பூமியை நெருங்கும் கிறிஸ்துமஸ் வால் நட்சத்திர மழை.! எப்படி பார்ப்பது.!

|

கிறிஸ்துமஸ் பண்டிகை இப்பொழுதே களைக்கட்ட துவங்கியுள்ளது. அணைத்து வீடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டின் முன் நட்சத்திரங்கள் தோரணமாக கட்டப் பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே சிறப்பான, உண்மை நட்சத்திர வால் நட்சத்திர மழையை நீங்கள் இந்த வருடம் நேரில் பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம்

கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம்

இந்த வருடத்தின் ஒளிமிகு நட்சத்திரமான கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரத்தை நீங்கள் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் டிசம்பர் 16 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் பயணிக்குமென்று நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

46பி விர்டனேன் (46P/Wirtanen)

46பி விர்டனேன் (46P/Wirtanen)

இந்த கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் 46பி விர்டனேன் (46P/Wirtanen) என்று அழைக்கப்படுகிறது. கடந்த நான்கு நூற்றாண்டுகளில் பூமிக்கு மிக அருகில் தெரியும் பிரகாசமான நட்சத்திரமாக இந்த 46பி விர்டனேன் வால் நட்சத்திரம் திகழ்கிறது.

டிசம்பர் 16

டிசம்பர் 16

கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு டிசம்பர் 16 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜூபிடர் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாழ் நட்சத்திர இப்போதிருந்து மாத இறுதி வரை கிழக்கு அடிவானில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது.

டிசம்பர் 13 - நட்சத்திர மழையைக்

டிசம்பர் 13 - நட்சத்திர மழையைக்

இந்த மாதத்தில் 46பி விர்டனேன் வால் நட்சத்திரத்துடன் சேர்த்து, ஜெமினிட்ஸ் வாழ் நட்சத்திர மழையை நீங்கள் வானில் பார்க்கலாம். ஆனால் டிசம்பர் 13 ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 14 காலை வரை மட்டுமே இந்தப் பிரகாசமான நட்சத்திர மழையைக் காண முடியும்.

மணிக்கு 100 விண்கற்கள்

மணிக்கு 100 விண்கற்கள்

பூமிக்கு அருகில் டிசம்பர் மாதத்தில் கடந்து செல்லும் 3200 பாயேதான்(Phaethon) என்ற பெரிய விண்கல் பூமிக்குள் நுழையும் போது, மணிக்கு 100 விண்கற்கள் என வால் நட்சத்திர மழையாய் பூமியின் சுற்றுவட்டத்தினுள் நுழையும். இந்த நிகழ்வை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் மூலம் இந்த விண்கற்களைத் தெளிவாக பார்க்கலாம்.

வால் நட்சத்திர மழையைத் துல்லியமாக பார்ப்பதற்கான வழிமுறை:

வால் நட்சத்திர மழையைத் துல்லியமாக பார்ப்பதற்கான வழிமுறை:

- நிலவின் ஒளி இரவு 10.30 மணிக்கு மறையும் வரை காத்திருக்கவும்.

- நிலவில் ஒளி இருக்கும் நிலையால் வால் நட்சத்திரங்களை மங்கிய நிலையில் காணலாம்.
- நன்கு இருள் சூழ்ந்த இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
- 30 நிமிடத்திற்கு உங்கள் கண்களை இருளிற்குப் பழக்கி கொள்ளுங்கள்.
- முடிந்த வரை உங்களின் மொபைல் போன்களைப் பயன்படுத்தாதீர்கள்.
- நாளிரவு 2 மணி அளவில் வால் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- இரவு 2 மணி முதல் வால் நட்சத்திர மழை தெளிவாக தெரியும்.

Best Mobiles in India

English summary
Christmas Comet Will Be Brightest Comet of the Year : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X