அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.! வைரல் வீடியோ.!

|

டெஸ்லா மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்குதடையின்றி இயங்கக்கூடிய தன்னியக்க கார்களை(autonomous cars) உருவாக்குவதில் தற்போது முனைப்பாக உள்ளன.

அறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.! வீடியோ.!

இதற்கிடையில் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று தானாக இயங்கும் சைக்கிள் உருவாக்கியுள்ளது மற்றும் அதைப்பற்றி குறைத்து கூறவேண்டுமென்றாலும் இந்த கண்டுபிடிப்பின் சாதனைகள் மிகவும் பிரம்மிக்கதக்கவை. இந்த மிதிவண்டியில் டியான்ஜிக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்

சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்

பெய்ஜிங் நகரில் உள்ள சிங்ஹுவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவால் இந்த தானியங்கி மிதிவண்டி உருவாக்கப்பட்டுள்ளது. குறும்படம் வாயிலாக இந்த தானியங்கி மிதிவண்டியின் திறன்கள் செயல்விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 குரல் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது

குரல் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது

தானாகவே சமநிலைபடுத்திக்கொள்ளும் இந்த மிதிவண்டியானது, தடைகளை தெளிவாக கடப்பது , குரல் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது மற்றும் குறிப்பிட்ட போக்குகள் பின்பற்றுவது போன்ற திறன்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.! இந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.!

கம்ப்யூட்டர் சிப்

கம்ப்யூட்டர் சிப்

தற்போதுவரை போதுமான அளவிற்கு சிறப்பாக செயல்படாத, கணக்கீடுகளை செய்ய இரு தனித்துவமான கட்டமைப்பு அணுகுமுறைகள் கொண்ட புரட்சிகரமான கம்ப்யூட்டர் சிப்-ஐ இந்த மிதிவண்டி கொண்டிருப்பதால் தான் இவையனைத்தையும் இதனால் செய்ய முடிகிறது. ஆனால் ஏன் சிப் சிறப்பாக செயல்பட இயலவில்லை?. ஏனெனில் இவ்விரு அமைப்புகளும் தங்களுக்குள் தொடர்புகொள்ள போதுமானதாக இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகளையும் சீன விஞ்ஞானிகள் சரிசெய்துவிட்டதாகவே தெரிகிறது.

மெசின் லேர்னிங்

மெசின் லேர்னிங்

தானியங்கி மிதிவண்டி என்பது தற்போது முதல்முறை இல்லையென்றாலும், இதில் பயன்படுத்தியுள்ள கம்ப்யூட்டர் சிப் கண்டிப்பாக புதியவரவு தான். டியான்ஜிக் என அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டர் சிப், கணினி அடிப்படையிலான மெசின் லேர்னிங்-ஐ மனித மூளை போன்ற வலையமைப்புடன் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் இந்த சிப் ஒரே நேரத்தில் சுதந்திரமாக பல செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கு உதவுகிறது.

சமநிலையை உருவாக்க முடிகிறது

சமநிலையை உருவாக்க முடிகிறது

இந்த சிப் அதன் வலையமைப்பிற்கு இடையேயான எளிதான தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதால், மிதிவண்டி அதன் பாதையில் உள்ள தடைகளைத் தவிர்த்து, வாய்மொழி கட்டளைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதுடன் சைக்கிள் சமநிலையை உருவாக்க முடிகிறது.

தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்!தப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்!

ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இது குறித்து கூறுகையில்...

சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் மூளை கணினியியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இது குறித்து கூறுகையில் ,' வெறும் ஒரு சிப்-ஐ பயன்படுத்தி ஆளில்லா மிதிவண்டி அமைப்பில், நேர்த்தியான வழிமுறைகள் மற்றும் மாதிரிகளை ஒரே நேரத்தில் செயல்விளக்கமளிக்க எங்களால் முடியும். மேலும் நிகழ்நேர தடை கண்டறிதல், குரல் கட்டுப்பாடு, தடைகள் தவிர்த்தல், மற்றும் சமநிலை கட்டுப்பாடு ஆகியவற்றையும் உணர முடியும். பொதுவான வன்பொருள் தளங்களுக்கு வழிவகுப்பதன் மூலம், AGI வளர்ச்சியை தூண்ட முடியும் என எங்களது ஆய்வு எதிர்பார்க்கிறது' என தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Chinese Researchers build hybrid chip able to run autonomous bicycle more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X