கட்டுப்பாட்டை இழந்தது தியேன்குங்-1, எந்த நிமிடத்திலும் பூமியோடு மோதலாம்.!?

Written By:

தியேன்குங்-1 (Tiangong-1) என்பது சீனக் குடியரசின் முதலாவது விண்வெளி ஆய்வுகூடமாகும். லாங் மார்ச் 2எப்/ஜி என்ற ஏவுகலன் மூலம் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி ஏவப்பட்ட இதன் நோக்கம் நிரந்தரமான ஆட்களுடன் கூடிய விண்வெளி நிலையம் ஒன்றை 2020 ஆம் ஆண்டுக்குள் அமைப்பது தான்..!

சீனாவின் அந்த கனவு நோக்கம் வீணாய் போனது மட்டுமின்றி தற்போது கைமீறி போய்விட்டது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 கேள்விக்குறி :

கேள்விக்குறி :

சீனாவின் தியேன்குங்-1 விண்வெளி நிலையத்தின் நிரந்தரத்தன்மை இப்போது கேள்விக்குறியாகி விட்டது.

விண்கல் போல :

விண்கல் போல :

அதாவது உண்மையில் தியேன்குங்-1 விண்வெளி நிலையமானது பூமியை நோக்கி வீசியெறியப்படும் ஒரு விண்கல் போல செயல்பட இருக்கிறது.

எட்டு டன் எடை :

எட்டு டன் எடை :

ஆளில்லாத எட்டு டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் எந்த நேரத்தில் எங்கே விழுந்து நொறுங்கும் என்ற எந்தவிதமான அதிகார்ப்பூர்வமான தகவலையும் சீன அதிகாரிகள் வழங்கவில்லை.

உறுதி :

உறுதி :

ஆகமொத்தம் ஒரு ஆபத்தான மற்றும் கட்டுப்பாடற்ற வீழ்ச்சியில் தான் இது முடிவடையும் என்பது நாளுக்கு நாள் உறுதியாகிக்கொண்டே போகின்றது.

பீதி :

பீதி :

இந்த விண்வெளி நிலையம் பெருங்கடலில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விபத்தில் இறங்கும்படியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பேசிய ஒரு வானவியலாளரின் கூற்றுப்படி அது எந்த நேரத்தில் செயலிழக்க முடியும் என்ற பீதி கிளம்பியுள்ளது.

விபத்து :

விபத்து :

அதாவது பூமியின் வளிமண்டலத்திற்குள் மறு நுழைவானது உமிழும்படியாக, உருகிய உலோகமாகி ஒரு கட்டுப்பாடற்ற விபத்துக்குளாகும் தரையிறக்கம் நிகழுமாம்..!

சிக்கல் :

சிக்கல் :

இதற்கிடையே ஆரம்பகால செயற்கைக்கோள் ஆய்வாளரான தாமஸ் டோர்மன் தொலைநோக்கிகள் மற்றும் கேமராக்கள் பயன்படுத்தி கட்டுப்பாடை இழந்த செயற்கைக்கோளை பின்தொடர்ந்து சாதனத்திலுள்ள சிக்கலை கண்டதாக கூறியுள்ளார்.

கடைசி நிமிடம் :

கடைசி நிமிடம் :

தன் கணிப்பு சரியென்றால் "சீனா தனது விண்வெளி நிலையத்தில் ஒரு பிரச்சினை உள்ளது என்பதை உலகிற்கு தெரியப்படுத்த கடைசி நிமிடம் வரை காத்திருக்கும்" என்று தாமஸ் டோர்மன் கூறியுள்ளார்.

முரண்பாடுகள் :

முரண்பாடுகள் :

விண்வெளி நிலையத்தின் துண்டுகள் மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் விழுந்தால் நிச்சயமாக அதுவொரு கெட்ட நாளாகத்தான் இருக்க முடியும். ஆனால் முரண்பாடுகள் அது கடலில் அல்லது மக்கள் வசிக்காத வேறொரு இடத்தில் தரையிறங்கும் என்று தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய அச்சுறுத்தல் :

மிகப்பெரிய அச்சுறுத்தல் :

அனைத்தைக்காட்டிலும் இதைப்பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் சீனா வழங்கவில்லை என்பது தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

மூத்த ஆராய்ச்சியாளர் :

மூத்த ஆராய்ச்சியாளர் :

தியேன்குங்-1 கட்டிபாடின் கீழ் பூமி வட்ட பாதைக்குள் நுழையும் என்பது போல தெரியவில்லை என்று ஆசிய ஆய்வுகள் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டீன் செங் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நாசாவின் சமீபத்திய சந்திர புகைப்படங்கள் போலியாக தோன்றுவது ஏன்..?!


சீனாவின் 'மண்ணெண்ணெய்' லாங் மார்ச் 7 : உறைந்துப்போன நாசா..!


பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் 2 பாரிய கட்டமைப்புகள்..!? எப்படி ?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : ராய்ட்டர்ஸ்

English summary
China's First Space Station Is 'Out Of Control', And Could Crash Into Earth Any Minute. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்