விண்வெளியில் நீண்டகாலம் இருக்கும் பெண்மணி என்ற சாதனையை படைத்த கிறிஸ்டினா!

|

விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் கடந்த வருடம் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளனார். 2019 ஆம் ஆண்டில், இந்த அமெரிக்க பொறியாளர் இரண்டு சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

சாதனை

சாதனை

முதலாவது, அவர் தனது சக விண்வெளி வீராங்கனையான ஜெசிகா மீருடன் சேர்ந்து, பெண்கள் மட்டுமே இருந்த விண்வெளி நடைப்பயணம் என்ற சாதனையை செய்துள்ளார். இரண்டாவது, புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்தை செய்த பெண் என சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

 289 வது தொடர்ச்சியான நாளை விண்வெளியில் கழித்துள்ளார்

289 வது தொடர்ச்சியான நாளை விண்வெளியில் கழித்துள்ளார்

கடந்த சனிக்கிழமையன்று தனது 289 வது தொடர்ச்சியான நாளை விண்வெளியில் கழித்துள்ளார். முன்னர் 288 நாட்களில் சாதனை படைத்த ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்சனை விட கோச்சிற்கு வேறு யாரும் உற்சாகம் அளித்திருக்க முடியாது.

முன்னேற்றத்தின் அடையாளம்

"சாதனைகள் முறியடிப்பதற்காகவே படைக்கப்படுகின்றன. இது முன்னேற்றத்தின் அடையாளம்!" என்று பெக்கி விட்சன் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோச்சின் முதல் விண்வெளி நடையின் பயிற்சியில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய தனது முன்னோடிக்கு நன்றியை தெரிவித்தார் கோச்.

ஒரு கதாநாயகி

ஒரு கதாநாயகி

"பெக்கி என்னுடைய ஒரு கதாநாயகி. அவர் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டியவர். உங்களுக்குத் தெரியும் ... நாங்கள் இங்கு எத்தனை நாட்கள் இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, ஆனால் அந்த நாட்களில் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் சிறந்ததை கொடுக்க இது எனக்கு நினைவூட்டுகிறது." என்று கோச் அந்த பேட்டியில் கூறினார்.

12 நாட்கள் மட்டுமே குறைவு

12 நாட்கள் மட்டுமே குறைவு

மேலும் கோச் இன்னும் நிறைய நாட்கள் அங்கு தங்கவேண்டியுள்ளது . அவர் பிப்ரவரி 2020 வரை பூமிக்கு திரும்பத் திட்டமிடப்படவில்லை. அந்த நேரத்தில், அவர் மொத்தம் 328 நாட்கள் விண்வெளியில் கழித்திருப்பார். இது ஓய்வுபெற்ற விண்வெளி வீரர் மார்க் கெல்லியின் ஒரு அமெரிக்க விண்வெளி வீரருக்கான ஒற்றை விண்வெளிபயண சாதனையை விட வெறும் 12 நாட்கள் மட்டுமே குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசா

எல்லாம் திட்டமிட்டபடி சென்றால், கோச் சுற்றுப்பாதையில் இருந்த காலத்தில், ஆறு விண்வெளி நடைகளை முடித்து, தனது கேமராவை ஏராளாமான புகைப்படங்களுடன் நிரப்பது மட்டுமில்லாமல், நாசாவிற்கு ஏராளமான பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பார்.


அனைத்து நாசா விண்வெளி வீரர்களையும் ஒப்பிடும்போது, 665 நாட்கள், 22 மணிநேரம் மற்றும் 22 நிமிடங்களை விண்வெளியில் செலவழித்து மிக நீண்ட மொத்த நேரத்திற்கான அமெரிக்க சாதனையை இன்னமும் வைத்திருக்கும் விட்சனின் துணையாக இருப்பதற்கு பெருமைப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

விண்வெளி ஆய்வாளர்கள்

விண்வெளி ஆய்வாளர்கள்

வருங்கால விண்வெளி ஆய்வாளர்கள் தங்களை நினைவுபடுத்தும் நபர்களாக பார்க்க வேண்டும். ஏனென்றால் அந்த உத்வேகத்தை பூமிக்கு கொண்டு வருவார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக,இந்த மைல்கல்லுக்கான எனது முதல் நம்பிக்கை என்னவென்றால், விரைவில் இந்த சாதனை மீண்டும் முறியடிக்கப்படும் என்பதே. ஏனென்றால், நாங்கள் தொடர்ந்து எல்லைகளை விரிவுபடுத்துகிறோம்" என்கிறார் நம்பிக்கையுடன்.

Best Mobiles in India

English summary
Christina Koch Just Set a New Record For Longest Female Space Flight: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X