதென்ன பஞ்சாயத்து?

அதென்ன பஞ்சாயத்து?

நாசா தனது ஆர்ட்டெமிஸ் மூன் மிஷனுக்காக (Artemis Moon Mission), அதாவது அதன் 2025 ஆம் ஆண்டு நிலவு பயணத்திற்காக, 13 சாத்தியமான தரையிறங்கும் தளங்களை அடையாளம் கண்டுள்ளது.

அதாவது நிலவின் எந்தெந்த மேற்பரப்பில் விண்கலத்தை தரை இறக்கலாம், சரியாக எந்த இடத்தில் தரை இறங்கினால் எங்கெல்லாம் ஆராய்ச்சி செய்ய வசதியாக இருக்கும் என்கிற பட்டியலை நாசா உருவாக்கி வைத்துள்ளது!

எல்லாம் சரியாக நடந்தால்..?

எல்லாம் சரியாக நடந்தால்..?

திட்டமிட்டு வைத்திருப்பது போல நாசாவின் ஆர்ட்டெமிஸ் மூன் மிஷன் வெற்றியடைந்தால், 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது அப்பல்லோ 17-க்கு பிறகு சந்திரனில் அமெரிக்கா தரையிறங்குவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில் தான், சீனப் பத்திரிக்கை ஒன்றின் வழியாக வெளியாகியுள்ள கட்டுரை நாசாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

அப்படி என்ன கட்டுரை?

அப்படி என்ன கட்டுரை?

அமெரிக்காவை போலவே சீனாவும் ஒரு நிலவு பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. அந்த திட்டம் Chang'e 7 என்று அழைக்கப்படுகிறது.

இது சந்திரனின் தென் துருவத்தை குறிவைத்து, வருகிற 2024 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சீனாவின் ஒரு ரோபோடிக் லூனார் எக்ஸ்ப்ளோரேஷன் மிஷன் (Robotic lunar exploration mission) ஆகும்!

"சில்லறை" வேலையை பார்த்த சீனா!

நிலவிற்கு செல்ல திட்டமிட்டுள்ள சீனாவும் - அமெரிக்காவை போலவே - அதன் Chang'e-7 திட்டத்திற்கான சாத்தியமான தரையிறங்கும் தளங்களை தேர்வு செய்துள்ளது.

இதற்காக சீனா, நிலவில் மொத்தம் 10 இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அந்த பத்து இடங்களில் நாசா ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள 3 தளங்கள் இருப்பதாகவும் சீன பத்திரிக்கை ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.

சூரியனின் சூரியனின் "மர்ம பகுதி" கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!

கட்டுரை எழுதியதே மிஷன் கமாண்டர் தானாம்!

கட்டுரை எழுதியதே மிஷன் கமாண்டர் தானாம்!

சீன பத்திரிக்கையில் வெளியான குறிப்பிட்ட கட்டுரையை Chang'e-4 லூனார் மிஷனின் கமாண்டர் ஆன Zhang He மற்றும் பலர் எழுதியுள்ளனர் என்பதால் இதை ஒரு அதிகாரபூர்வமான தகவல் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

அதாவது நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 மற்றும் சீனாவின் சாங்'இ-7 ஆகிய இரண்டுமே ஷேக்லெட்டன் (Shackleton), ஹாவர்த் (Haworth) மற்றும் நோபில் (Nobile) பள்ளங்களுக்கு அருகிலுள்ள இடங்களை, சாத்தியமான தரையிறங்கும் மண்டலங்களாக குறித்துள்ளன!

செம்ம கடுப்பான நாசா!

செம்ம கடுப்பான நாசா!

இந்த தகவலை அறிந்த நாசா, சீனா தன் நிலவுப் பயணம் குறித்து "வெளிப்படையாக" இருக்க வேண்டும் என்று சாடியுள்ளது.

"எங்களால் முடிந்தவரை உலகத்துடன் எங்களின் விண்வெளி திட்டங்களை பகிர்ந்து கொள்வோம், மற்ற நாடுகள் தங்கள் திட்டங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம்..

..ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் கொள்கைகளின்படி, வெளிப்படைத்தன்மை மற்றும் அமைதியான விண்வெளி ஆய்வுகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்றும் நாசா கூறி உள்ளது!

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

சீனாவை

சீனாவை "தீங்கு விளைவிக்கும் குறுக்கீடு" என்கிறது நாசா!

நிலவு பயணம் தொடர்பான இந்த சிக்கல் பற்றி மேலும் கூறுகையில், "சந்திரனை ஆராய்வதில், ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் நாங்கள் கூறியுள்ளதை அப்படியே பின்பற்றுவோம்..

..நாங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருப்போம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படுவோம், தீங்கு விளைவிக்கும் குறுக்கீடுகளை தவிர்ப்போம்" என்றும் நாசா கூறி உள்ளது!

Photo Courtesy: NASA

Best Mobiles in India

English summary
Clash Between NASA and China Both Are Choosing Same Landing Sites on Moon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X