நிலவின் மறுபக்கத்தில் தடம்பதித்த சீனாவின் யூடூ 2 ரோவர்...

யூடூ 2 மற்றும் அதன் லேண்டர் இணை ஒன்றாக சேர்ந்து நிலவின் மறுபக்கத்தில் முதல் ஆழ்ந்த அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.

|

சீனாவின் ரோபோடிக் சேன்ஜ்4 லேன்டர் ரோவர் டுயோ கடந்த ஜனவரி 2அன்று, பெரிதும் ஆராயப்படாத நிலவின் மறுபக்கத்தில் முதல்முறையாக தடம்பதித்துள்ளது. ஜனவரி 3 அன்று, நிலையான லேண்டரின் உச்சியில் உள்ள இரட்டை ரேம்ப்களின் முந்தைய நிலையில் இருந்து மாற்றி, 115 மைல்(186கிலோமீட்டர்) நீளமுள்ள வோன் கார்மன் பள்ளத்தின் சாம்பல் நிற பரப்பில் பயணித்துள்ளது இந்த ரோவர்.

நிலவின் மறுபக்கத்தில் தடம்பதித்த சீனாவின் யூடூ 2 ரோவர்...

மேலும் இன்று "யூடூ 2" என இந்த ரோவரின் பெயரையும் வெளியிட்டுள்ளது சீனா. உண்மையான யூடூ ரோவர் லேண்டருடன், சேன்ஜ்3 திட்டத்தின் கீழ் டிசம்பர் 2013லிலேயே நிலவின் அருகாமை பக்கத்தில் தரையிறங்கியது. சேன்ஜ்3 திட்டத்தின் மாற்றுத்திட்டமாக இந்த சேன்ஜ்4 வடிவமைக்கப்பட்டதால், இவையிரண்டிலும் பல பொதுவான பாகங்கள் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளன.

யூடூ 2 மற்றும் அதன் லேண்டர்

யூடூ 2 மற்றும் அதன் லேண்டர்

யூடூ 2 மற்றும் அதன் லேண்டர் இணை ஒன்றாக சேர்ந்து நிலவின் மறுபக்கத்தில் முதல் ஆழ்ந்த அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு விண்கலத்தில் உள்ள 4 அறிவியல் உபகரணங்கள் மூலம் வோன் கார்மனின் நிலப்பரப்பை வேண்டும் விரிவாக ஆராயவுள்ளது. 1550மைல்(2500கிலோமீட்டர்) நீளமுள்ள தென் துருவ அட்கின் பேசினில் இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆராயவில்லை

நிலவின் மறுபக்கத்தை ஆராயவில்லை

இந்த லேண்டரில் சில உயிரியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்காக பட்டுப்புழுவின் முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட சில தாவரங்கள் விதைகளும் சிறு டின்னில் வைக்கப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புவிசையுள்ள நிலவு பரப்பில் எப்படி இவை வளர்கின்றன என ஆராயவுள்ளனர் இந்த திட்டத்தின் உறுப்பினர்கள்.

இந்த லேண்டர் மற்றும் யூடூ2 ரோவர் பூமியை நோக்கி இல்லாமல் தூரத்தில் இருப்பதால் நேரடியாக தகவல்களை இங்கு அனுப்பமுடியாது. இந்த தொலைத்தொடர்பு பிரச்சனைகள் காரணமாகவே இதுவரை எந்தவொரு விண்கலனும் நிலவின் மறுபக்கத்தை ஆராயவில்லை.

முயலின் பெயர்

முயலின் பெயர்

எனவே இந்த சேன்ஜ்4 டியோ திட்டமானது, மே 2018ல் நிலையான ஈர்ப்புவிசையுள்ள புள்ளியில் செலுத்தப்பட்ட சீன செயற்கைகோளான "Queqiao"ஐ சார்ந்துள்ளது. இந்த சேட்டிலைட்டின் பெயர் சீன நம்பிக்கையின் படி நிலவு கடவுளின் பெயராகும். யூடூ என்பது சேன்ஜ்ல் உள்ள செல்லப்பிராணி முயலின் பெயர் ஆகும்.

சேன்ஜ் 1 மற்றும் சேன்ஜ் 2

சேன்ஜ் 1 மற்றும் சேன்ஜ் 2

சேன்ஜ் 1 மற்றும் சேன்ஜ் 2 மிஷன்கள் முறையே 2007 மற்றும் 2010ல் நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 2013ல் சேன்ஜ்3 திட்டத்தில் நிலவின் அருகாமை பக்கத்தில் விண்கலம் தரையிறங்கியது.

சேன்ஜ்5

சேன்ஜ்5

பின்னர் அக்டோபர் 2014ல், சேன்ஜ் 5T1 திட்டத்தில் செலுத்தப்பட்ட கேப்சூல் நிலவை சுற்றி 8 நாட்கள் பயணம் செய்தது. பூமிக்கு திரும்பி வரும் மிஷனின் தொழில்நுட்பத்தை உறுதிசெய்வது சேன்ஜ்5 ன் முக்கிய நோக்கமாக இருந்தது.

Best Mobiles in India

English summary
China's Yutu 2 Rover Is Driving on the Far Side of the Moon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X