Home
Scitech

சென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்! நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்!

நாசாவின் நிதியின் கீழ் உருவாக்கப்பட்ட குழுவின் ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இக்குழுவினால் எடுக்கப்பட்ட ஆய்வின்படி சென்னை, மும்பை மற்றும் கொச்சி போன்ற கடற்கரை நகரங்கள் 50 செ.மீ. கடல் மட்ட உயர்வினால், கடலுக்குள் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது.

வேகமாக உருகிவரும் அண்டார்டிக்கா

வேகமாக உருகிவரும் அண்டார்டிக்கா

நாசாவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ், அண்டார்டிகா பகுதியில் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அண்டார்டிகாவில் வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளை கொண்டு இந்த ஆய்வின் முடிவு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வின் அதிர்ச்சி தகவல்

ஆய்வின் அதிர்ச்சி தகவல்

பிரான்சின் பரப்பளவில் சுமார் நான்கு மடங்குக்கும் அதிகமான அளவில் உள்ள பனிப்பாறைகளை, அண்டார்டிக்கா இழந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது. பனிப்பாறைகள் வழக்கத்தைவிட வேகமாக உருகி கடல் நீருடன் கலந்து வருகின்றது என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.

நாசா குழு ஆய்வின் முடிவு

நாசா குழு ஆய்வின் முடிவு

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணத்தினால் அண்டார்டிக் பனிப்பாறைகள் வேகமா கரைந்து கடலுக்குள் கலந்து வருகிறது. இந்த நிலையைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தலைகீழாக உடனே மாற்றம் செய்யவோ முடியாத நிலையே, இங்கு நிலவி வருவதாக நாசா குழு தெரிவித்துள்ளது.

கடலுக்குள் பாதி நகரங்கள் மூழ்கும்

கடலுக்குள் பாதி நகரங்கள் மூழ்கும்

அண்டார்டிக்காவின் த்வைட்ஸ் பனிப்பாறை, வேகமாக உருகி வருவதினால் உலகளவில் கடல்நீர் மட்டம் உடனடி உயரும் என்றும், இதனால் மிகப்பெரிய ஆபத்தைப் பூமி சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில் அடுத்த 50 ஆண்டுகளில் நிச்சயம் கடலுக்குள் பாதி நகரங்கள் மூழ்கும் என்று நாசா குழு அறிவித்துள்ளது.

50 செ.மீ கடல் மட்ட உயர்வு

50 செ.மீ கடல் மட்ட உயர்வு

அடுத்த 50 ஆண்டுகளில் நிச்சயம் 50 செ.மீ கடல் மட்ட உயர்வுக்கு வாய்ப்புள்ளது என்று நாசா அறிக்கை தெரிவிக்கிறது. இதனை உடனே மாற்றம் செய்ய உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பல கடலோர நகரங்கள் மூழ்கடிக்கப்படும்

பல கடலோர நகரங்கள் மூழ்கடிக்கப்படும்

மேற்கு அண்டார்டிக் பனிக்கட்டிகள் முழுமையாக உருகினால் இழப்பு அதிகமாக இருக்கும் என்றும், உலக கடல் மட்டம் சுமார் ஐந்து மீட்டர் அதாவது கிட்டத்தட்ட 16 அடி உயரத்திற்குக் கடல் நீர் மட்டம் உயரும் என்றும், மேலும் நிச்சயமாக உலகெங்கிலும் உள்ள பல கடலோர நகரங்கள் மூழ்கடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தில் மும்பை, சென்னை, கொச்சி

ஆபத்தில் மும்பை, சென்னை, கொச்சி

இந்நிலையைத் தடுத்து நிறுத்த நாம் விரைவில் ஏதாவது செய்யாவிட்டால், நமது சொந்த நகரங்களான மும்பை, சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் பிற அதிக மக்கள் தொகை கொண்ட கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கி அழியும் என்று ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

சிந்தித்து உடனே செய்லபடுங்கள்

சிந்தித்து உடனே செய்லபடுங்கள்

ஒருபுறம் பிளாஸ்டிக்கினால் உலகம் அழிகிறது, இன்னொருபுறம் வெப்பத்தினால் உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்த நிறுத்த அனைவரும் ஒன்றுபட்டு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Cities Like Mumbai & Chennai To Sink Under 50 Cm Of Water Due To Ice Melts In Antartica : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X