அப்போது சூரியன்-இப்போது நிலவு: செயற்கை நிலவை வெற்றிகரமாக உருவாக்கிய சீனா.! முழு விவரம்.!

|

சீனா விண்வெளி ஆய்வில் வேகமாக முன்னேறி வருகிறது என்றதான் கூறவேண்டும். இந்நிலையில் ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை எளிதாக மேற்கொள்ள சிறிய செயற்கை நிலவை சீனா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இறங்கி மண் பரிசோதனைகளையும் மேற்கொண்டு

அதாவது மின் செலவை குறைக்க ஏற்கனவே செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது சீனா. இதுதவிர விண்வெளியில் தனி ஆய்வுக்
கூடத்தை அமைக்கிறது சீனா. அதேபோல் நிலவில் இறங்கி மண் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்த நாடு.

BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..BSNL: தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு கம்மி விலையில் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

 உலகின் முதன் முறையாக

இந்நிலையில் உலகின் முதன் முறையாக செயற்கை நிலவை உருவாக்கியுள்ளது சீனா. அதாவதுஇந்த திட்டத்தின் தலைவரும்,சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் கூறியது என்னவென்றால்.வின்வெளி திட்டங்களை சோதிக்கவும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த செயற்கை நிலவு
உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

வேறலெவல் லுக்: ரெனோ க்ளோ வடிவமைப்போடு ஒப்போ ரெனோ 6 லைட்- 48எம்பி கேமரா, 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 662 வசதி!வேறலெவல் லுக்: ரெனோ க்ளோ வடிவமைப்போடு ஒப்போ ரெனோ 6 லைட்- 48எம்பி கேமரா, 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 662 வசதி!

விண்வெளி வீரர்களை நிலவில்

குறிப்பாக இந்த செயற்கை நிலவைக்கொண்டு, நிலவில் 3டி பிரிண்டிங் மூலம் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியுமா என்பதுகுறித்தும் சீனா சோதிக்கவுள்ளது. மேலும் வரும் 2030-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்கச் சீனாதிட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..வங்கியில் எளிதாக கடன் வாங்க வேண்டுமா? அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஆன்லைன் CIBIL ஸ்கோர் செக்..

 குறைந்த மண

குறிப்பாக 2அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில் ஒரிஜனல் நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல்,கற்கள், தூசிகள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்துவிடும். ஆனால் சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என்று கூறினார் விஞ்ஞானி லி ருய்லின்.

உஷார்: ஆர்டர் செய்தது ஸ்மார்ட் வாட்ச்., வந்தது தண்ணீர் நிரப்பப்பட்ட காண்டம்- கூடவே இருந்த இன்னொரு பொருள் வேற!உஷார்: ஆர்டர் செய்தது ஸ்மார்ட் வாட்ச்., வந்தது தண்ணீர் நிரப்பப்பட்ட காண்டம்- கூடவே இருந்த இன்னொரு பொருள் வேற!

தரையிறங்கியது அந்த விண்கலம்.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நிலவின் தரைப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சீனா விண்கலம் கணடறிந்துள்ளதாகதகவல் வெளிவந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. குறிப்பாக நிலவின் மத்திய உயர் அட்சரேகை பகுதியில் தரையிறங்கியது அந்த விண்கலம்.

இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற முதல் பெண்- உலகப் புகழ்., அப்படி என்ன செய்தார் தெரியுமா?இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற முதல் பெண்- உலகப் புகழ்., அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய

குறிப்பாக அட்சரேகை பகுதியில் தரையிறங்கிய சாங்கே-5 விண்கலத்தின் லேண்டரில் உள்ள ஒரு கருவி தரைப்பரப்பில் உள்ள பாறையின் நிறமாலை பிரதிபலிப்பை அந்த இடத்திலேயே அளந்தது. அதன்பின்னர் சுமார் 1,731 கிராம் எடையிலான பாறை மாதிரியுடன் விண்கலம் பூமிக்கு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்கலம் கொண்டுவந்த அந்தப் பாறை மாதிரியை சீன அறிவியல்அகாதெமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர் அந்த முடிவுகள் சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் விலை: 6ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன்- கூடவே இயர்பட்ஸ் இலவசம்!பட்ஜெட் விலை: 6ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன்- கூடவே இயர்பட்ஸ் இலவசம்!

அட்வான்சஸ் இதழில் வெளிவந்

சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளிவந்த தகவலின்படி, நிலவின் தரைப்பரப்பில் உள்ள பாறைப் படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு காரணம் சூரிய காற்று ஆகும்.
குறிப்பாக இதுதான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
China successfully builds artificial moon Full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X