தீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..!

|

தென் சீனக் கடலில் 80 சதவீதம் (அதாவது கிட்டத்தட்ட இந்திய தேசம் அளவியிலான கடல் பகுதி) சீனாவின் 'வரலாற்று உரிமை' என்ற சீனாவின் கூற்றுக்களை நிராகரித்து மத்யஸ்தத்திற்கான நிரந்தர நீதிமன்றம் (Permanent Court of Arbitration - PCA) தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து சீனா டிஹென் கடல் மீது தனக்குள்ள ஆக்கிரமிப்பையும் வெறியையும் காட்டும் நோக்கத்தில் தனது முகமூடியை கழட்டியுள்ளது..!

அழைப்பு :

அழைப்பு :

சீன பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் இறையாண்மையை பேணிக்காக்கவும் "கடலில் போருக்கு" அழைப்பு விடுத்து எச்சரித்துள்ளார்.

நீண்ட தூர ஏவுகணைகள் :

நீண்ட தூர ஏவுகணைகள் :

உடன் சீன இராணுவமானது தனது நீண்ட தூர ஏவுகணைகள் (long-range missiles) உட்பட புதிய ஆயுதங்களின் எல்லையை வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது.

தென் சீன கடல் :

தென் சீன கடல் :

சர்வதேச நீதிமன்றம் கிட்டத்தட்ட அனைத்து தென் சீன கடல் பகுதியிலும் பெய்ஜிங்கின் உரிமைகளை நிராகரித்து விட தன் ஆயுதங்களை அரசு தொலைக்காட்சியில் வெளிப்படையாய் காட்சிப் படுத்தியுள்ளது சீனா..!

தற்காப்பு ஆயுதங்கள் ;

தற்காப்பு ஆயுதங்கள் ;

சீனா மாநில ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட தற்காப்பு ஆயுதங்கள் அனைத்துமே 1500 கிமீ தொலைவில் இலக்கை அடையக்கூடிய நடுத்தர அளவிலான குறுகிய ஏவுகணைகள் ஆகும்.

டிஎப்-16 :

டிஎப்-16 :

சீனா 1000 கி.மீ இலக்கு எல்லை கொண்ட டிஎஃப்-16 ஏவுகணையை கையாளும் துருப்பு காட்சிகளை மாநில ஒளிபரப்பு சிசிடிவி காட்டியுள்ளது.

முதன்முதலில் :

முதன்முதலில் :

டிஎஃப்-16 ஏவுகணையானது இரண்டாவது உலகப் போரின் முடிவின் 70-வது ஆண்டு நிறைவை ஒட்டிய இராணுவ அணிவகுப்பில், கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி முதன்முதலில் காட்சிப் படுத்தப்பட்டது.

ஒகினாவா  :

ஒகினாவா :

டிஎஃப்-16 ஏவுகணையானது, அமெரிக்காவின் ஒகினாவா இராணுவத் தளங்களை தாக்கும் அளவு வல்லமை கொண்டவைகளாகும்.

யுக்தி :

யுக்தி :

ஆக சீனா இதுவரையிலாக பயன்படுத்திய ஆயுதங்கள் எல்லாமே அமெரிக்காவை எச்சரிக்கும் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடுக்கும் யுக்தி தான் என்பதும் இதுதான் நிஜமான சீனாவின் முகம் என்பதும் புரிய வருகிறது.

 வெளிப்படை :

வெளிப்படை :

மத்யஸ்தத்திற்கான நிரந்தர நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது என்பது மறுபக்கம் சீனாவின் இந்த வெளிப்படையான ஆயுத காட்சிப்படுத்தலுக்கு பிலிப்பைன்ஸ் ஆதரவு அழித்துத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தல்கள் :

அச்சுறுத்தல்கள் :

மறுபக்கம் குறிப்பாக கடலில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் ஆனது தேசிய பாதுகாப்பு நிலைமையின் தீவிரத்தை அங்கீகரிக்கும் விடயம் என்று சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் :

பொதுமக்கள் :

இராணுவ தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு தயாராக இருக்க வேண்டும், உடன் பொதுமக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்பு கல்வி ஊக்குவிக்க வேண்டும் என்ற கருத்தும் சீனாவில் மேலோங்கியுள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமெரிக்க உயிர்கொல்லி ஆயுதங்களுக்கு 'அலையும்' ரஷ்யா..!


அமெரிக்காவின் அடுத்த அதிரடி : 150 கிலோவாட் சக்தியில் உருவாகிறது..!


சா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..??

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Chinese military unveils new weapons after South China Sea verdict. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X