சீனாவின் லாங் மார்ச்-5 Y4: உலகம் எதிர்பார்க்கும் அடுத்த சாஃப்ட் லேண்டிங்காக இருக்கும்! ஏன் தெரியுமா?
சந்திரயான் 2 திட்டத்தின் சாஃப்ட் லேண்டிங்கை உலகமே எதிர் பார்த்துக் காத்திருந்தது போல, அடுத்து சீனாவின் லாங் மார்ச்-5 Y4 என்ற விண்கலத்தின் சாஃப்ட் லேண்டிங்கை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் சீனா இந்த ராக்கெட்டை முதல் முறையாகச் செவ்வாய்க் கிரகத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்யவுள்ளது.

சீன நாட்டின் லாங் மார்ச்-5 Y4 ராக்கெட்
சீன நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான China Aerospace Science and Technology Corporation (CASC), லாங் மார்ச்-5 Y4 என்ற ராக்கெட்டை செவ்வாய்க் கிரகம் நோக்கி விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா , இந்தியா போன்ற நாடுகள் ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் ஆராய்ச்சி செய்ய புதிய செயற்கைகோள்
இந்த வரிசையில் சீனாவும் தற்பொழுது செவ்வாய் கிரகம் நோக்கி களமிறங்கியுள்ளது. சீனாவும் தங்களுடைய புதிய செயற்கை கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது. ஆனால் பிற நாடுகளை போல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையிலிருந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளாமல், முதல் முறையாகச் சீனா செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அதன் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது என்று அறிவித்துள்ளது.

விண்ணில் பாய தயாராகும் சீனாவின் செயற்கைகோள்
சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பின்படி, ஜூலை மாதம் 2020-ல், அதன் செயற்கைக் கோளை செவ்வாயைக் கண்காணிக்கும் வகையில் அதன் சுற்றுவட்டப் பாதையில் ஒரு ஆர்பிட்டர் செயற்கை கோளையும், செவ்வாயில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஒரு ரோவரையும் அனுப்ப உள்ளதென்று உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

சாஃப்ட் லேண்டிங்கிரகண சோதனை
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் இந்த லாங் மார்ச்-5 Y4 ராக்கெட்டிற்கான பல்வேறு சோதனைகளை சீனா மும்முராக செய்துவருகிறது. சமீபத்தில் இதன் எஞ்சினின் பர்ஃபார்மென்ஸ் சோதனை நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாஃப்ட் லேண்டிங்கிரகண சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து முடிந்ததா என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

உலகம் எதிர்பார்க்கும் அடுத்த சாஃப்ட் லேண்டிங்
ஆகையால் செவ்வாய் கிரகத்தில், சீனாவின் செயற்கைக்கோள் எவ்விதமான சவால்களை எதிர் கொள்ளும் என்பது உறுதிப்படத் தெரியவில்லை. இருப்பினும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஈர்ப்பு விசை, பூமியில் இருக்கும் ஈர்ப்பு விசையை காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு தான் என்பதனால், செவ்வாயில் சீனாவின் ரோவர் சாஃப்ட் லேண்டிங்காவது ஒரு மிகப் பெரிய சவாலான காரியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications